பட்டிமன்றம் - 34 : தொடர்கதையா?சிறுகதையா?

காத்திருந்து யாரும் நடுவரா வராம பட்டி துவங்காம இருந்த காரணத்தால் நானே துவங்குறேன். வாதிட கண்டிப்பா வந்துடுவீங்கன்னு நம்பறேன். :) ஏமாற்றாம வந்துடுங்க. நம்ம தலைப்பி :

சிறந்தது எது? தொடர்கதையா?சிறுகதையா?

சூப்பரான தலைப்பை தந்த பவித்ரா'கு மிக்க நன்றி.

இதில் கதை புத்தகம், டிவி சீரியல் என எல்லாமே அடங்கும். மற்ற பட்டியின் விதிமுறைகள் இதுக்கும் பொறுந்தும்.

ஜெயலக்ஷ்மி... முடிவு பண்ணிட்டீங்களா... உங்களுக்காக ஒரு நாள் கூடவா காத்திருக்க மாட்டேன்... ;) வாங்க இன்று.

அஸ்வதா.... வாங்க வாங்க. சிறுகதை'னு அழௌத்தமா வாதத்தோட வாங்க. காத்திருக்கோம். :) மிக்க நன்றி.

ருக்சனா... காலையில் பார்க்கிறேன்... பில்டர் காப்பியோட சூடா இட்லி கூட கொடுக்கறேன். சீக்கிரம் வாதத்தோடு வாங்க :)

யோகலக்ஷ்மி.... நான் காத்திருக்கலாம் மாட்டேன், குழப்பமே இல்லை, சிறுகதை தான்னு முதல்லயே வாதத்தோடு வந்திருக்கீங்க. நல்ல கதைன்றது திருக்குறல் மாதிரி சின்னதா நச்சுன்னு இருக்கும்'னு சொல்றீங்க. கலக்கல். இன்னும் எதிர் அணிக்கு தான் ஆளில்லை. :(

ஸ்ரீ.... நீங்களும் சிறுகதை பக்கம் தானா??? எல்லா புலிகளும் சிறுகதை பக்கம் போயிட்டீங்களே.... மிக்க நன்றி. வாதத்தோடு வாங்க.

எங்கே தோழிகள் எல்லாம்.... வழக்கமான பட்டியின் வாதப்புலிகள் எங்கே??? வாங்க எல்லாரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிரந்தது சிருகதையே....................
சிருகதைகளை படிக்கவே ஸ்வார்ஸ்யமா இருக்கும் ஆனா இந்த தொடர்கதை இருக்கே அய்யோ இழுத்துட்டு போகும் போகும் பாம்பே டெல்லி அப்படின்னு ஊரே சுத்தும் அதுமட்டுமில்ல விட்டா வேற்று கிரகம் போய்ட்டு வந்தா கூட ஒரு முடிவுக்கு வராது
சிருகதை என்ராலே கதை கரு இருக்கும் அர்புதமான கருவைகொண்டு தெளிவா எழுதி இருப்பாங்க 10நிமிடம் படிச்சு முடிச்சுட்டு அதுல இருக்கும் தகவலும் புரிந்து இருக்கும் நாமலும் ஒரு புது புத்துன்ர்ச்சியுடனும் இருப்போம் ஆனா இந்த தொடர்கதை இருக்கு பாருங்க ஒரு நாள் அந்த புக்கோ இல்ல ஏதோ ஒரு காரனத்தால படிக்காம விட்டா அவ்லோ தான் அந்த நாள் முழுக்க டென்ஷன் யாரபாத்தாலும் எரிந்து விழுந்துகொண்டு இருப்பாங்க புலம்பி தள்ளுவாங்க பாருங்க கேக்கவே முடியாது காது கொடுத்து இவ்லோ டென்ஷன் மன பாதிப்பு எதுக்கு ரிலாக்சா இருந்துட்டு போரத விட்டுட்டு
நடுவருக்கு இப்பவே புரிந்துஇருக்கும்ன்னு நினைக்கிரேன்

அன்புடன்
ஸ்ரீ

நடுவரே, வாழ்த்துக்கள். நான் தொடர்கதை பக்கம் பேச விரும்புகிறேன்.

சிறுகதை என்பது பாக்கு கடிக்கும் நேரத்திற்குள் படித்து முடித்து விடலாம். புஸ்ஸென காற்று போன பலூன் போல ஆகிவிடும். ஆனால் தொடர்கதை அப்படியல்ல ஒரு பெரிய பாக்கெட்டில் வறுத்த வேர்கடலை வச்சுட்டு படிக்க படிக்க ஆஹா..ஆஹா என்ன சுகம்... என்ன சுகம்... கடலை டேஸ்டா? படிக்கும் கதையின் கரு டேஸ்டான்னு கண்டு பிடிக்கவே முடியாது. அந்த ஒரு அம்சம் தொடர்கதையில் தான் உள்ளது.

தொடர்கதையின் கல்கி,பிரம்மாக்கள்,ஜாம்பாவான்கள் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார்,தேவிபாலா, சுபா, ரமணிசந்திரன் மற்றும் பல எழுத்தாளர்களை மக்கள் மறந்திருப்பார்களா? மறக்கத்தான் முடியுமா? மக்களின் நினைவில் இன்றும் அவர்களை நிற்கச்செய்யும் மந்திர சக்தி எது? தொடர்கதைகள் தானே.கல்கி அவர்களின் காலத்தால் அழியாத படைப்புகள் பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு,அலை ஓசை,சோலை மலை இளவரசி போன்ற காவியங்களை நாம் படித்து ஒருமுறையில் திருப்தி அடைந்திருப்போமா? படிக்க படிக்க சலிக்காத அற்புத காவியங்கள் அல்லவா அவை. உயிரோட்டமுள்ள அந்த படைப்புகள் தொடர்கதையாக இருந்து வெற்றி அடைய வில்லையா? எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களின் மிதிலா விலாஸ் கதை என்னும் குடும்பத்தில் எத்தனை பேர் ஆத்மார்த்தமாக வாழ்ந்திருப்பார்கள்.

தொடர் சீரியல்களில் சித்தியையும்,மெட்டி ஒலியையும் நம்மவர்கள் மறந்திருக்க முடியுமா? ஆறிலிருந்து அறுபது வரை மேற்கண்ட சீரியல் போடும் நேரங்களை கடவுளுக்கு கூட ஒதுக்காமல் டீவி முன்பு அமர்ந்திருந்ததை நாம் கண்டதில்லையா?இந்த சீரியல்களை காணவே அலுவலகத்திலிருந்து அடித்து பிடித்து வீடு வந்து சேரும் ஆண்களை கண்டதில்லையா?

சிறுகதைகள் சிற்றின்பம் போல சில மணித்துளிகளுக்கு மட்டுமே இன்பம் தரும். தொடர்கதை பேரின்பம் போன்றது. காலத்திற்கும் அவற்றை படித்த இன்பம், மகிழ்ச்சி மனதிற்குள்ளேயே தேங்கி கிடக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தாமதமாக வந்ததர்க்கு நடுவர் என்னை நூறு தோப்புகரணம் போட சொல்லியிருக்கிறார் (((ஹி ஹி ஹி சும்மா)) அதனால் தோழிகள் சரியாக வந்து விடுங்கள்..
எனதணி தோழியின் வாதங்கள் சூப்பர் வாழ்த்துக்கள்..

எனது வாதம் தொடர்கதையே..

தொடர்கதைக்கு உள்ள மவுசு இன்னும் குறையவில்லை என்பதற்க்கு வெளியாகும் மாத நாவல்களும் , இன்னும் காலை முதல் இரவு வரை ஓடும் டிவி மெகா தொடர்களுமே இதர்க்கு சாட்சி நடுவரே..
ஒரு பாகத்தை படித்துவிட்டு அடுத்தபாகம் எப்போவரும் என்று காத்திருப்பதில் இருக்கும் சுகமே தனி நடுவரே..

சிறுகதை என்று சொல்கிறவர்கள் எல்லாம் நமது அறுசுவையிலே தனி இழையில் கேட்கிறார்கள் ரமணிச்சந்திரன் நாவலின் லின்கை இப்போ தெரியுதா தொடர்கதைகளின் மகிமை ....

மேலும் வைரமுத்து அவர்களின் கருவாச்சி காவியத்தை யாராலும் மறக்கமுடியுமா.
அவரின் தண்ணீர் தேசம் தொடர்கதை அதை யாராலும் மறக்கமுடியுமா கடலை பற்றிய நமக்கு தெரியாத எத்தனை விசயங்களை இந்த நாவல் சொல்கிறது தெரியுமா..

பொழுதுபோக்கிர்க்காக படிக்கிறோம் என்று சொல்லமுடியாது நமக்கு தெரியாத விசயங்களையும் இந்த தொடர்கதைகளில் தருகிறார்கள் ..

அதனால் என்னுடைய வாதம் தொடர்கதைகளே... தொடர்கதைகளே..

வாழு, வாழவிடு..

நடுவரே

நல்ல தலைப்பு..வாழ்த்துக்கள்.. நான் தொடர்கதை பக்கம் பேச விரும்புகிறேன்.. தொடர்கதையில் இருக்கும் விறுவிறுப்பும், தவிப்பும் சிறுகதைக்கு இல்லை.. நம்மை காக்க வைத்து படிக்க வைப்பதில் தொடர்கதைக்கு நிகர் தொடர்கதையே..

நம்ம கதையே ஒரு ரெண்டு வாட்டி மிஸ் பண்ணிட்டு அப்றம் தொடர்கதையை குறை சொல்வது ;)

எந்த ஒரு கதையின் சாராம்சத்தையும் ஒரு சிறு கதையில் சொல்லலாம் தான்.. ஆனால் அதில் உள்ள சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுனி புல் மேய்வதைப் போல் அல்லாமல் தெளிவாக நயம்பட எடுத்துரைப்பது தொடர்கதை தான் நடுவரே.. ரசித்துப் படித்தால் தானே தெரியும்.. ரிலாக்ஸ் செய்யதான் கதை படிக்கிறோம்.. இதுலேயும் என்ன அவசரம் ஃபார்ஸ்ட் ஃபுட்டு காலம்ன்னுட்டு.. ;)..

பல சிறுகதைகளுக்கான புத்தகம் இருந்தாலும் எத்தனையோ நாவல்களுக்கு வாடிக்கையாளர்கள் இப்பவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. படித்தவை ரசித்தவை படித்தால் தெரியும் நடுவரே..

அத்தனை திறமை வாய்ந்த எழுத்தாளர்களின் எழுத்தின் சுவையில் மூழ்கி இன்னும் கதை நீளாதா? என எதிர்ப்பார்த்து, படித்த நாவலையே இன்னொரு முறை படிக்கும் ரசிகர்களே இதற்கு சாட்சி..

எழுத்தாளர்கள் இறந்தாலும் அவர்களின் முத்தான எழுத்துக்களால் இன்னமும் வாழ்கிறார்கள்.. எதார்த்தமான அன்றாட வாழ்க்கையை சுவைப்பட தொடர்கதையாக நமக்கு அளித்துள்ளனர்.. அந்த தொடர்கதைகளை படிக்கும் வாய்ப்பு இந்த சமூகத்திற்கு இல்லாமல் போனது கண்டு வருத்தம் தான்..

தொடர்கதையும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கும் தவிர சம்ஸ்கிருதத்திலேயோ இல்லை ஃபிரஞ்சுலேயோ இருக்காது.(தமிழர்களுக்கு). எதிரணியினர் சும்மா சிறுகதைதான் புரியறா மாதிரி இருக்கும்னு
சொல்லிட்டே இருக்கறதை சொன்னேன்.. ;)

ஒரு பகுதி விட்டா டென்ஷன் ஆகி பிறரிடம் எரிந்து விழுவார்களாம்.. அதற்கு பெயர் பிபி நடுவரே.. நல்ல டாக்டரை பார்த்தால் சரியாகும்.. ;)..

சிறுகதை வானில் நட்சத்திரங்கள் என்றால் தொடர்கதை நிலா போன்றது.. சின்ன சின்ன விழிகளால் நட்சத்திரம் அழகை கொடுத்தாலும்.. அழகான நிலாவிற்கு நிகர் ஏது.. அமாவாசையும், பௌர்ணமியும் வர நாம் எதிர்ப்பார்த்து காத்திருப்போம் இல்லையா?

எனவே தொடர்கதையே சுவாரஸ்யமானது..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சிறுகதையே சிறந்தது

ஆணித்தரமான வாதம்.அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகள். அசைக்கமுடியாத கருத்துகள்!

யாருப்பா அடுத்து வரப்போவது? வாங்க!!

என்ன பார்க்கின்றீர்கள் நான் எந்த அணி என்றுதானே கேட்கின்றீர்கள்.வெற்றி பெறப் போகும் அணிதான் எனது அணி....(தமாசுக்கு) பட்டிக்கு ஒவ்வொரு நாளும் சமுகம் கொடுப்பேன்.ஆனால் வாதிடுவதற்கு நேரமில்லாமல் இருக்கின்றது.மன்னிக்கணும் வனி.

பட்டி மன்ற நடுவரைக் காணோமே!...

வந்து, தன் கருத்தை பதிவு செய்து, அடுத்த கட்சியினரை வாதத்தை வைக்க அழைக்க வேண்டாமோ

வனிதா................வனிதா.............வனிதா......

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

எங்க போயிட்டிங்க சுனாமி மாதிரி வறதும் தெரியலை போறதும் தெரியலை!
நீங்க வர தாமதமானாலும் பட்டிக்கு பதிவிடுகிற கடமை எங்களுக்கு உண்டு
..
என்னதான் சிறுகதை என்று எதிரணி தோழிகள் சொன்னாலும்
எங்க தொடர்கதைகளை அடித்துகொள்ள ஆளே இல்லைங்கோ!!!!

ராமாயணம் மகாபாரதம் போன்ற
எத்தனை புராணத்தொடர்களை டிவிகளில் பார்ர்க்கிறோம்
இதெல்லாம் சிறுகதையா???
இல்லை இதையெல்லாம் சுருக்கி சொல்லிவிட முடியுமா???
அது அதை சொல்லும் விதத்தில் சொன்னால்தான் மக்களை போய்ச்சேரும்...

அதை விட்டுட்டு சும்மா சிறுகதை சிறுகதைன்னு சொல்லிட்டு
இருக்க கூடாது..
ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்க!!!
சிறுகதைன்றது ..குளத்து தண்ணீர் மாதிரி சிற்றின்பம்..
தொடர்கதை என்பது கடல் மாதிரி பேரின்பம் ..
.
அதனால் சிறந்தது தொடர்கதைகளே...தொடர்கதைகளே ....

வாழு, வாழவிடு..

நடுவரே, முதலில் நான் அளித்த தலைப்பை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.

நான் வாதிட போகும் தலைப்பு சிறுகதை என்றே!!

நடுவரே, கொஞ்சம் யோசித்து பாருங்க, உலகமே இன்று நிற்க நேரமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறது, இதில் எங்க நடுவரே தொடர்கதையெல்லாம் படிக்க நேரம். என்னை பொறுத்த வரை தொடர்கதை, சீரியல் இதெல்லாம் சுத்த டைம்வேஸ்ட் நடுவரே. சீரியல் பார்த்துக்கொண்டு இன்று எத்தனை எத்தனை பெண்மணிகள் சமையலை கூட பொருட்டாக மதிப்பதில்லை தெரியுமா?? வேலைக்கு செல்லும் ஆண், வேலையிலிருந்து வந்ததும் ஒரு நியூஸ் கூட பார்க்க முடிவதில்லை. குழந்தைகள் பாவம், அம்மா அழுவதை பார்த்து அதுவும் அழுகிறது. குழந்தைகளை ஒரு கார்ட்டூன் கூட பார்க்க விடுவதில்லை இன்றைய நவீன தாய்மார்கள். இப்படி குடும்ப பொறுப்புக்களை மறக்க வைக்கும் சீரியல்களை எப்படி நடுவரே சிறந்தது என்று சொல்ல முடியும்.

கதை படிப்பது என்பது ஒரு பொழுதுபோக்காக இருக்க வேண்டுமே தவிர அதற்கு அடிமையாகி நமது வேலைகளை மறந்துவிடக்கூடாது நடுவர் அவர்களே!!

நடுவரே, இந்த கதை படிச்சுட்டே, கடலை சாப்பிட்டுக்கொண்டு படிப்பதெல்லாம் நல்லதான் இருக்கு நடுவரே, ஆனா உள்ள போவது சாப்பாடு மட்டுமா இல்லை அதில் இருக்கும் கல்லு, மண்ணா என்பது கூட தெரியாத அளவுக்கு கதை படிப்பது தான் நடுவரே கொடுமையிலும் கொடுமை. நடுவரே, கிரிக்கெட்டில் கூட டெஸ்ட் மேட்ச் பார்க்கும் கூட்டத்தைவிட ஒன் டே மேட்ச்க்கு தான் மவுசு அதிகம் நடுவரே. ஒன் டே கூட மாறி இப்போ “20/20” வந்த நிலையில் தொடர் கதையெல்லாம், சின்னபுள்ள தனமாவுல்ல இருக்கு நடுவரே:))

சிற்றின்பம், பேரின்பம் எல்லாம் சரி தான் நடுவரே, கதையின்பத்திற்காக குடும்பத்தை நிம்மதியையும், இன்பத்தையும் குழைப்பது எந்த வகையில் நடுவரே நியாயம்;னு நீங்களே சொல்லுங்க. என்னை பொறுத்த வரை சும்மா இருப்பவர்களால் தான் இந்த சீரியலுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிறது நடுவர் அவர்களே. காலை முதல் இரவு வரை மெகா தொடர்கள் டிவிகளில் ஒளிபரப்புவதே, குடும்ப தலைவிகளை மையமாக வைத்து தான் நடுவரே. இந்த டிவி சீரியல்களால் நடக்கும் ஒரே நன்மை என்ன தெரியுமா?? அக்கம் பக்கத்து வீடுகளில் நடக்கும் அரட்டைகள் குறைந்துள்ளது.

நடுவரே, நல்ல கருத்துக்கள் மக்களுக்கு பயம்படும்படி தேவையானவற்றை தொடர்கதையாக கொடுக்க வேண்டும் என்பதில்லை, ஒரு நொடியில் ஷார்ட் ஃபிலிமிலும் கூட சொல்லிடலாம் என்பதை சிறுகதை எழுதும் தோழிகளுக்கு நான் சொல்லித்தர வேண்டுமா நடுவர் அவர்களே. காக்க வைப்பதில் தொடர்கதைக்கு நிகர் தொடர்கதை தானாம் நடுவரே, காலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு எல்லாரும் உழைத்துக்கொண்டிருக்கையில் யாருக்கு நடுவரே, தொடர்கதை படிக்க நேரம் இருக்கு. டக்குன்னு எடுத்து படிச்சோமா முடிச்சோமா’னு ஷார்ட் அண்டு ஸ்வீட்டா இருக்குல்ல நடுவர் அவர்களே:)

தொடர்கதைகளை கூட சிறுகதைகளாக பாதிப்பாதியாக தானே நடுவரே படிக்கிறார்கள். ஏன் டிவி சீரியல்களை எடுத்துக்கோங்க, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் தான் காட்டறாங்க, அதனால தான் மக்கள் பார்க்கிறாங்க, அதையே காலை முதல் மாலை வரை தினமும், சித்தி, மெட்டிஒலி’னு போட சொல்லுங்க, எத்தனை பேர் பார்க்கிறாங்க’னு பார்ப்போம்:) குளத்து தண்ணீரில் விழுந்தால் அதிலிருந்து மீண்டு விடலாம் நடுவரே, கடலில் விழுந்தால் கதி அதோ கதி தான்.

நடுவரே, இன்றைய காலத்துக்கு ஏற்றது சிறுகதையே!! தொடர்கதையையும் சிறுகதைகளாக படித்தால் தான் அதன் சுவை புரியும் என்பதனாலேயே தொடர்கதைகளையும் வரிசையாக 1,2,3 என பாகம் பிரித்து எழுதியிருக்காங்க நடுவர் அவர்களே!!

அன்புடன்
பவித்ரா

நடுவரே

கடினமான சூழலிலும் பட்டிக்கு வந்த நடுவரின் பணி சூழல் எங்களுக்கு தெரியும்.. ;) பட்டியை நீங்கள் தொடங்கியதற்கே ஒரு சல்யூட்.. பொறுமையாய் உங்கள் வேலையை முடித்து வாருங்கள். அது வரை வாதம் தொடரும்...;)

எனதருமை தோழி அழகான விளக்கம் தந்தார். இராமயாணம், மகாபாரதம் போன்ற நெடுந்தொடர் இன்னமும் வந்துக் கொண்டே இருக்கிறது.. இளைய சமூகம் காண வேண்டும் எனும் நோக்கில்..

மெகா தொடர் இல்லாமல் இருக்க முடியாத எத்தனையோ பெண்களை இன்னும் நம்மால் பார்க்க முடிகிறது..அதில் லயித்து மற்ற வேலைகளைக் கூட செய்ய மறந்துவிடுகிறார்கள் என்றால் பாருங்களேன்.. ;)

சிறு சிறு படங்களுடன் கூடிய கதைகள் சிறுவர் மலரில் இருப்பதை படிக்க இன்னும் குழந்தைகளிடையே வீட்டில் ஒரு சண்டையே நடக்கும்.. காமிக்ஸ் கலெக்ஷன்ஸ் வைத்திருப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

தொடர்கதை எழுதுவது என்பது சாதரண காரியம் அல்ல.. ஒவ்வொரு வார முடிவுலும் ஒரு "க்" (சஸ்பன்ஸ்) வைத்து முடிக்க வேண்டும். படிப்பவர்களை அடுத்த பாகம் எப்போது என ஏங்க வைத்து படிக்க தூண்ட வேண்டும்.. கதை முழுக்க ஸ்வாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. அறுவை இல்லாமல் பலவிதமான உணர்ச்சிகளை ஒரே கதையில் கொண்டு வர வேண்டும்..

எழுதி முடிக்க எத்தனை ரசனை வேண்டுமோ அதே அளவு இல்லை எனினும் சிறிதாவது படிப்பவர்க்கு வேண்டும்..
இப்போது வரும் சிறுகதைகள் போற போக்கில் ஒரு கிறுக்கல் கிறுக்கியது போல உள்ளது..
சில கதைகளே நெஞ்சில் நிற்கிறது...

அங்கங்கே சில பேருந்துகளை அடிக்கடி பார்த்தாலும், ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் இரயில் பெட்டிகளை பார்க்கவே எத்தனை அழகு..அது போன்றது தொடர்கதை நடுவரே..

மீண்டும் வருவேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்