பட்டிமன்றம் - 34 : தொடர்கதையா?சிறுகதையா?

காத்திருந்து யாரும் நடுவரா வராம பட்டி துவங்காம இருந்த காரணத்தால் நானே துவங்குறேன். வாதிட கண்டிப்பா வந்துடுவீங்கன்னு நம்பறேன். :) ஏமாற்றாம வந்துடுங்க. நம்ம தலைப்பி :

சிறந்தது எது? தொடர்கதையா?சிறுகதையா?

சூப்பரான தலைப்பை தந்த பவித்ரா'கு மிக்க நன்றி.

இதில் கதை புத்தகம், டிவி சீரியல் என எல்லாமே அடங்கும். மற்ற பட்டியின் விதிமுறைகள் இதுக்கும் பொறுந்தும்.

நடுவரே, என்ன தான் ரயில் பெட்டி தொடராக இருந்தாலும் தேவைக்கும் அவசரத்துக்கும் உதவுவது பேருந்துதானே நடுவரே, அதை எப்படி சிறந்தது இல்லைன்னு சொல்ல முடியும். அதனால் தான் சொல்றோம் சிறுகதயே சிறந்தது’னு. தன் வேலையைகூட செய்ய மறக்க செய்யும் ஒன்றை சிறந்தது என்று எப்படி நடுவரே சொல்ல முடியும். என்ன தான் ரயில் தொடர்ந்து சென்றாலும், சிறுகதை போல இடையிடையே பிரிந்திருப்பதால் தானே அதற்கு அழகு.

குழந்தைகளும் சிறுகதையாக தொடரும் டாம்&ஜெர்ரி பார்ப்பதையே அதிகம் விரும்புகிறார்களே தவிர தொடர்கதைகளையல்ல நடுவர் அவர்களே!!

ரமணிச்சந்திரன் நாவலை கேட்டாலும், நமது அறுசுவையில் கதை எழுதுவதும், மற்றவர்களை கதை எழுத தூண்டுவது சிறுகதைகளால் தானே நடுவரே!! நம் தோழிகள் சிறுகதைகளிலேயே எத்தனை எத்தனை கருத்துக்களை மிகவும் நன்றாக கொடுத்திருக்காங்க, கொடுத்தது மட்டுமின்றி பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்களே, இதை விட சிறுகதை சிறந்தது என்று சொல்ல ஒரு சான்று தேவையா??

தொடர்கதையை திறம்பட எழுதுவதற்கும் அடித்தளமாக இருப்பது சிறுகதைதான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது நடுவரே!! எடுத்த எடுப்பில் யாராலும் தொடர்கதைகளை எழுதிவிட முடியாது, பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கனும்னா பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருக்க வேண்டும் தானே, அது மாதிரி தான் நல்ல தொடர்கதைக்கு பேஸ்மெண்டா விளங்கும் சிறுகதையே சிறந்தது.

அன்புடன்
பவித்ரா

நடுவரே

சீரியலை பார்த்து குடும்பத்தை மறக்கும் அளவிற்கு எந்த பெண்களும் இருப்பதில்லை நடுவரே.. பெண்ணாய் பிறந்து பெண் குளத்தையே தவறாக சொல்லலாமா? அவ்வாறு ஆண்கள் கூறி கூறி பெண்களை காமடிக்கு யூஸ் பண்ணிட்டாங்க நடுவரே. ;). எதிலும் உள்ள நல்ல கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.. சீரியலால் தான் பிரச்சனை..என்றால் அவளுக்கு எந்த பிரச்சனையையும் சமாளிக்க தெரியாது என்று தான் அர்த்தம் நடுவரே.. ஏதோ அவளிடமே சில பக்குவம் இல்லை எனப் பொருள்.

மக்கள் ஆமோதிப்பதால் தான் அவ்வாறு சீரியலே எடுக்கப்படுகிறது.. அத்தனை விளம்பர ஸ்பான்சர்கள் சும்மா ஒன்னும் கிடைப்பதில்லை.. பார்க்காமலா எடுக்கிறார்கள்.. நடக்காததையா காட்டுகிறார்கள்? சொல்லுங்க நடுவரே ;)

காலில் சுடுத் தண்ணி கொட்டிட்டு ஓடும் இந்தக் காலத்தில் ஏனப்பா சிறுக்கதை மட்டும் படிக்க வேண்டும்..? லைஃப் ரிலாக்சேஷன்க்கு கதை படிப்பாங்களாம்..அதிலும் ஒரு அவசர கதி..

தொடர்கதை என்பது நாவல் மட்டுமல்ல.. வாராவாரம் வருவதுமே.. நாவல் படிக்க நேரமில்லாதவர்களுக்காக தொடர்கதையை அவர்களுக்கு ஏற்றவாறு புரியும்படி தொடர்கதை சிறு சிறு தொகுப்பாக வெளிவந்தும் அதை குறைக் கூறுகிறார்கள் நடுவரே.. விட்டால் கம்பூட்டர் காலம் எஸ் எம் எஸ் சைஸில் வந்தால் போதும் என்பார்கள் நடுவரே..

ஒரு சினிமாவை 3 மணி நேரம் காட்ட முடியும்.. சித்தி மெட்டி ஒலியை நாள் முழுதும் காட்டினால் பார்க்க முடியுமா? எனக் கேட்டால் மனிதனின் உடல் அதற்கு ஒத்துழைக்காது மேலும் அவனவன் பிழைப்பை பார்க்க படம் நாடகம் எடுக்கிறான் ச்சாரிட்டி இதில் இல்லை.. இவர்கள் பார்க்கும் அரை மணி நேர வருவாய்க்காக அவன் நாள் முழுவதும் கதை செய்து ஒலிபரப்பினால் சீக்கிரம் முக்காடு போட்டு உக்கார வேண்டியது தான் ;)

கடலை சாப்பிட சொன்னால் ஏன் கல்லை மண்ணை சாப்பிட வேண்டும்..? இன்பங்கள் போதைகள் இவ்வுலகில் கொட்டி கிடக்கும்.. அதை கையாள தெரிந்தால் பயமில்லை..

நமது தோழிகள் அழகான பல சிறுகதைகள் கொடுத்திருந்தாலும் படித்தவை ரசித்தவையும்.. இணி ஒரு பணி செய்வோமும் மறக்க முடியுமா? வனி.. அடுத்த பாகம் எப்போது.. இப்பவே சிரியா பாக்கனும்போல இருக்கு..ன்னு எத்தனை பதிவுகள்.. உங்களுக்கு தெரியாததா?

அதே குழந்தைகள் தொடர்கதையான ஹைடி, அலாவிதீன், சிந்து பாத் கார்ட்டூன்களுக்கு அடிமைகள் நடுவரே
அவசரத்துக்கு உதவுவது பஸ்ஸுதான்.. எங்கே இங்கே இருந்து பாம்பேக்கு பச்ஸில் போக சொல்லுங்கள்.. பென்டு நிமித்திடும் நடுவரே

தொடர்கதையோ சிறுகதையோ பேஸ்மென்ட்டா இருப்பதி நல்ல கரு மட்டுமேங்கோ
பார்க்க கடல் எத்தனை அழகோ அது போல் படிக்க தொடர்கதை அழகு.. கடலில் போய் ஏன் குதிக்க வேண்டும்.. கரையில் நின்று ரசிக்கலாமே..;)..

மீண்டும் வருவேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//நடுவரே, கொஞ்சம் யோசித்து பாருங்க, உலகமே இன்று நிற்க நேரமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறது, இதில் எங்க நடுவரே தொடர்கதையெல்லாம் படிக்க நேரம். என்னை பொறுத்த வரை தொடர்கதை, சீரியல் இதெல்லாம் சுத்த டைம்வேஸ்ட் நடுவரே//

நடுவரே, உலகம் நின்னா என்ன ஆகும்னு எங்களுக்கு தெரியும். அதுபாட்டுக்கு அது வேலையை பார்க்கட்டும். நிக்காம ஓடுறவங்க நடந்தா ஓடுவாங்க நடுவரே. ஒரு பஸ்லயோ, ஆட்டோலயோ,ட்ரெயின்லயோ அதுவும் இல்லைனா கார்லயோ தானே ஓடுவாங்க. அப்ப அவங்களுக்கு தொடர்கதையோட உதவி கண்டிப்பா தேவையா இருக்கும். பக்கத்தை மடிச்சு மடிச்சு வச்சி படிப்பாங்க. சிறுகதைல இது நடக்குமாங்கறேன். மடிக்கற பேஜ்லயே கதையும் முடிஞ்சிடும்.

//சீரியல் பார்த்துக்கொண்டு இன்று எத்தனை எத்தனை பெண்மணிகள் சமையலை கூட பொருட்டாக மதிப்பதில்லை தெரியுமா?? //நடுவரே ஆண்கள், பெண்கள் சமையலை பொருட்டாக மதிக்காமல் இருந்தால் ஒருநாள் பொறுப்பார்கள், இரண்டு நாள் பொறுப்பார்கள் போனா போகட்டும் மூன்று நாள் கூட பொறுப்பார்கள் அதற்கு மேல் போனால் தூக்கி போட்டு மிதிக்க மாட்டார்கள். எதிரணி தெரியாமல் பேசுகிறார்கள் நடுவர் அவர்களே. பெண்கள் தங்கள் கடமைகளை செவ்வனே முடித்துவிட்டு தான் டிவி முன்பு அமர்வார்கள்.

//வேலைக்கு செல்லும் ஆண், வேலையிலிருந்து வந்ததும் ஒரு நியூஸ் கூட பார்க்க முடிவதில்லை//நடுவர் அவர்களே, பந்திக்கு முந்திக்கற கதை உங்களுக்கு தெரியுமோ இல்லையோ எதிரணியினர் நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு முந்திக் கொண்டனர்.இப்போதெல்லாம் இல்லத்தரசிகள் தான் நியூஸ் சானலை பார்க்கிறார்கள். நாட்டு நடப்பை பற்றி தெரிந்து கொள்ள. கணவன்மார்கள் வீட்டு வாசற்படி ஏறும்போதே தொடர் நாடகம் தொடங்கிடுச்சான்னு கேட்டுட்டே தான் நுழைவார். விட்டு போன கதையை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார். தொடரை பார்ப்பதற்காகவே நேரத்தோடு வீட்டிற்கும் வருவார். இதனால் வெளியே அநாவசியமாக செலவழிக்க மாட்டார். தொடர் நாடகத்தால் எத்துணை நன்மைகள் பார்த்தீர்களா?

//இந்த கதை படிச்சுட்டே, கடலை சாப்பிட்டுக்கொண்டு படிப்பதெல்லாம் நல்லதான் இருக்கு நடுவரே, ஆனா உள்ள போவது சாப்பாடு மட்டுமா இல்லை அதில் இருக்கும் கல்லு, மண்ணா என்பது கூட தெரியாத அளவுக்கு கதை படிப்பது தான் //சுவாரசியமான கதைக்குள்ள போகும்போது இந்த சின்ன விஷயத்துல கவனம் செலுத்த மாட்டோமா? அதெல்லாம் சுத்தம் பண்ணி வச்சுட்டு தான் படிக்கவே தொடங்குவோமாக்கும் :D

//கதை படிப்பது என்பது ஒரு பொழுதுபோக்காக இருக்க வேண்டுமே தவிர அதற்கு அடிமையாகி நமது வேலைகளை மறந்துவிடக்கூடாது நடுவர் அவர்களே!!//நடுவர் அவர்களே தொடர்கதை என்ன போதை பொருளா? அதற்கு அடிமையாக... அது எங்களுக்கு பொழுது போக்குதான். நாங்களும் அப்படி நினைத்து தான் படிக்கிறோம். தொடர்கதைகள் எப்போதும் நமக்காக காத்திருக்கும், சீரியலோ, புத்தகமோ எந்த பாகமாவது விடுபட்டால் ஆன்லைனிலோ, கடைகளிலோ வாங்கி படித்தும், பார்த்தும் கொள்ளலாம். ஆனால் சிறுகதையில் இது நடக்குமா? துண்டு பிரசுரம் போன்ற சிறுகதையில் நீங்கள் தேடும் கதையை எந்த துண்டில் தேடுவீர்கள்?

//காலை முதல் இரவு வரை மெகா தொடர்கள் டிவிகளில் ஒளிபரப்புவதே, குடும்ப தலைவிகளை மையமாக வைத்து தான் நடுவரே. இந்த டிவி சீரியல்களால் நடக்கும் ஒரே நன்மை என்ன தெரியுமா??//இன்று உள்ள குடும்ப தலைவிகள் வீட்டில் இருந்தாலும் சும்மா இருப்பதில்லை. எதாவது ஒரு கைத்தொழிலை செய்து குடும்ப தேவைக்கு சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். வேலையை செய்து கொண்டே டிவியை பார்ப்பார்களே தவிர செய்யும் வேலையை விட்டுவிட்டு பார்க்க மாட்டார்கள் இதை எதிரணி தோழிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

//காலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு எல்லாரும் உழைத்துக்கொண்டிருக்கையில் யாருக்கு நடுவரே, தொடர்கதை படிக்க நேரம் இருக்கு. டக்குன்னு எடுத்து படிச்சோமா முடிச்சோமா’னு ஷார்ட் அண்டு ஸ்வீட்டா இருக்குல்ல நடுவர் அவர்களே:)//நீங்க ஏங்க கால்ல வெந்நீரை கொட்டிட்டி வேலை செய்றீங்க? யார் செய்ய சொன்னா? நல்ல ஐஸ் வாட்டரா கொட்டிட்டு கூலா வேலை செய்துட்டு தொடரை பார்த்துட்டு, தொடர் கதைய படிங்க.

//தொடர்கதைகளை கூட சிறுகதைகளாக பாதிப்பாதியாக தானே நடுவரே படிக்கிறார்கள்//நடுவர் அவர்களே எங்களை மாதிரி பொறுமைசாலிகள் பொறுமையா காத்திருந்து தொடர்கதைகளின் தொகுப்பை வாங்கி மொத்தமா படிப்போம். இவங்கள மாதிரி சிறுகதை படிக்கறவங்களுக்கு பொறுமை இருக்காது, அதான் தொடர்கதையை கூட சிறுகதையா நினைச்சு படிப்பாங்க :)

//காலை முதல் மாலை வரை தினமும், சித்தி, மெட்டிஒலி’னு போட சொல்லுங்க, எத்தனை பேர் பார்க்கிறாங்க’னு பார்ப்போம்:)//நடுவர் அவர்களே நாங்க ஒருநாள்லயே பார்த்துட மாட்டோம். இனிப்பை எவ்வளவு தான் சாப்பிடமுடியும்? அதை அடுத்த நாளுக்கும் வைத்து சாப்பிடுவோம். அதை கருத்தில் கொண்டு தான் தொடர் நாடகங்களாக தொடர்ந்து தர்றாங்க.நாங்க தான் தொடர்ந்து பார்க்கறத விரும்புறதா சொல்லிட்டோமே. இவங்க ஏன் சிறுகதை மாதிரி ஒருநாள்லயே முடிக்க பார்க்குறாங்க?

// குளத்து தண்ணீரில் விழுந்தால் அதிலிருந்து மீண்டு விடலாம் நடுவரே, கடலில் விழுந்தால் கதி அதோ கதி தான்.//குளமோ,ஏரியோ,ஆறோ சங்கமமாகும் இடம் கடல் தான் என்பதை எதிரணி புரிந்து கொள்ள வேண்டும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸ்ரீ... வாங்க!!! சிறுகதை நம்ம பட்டி மாதிரி ஷார்ட் அன்ட் ஸ்வீட்'னு சொல்றீங்க. ;)

கல்பனா... சரியா சொன்னீங்க. மெட்டி ஒலி வெற்றி பெற்றதால் தானே மீண்டும் அதை போடறாங்க.

ருக்சனா... நானே தாமதம், பென்ச் மேல தான் நிக்கறேன். உண்மை தான் தோழிகள் நாவல்கள் பற்றி கேட்க தான் செய்யறாங்க. //எங்க போயிட்டிங்க சுனாமி மாதிரி வறதும் தெரியலை போறதும் தெரியலை!// - அழுதுடுவேன்.

ரம்யா.... வாங்க. //ஒரு பகுதி விட்டா டென்ஷன் ஆகி பிறரிடம் எரிந்து விழுவார்களாம்.. அதற்கு பெயர் பிபி நடுவரே.. நல்ல டாக்டரை பார்த்தால் சரியாகும்.. ;).. // - ஹிஹிஹீ... எதிர் அணி கேட்டுக்கங்க. //கடினமான சூழலிலும் பட்டிக்கு வந்த நடுவரின் பணி சூழல் எங்களுக்கு தெரியும்.. // - நீங்க ரொம்ப நல்லவங்க :) தேன்க்யூ தேன்க்யூ. //பெண்ணாய் பிறந்து பெண் குளத்தையே தவறாக சொல்லலாமா?// - நோ நோ நோ. ரொம்ப தப்பு, நாமலாம் நல்லவங்க. ;)

யோகராணி... வந்து நடுவரை அணிகளிடம் போட்டு கொடுத்தாச்சா??? பாவம் நடுவர். நேற்று ஊரில் இல்லை. இரவு 2 மணிக்கு வந்து வாதங்களை படித்தேன், பதிவிட முடியாமல் தூங்கிட்டேன். ;(

பவி.... தலைப்பு தந்தமைக்கு முதல் நன்றி. சிறுகதை பக்கம் தாவிட்டீங்களா??? //ஒன் டே கூட மாறி இப்போ “20/20” வந்த நிலையில் தொடர் கதையெல்லாம், சின்னபுள்ள தனமாவுல்ல இருக்கு நடுவரே:))// - பதில் சொல்லுங்க தொடர்கதை அணி மக்களே. ;)
//என்ன தான் ரயில் பெட்டி தொடராக இருந்தாலும் தேவைக்கும் அவசரத்துக்கும் உதவுவது பேருந்துதானே நடுவரே// - எப்படி இப்படிலாம் கம்பேர் பண்ண உங்களால மட்டும் முடியுது!!! கலக்கறீங்க.
விட்டா அப்பப்ப கெர்ள் பிரெண்டை மாத்துற மாதிரி சிறுகதை... சுவாரஸ்யமா இருக்கும். ஒரு பொண்டாட்டியை கட்டின மாதிரி தொடர்கதை போர் அடிக்கும்'னு கூட சொல்வாங்க போல.
கல்பனா... பட்டி மன்றம், கதைகள் எல்லாத்துலையும் பெருந்தலை. நிறைய சிறுகதை எழுதுறவங்க. ;) தொடர்கதை எழுத ஆசை வந்துட்டுதா??? //குளமோ,ஏரியோ,ஆறோ சங்கமமாகும் இடம் கடல் தான் என்பதை எதிரணி புரிந்து கொள்ள வேண்டும்.// - எதிர் அணி புரிஞ்சிதா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கப்பா நடுவர் வந்துட்டேன், வாதாட ஆளை காணோம். வாங்க எல்லாரும்.... நடுவருக்கு போர் அடிக்குது. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே, மாலை வணக்கம். இந்தாங்க சுகியோட வெஜ் ரோலும், ரீம்’மின் ஃபலூடாவும் உங்களுக்காகவே பதமா எடுத்துட்டு வந்திருக்கேன். தெம்பா சாப்பிட்டு வாங்க. அதுக்குள்ள நானும் சிறுகதையின் அரும்பெருமைகளை நடுவருக்கு தெளிவா விளக்கமா சொல்லிடறேன்.

நடுவரே, நான் எதிரணிக்கு முதல்ல சொல்லிக்க விரும்புவது என்னவென்றால் நான் ஒரு பெண்ணாய் இருப்பதால் தான் என் சகோதரிகள் இப்படி சீரியலுக்கு அடிமையாகிவிட்டாங்களே என் மனது கிடந்து புலம்புது நடுவர் அவர்களே. இன்னொரு முக்கியமான விஷ்யம் நடுவர் அவர்களே, இப்ப வரும் எந்த சீரியலாவது உறுப்படியா இருக்கான்னு சொல்லுங்க. எதிரணி சொல்ற மாதிரி ராமாயணம், மகாபாரதம் டிவியில் போட்டாலும், அதை பார்க்கும் கூட்டம் மிகக் குறைவு தானே நடுவர் அவர்களே. எந்த சீரியல் எடுத்தாலும் பிறர் மனை நோக்குதல் என்ற எண்ணம் தானே மேலோங்கி இருக்கிறது. நீங்க வேணா ஒரு நாள் உட்கார்ந்து காலை 10 மணி முதல் இரவு 10 வரை சீரியல் பாருங்க, அதுல எல்லா சீரியலிலும் பழி வாங்குவது எப்படி, கொலை, கற்பழிப்பு தான் பெருகி கொண்டு வருகிறதே தவிர, எதுவுமே ஒரு நல்ல மெஸேஜ் சொல்லவில்லை என்பது உங்களுக்கு புரிந்துவிடும் நடுவரே. இப்படி குடியை கெடுக்கும் சீரியலை எப்படி சிறந்தது என்று சொல்ல முடியும் நடுவர் அவர்களே!!!

நல்லவேளை நடுவரே, சீரியலுக்கு நடுவில் விளம்பரம் போடறாங்க, இல்லைன்னா இடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி சோறு தண்ணி மறந்து குடும்பத்தலைவிகள் அப்படியே அமர்ந்திடுவாங்க. விளம்பரம் போடும் நேரத்தில் தான் ஏனோதானோன்னு அவங்க சமைப்பதே என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை.நடுவரே நான் தான் ஏற்கனவே சொன்னேனே, மைண்ட் ரிலாக்ஸா இருக்க சிறுகதை தான் சிறந்தது, தொடர்கதையை சிறு சிறு தொகுப்பாக வெளியிடுவதற்கும் கூட முக்கிய காரணம் யாரும் தொடர்கதையா தொடர்ச்சியா சொன்னா விரும்புவதில்லை. தொடர்கதையையும் சிறுகதையாதான் மக்கள் ரசிக்கிறார்கள் நடுவர் அவர்களே!!

நடுவரே, கடலை சாப்பிடும் போது பார்த்து சாப்பிடனும் நடுவர் அவர்களே. சிலர் சீரியல் பாத்துட்டு தட்டில் இருந்து சாப்பாடு எடுத்து சாப்பிடுவதற்கு பதிலாக தரையை தடவிட்டு இருப்பாங்க, நாங்க அதை தான் சொன்னோம நடுவரே, புரிய வேண்டிய உங்களுக்கு புரிந்துருக்கும் நடுவர் அவர்களே.

ஒரு இடத்தை சென்றடைய வேண்டும் என்றால் நீங்க எந்த வழி ஈஸியா இருக்கோ அந்த வழியை தானே நடுவரே தேர்ந்தெடுப்பீங்க. தலையை சுத்தி மூக்கை தொடுவதை விட, நேராவே தொட்டுவிடலாமே நடுவரே. கதைக்கு முக்கியம் கரு. அதை எளிய வழியில் மக்களை சென்றடைய செய்யும் ஒரு மாபெரும் முயற்சியே சிறுகதைகள். வழி எதுவானாலும் நமக்கு போய் சேர வேண்டிய இடம் தானே நடுவரே முக்கியம். அதை சிறுகதை செவ்வனே செய்து வருகிறது. நடுவரே, அந்த சிந்து பாத் கொடுமை பற்றி மட்டும் பேசவேண்டாம்னு சொல்லுங்க நடுவரே. அந்த கதை நான் கொள்ளூ பேரன், பேத்தி எடுக்கும் வரை வளர்ந்து கொண்டு இருக்கும்;னு நினைக்கிறேன்;(((((::

அன்புடன்
பவித்ரா

நடுவரே, நாங்க கார்ல போனாலும் பஸ்ல போனாலும் சிறுகதைகளின் தொகுப்பு கூட படிக்கலாமே, எப்படி தொடர்கதை தான் படிக்க வேண்டும் என்றில்லையே!! நான் கேட்பது ஒண்ணு தாங்க, ஏன் தொடர்கதையையும் பாகமா பாகமா பிரித்து கொடுக்கிறாங்க, தொடர்கதை ஒரே வல வல கொல கொல தான் நடுவர் அவர்களே. ஆண்கள் பெண்களை அடிப்பாங்களாம், இது நல்ல காமெடியாவுல்ல இருக்கு. ஒரு ஆண் இன்னிக்கு கைய ஓங்கினான் அவ்வளவுதான், வீடே ரெண்டு பட்டுவிடும். நீங்க சொல்ற மாதிரி ஆண், ஒரு நாள் பார்ப்பான், ரெண்டு நாள் பார்ப்பான், மூன்றாம் நாள் மனைவிக்கும் சேர்த்து ஹோட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வந்திடுவான், இது தான் இன்று எல்லார் வீடுகளிலும் நடக்கும் ஒரு கதை.

அன்புடன்
பவித்ரா

தொடர்கதையே

நடுவரே.. உங்களுக்கு அது இதுனு கொடுத்து ஐஸ் பிடிக்க பாக்கறாங்க.. பாத்துக்கோங்க.. ;)

நடுவரே அடிமையாகறதுனு சொல்றதெல்லாம் சும்மா.. இப்போ அறுசுவையையும் தான் நாம பயன்படுத்துறோம்.. ஆனா நமக்குனு பொறுப்பு வரும் போது அறுசுவையையே மிஸ் பண்ண வேண்டிய சூழல் வருதே. :(. என்ன செய்ய.. அப்படி இதைய குடும்பத்துக்காக மிஸ் பண்ணும் போது சீரியல் எம்மாத்திரம் சொல்லுங்க.. அடிமையாயிடுமேனு நினைத்து நினைத்து பயப்படுகிறவர்கள் தான் அடிமையாவார்கள் போல...;)

சரிதான்.. ராமாயணம் மகாபாரதம் எல்லாம் அவங்க ஆசைப்படி சின்ன சின்ன தொகுப்பா போட்டாலும் ஃபார்ஸ்ட் ஃபுட் காலம்னு பாப்பதில்லை.. அப்போ குறைவா தானே பார்ப்பாங்க.. ஒன்னு ஆவு நா எல்லாரும் சொல்வாங்க.. யோகா செய்ய நேரமில்லை.. படிக்க நேரமில்லை.. தண்ணிக் குடிக்க கூட நேரமில்லைனா பாருங்களேன்னு.. நேரத்தை சும்மா குறைக் கூறுவது.. என்ன நியாயம்?

சீரியல் மட்டும் தானா மக்களை கெடுக்கிறது.. ஏன் நடுவரே கொலை குற்றம் செய்பவன் திருட்டு செய்பனெல்லாம் தொடர்ந்து சித்தி பார்க்கிறானா? இல்லை திருடிக் கிட்டு இருக்கும் போது வெயிட் எ நிமிட் ஃபார் எ மினிட்..எனக்கு இது கோலங்கள் பாக்குற நேரம்னு திருடரதை பாதில நிறுத்திட்டு வீட்டுக்கு ஓடி வந்தா பாக்கறான்.. அப்றம் பொழப்பு அவனுக்கு கெட்ரும்..

எல்லாரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எல்லாரும் சொல்லி தருவார்கள்.. எப்படி நடக்க கூடாது என கொடுப்பதில் சீரியலுக்கும் ஒரு பங்கு உண்டு. அதெப்படி சீரியலில் உள்ள வில்லி சைடு மட்டும் பாக்கறீங்க.. ஏன் ஹீரோயின் பொறுமையா இருந்து அவங்க முன் முன்னேறி பல துன்பங்களைத் தாண்டி வராளே.. அதை எடுத்துக் கொள்ள வேண்டியத்து தானே?இது மெஸேஜ் இல்லையா? டூஸ் என்னனு தெரிவது விட டோன்ஸ் என்னனு தெரிவது முக்கியம் இல்லையா நடுவரே?

தொடர்கதையை சிறு சிறு தொகுப்பாக கொடுத்தும் குறை கூறுகிறார்களே..?ஏன் நாவல் படிப்பதில்லையா யாரும்? மனிதனின் உடல் எலும்பும் தசையும் கொண்டது..எந்திரன் சிட்டி போல அல்ல ஒரே மூச்சில் படித்து முடிக்க..

//கடலை சாப்பிடும் போது பார்த்து சாப்பிடனும் நடுவர் அவர்களே. சிலர் சீரியல் பாத்துட்டு தட்டில் இருந்து சாப்பாடு எடுத்து சாப்பிடுவதற்கு பதிலாக தரையை தடவிட்டு இருப்பாங்க,//
ஏங்க தரையை தடவுறதெல்லாம் ரொம்ப ஓவருங்க.. சீரியல் பார்த்துக் கொண்டு நுணுக்கமான கூடையையே பின்றாங்களாம்.. ;)

போய் சேர வேண்டிய இடம் முக்கியம் என்று செல்லும் பாதையை மறந்தால் எப்படி? எப்படி சென்றடைகிறோம் என்பது வேண்டும் இல்லையா நடுவரே? சிந்து பாத் கதை என நான் சொன்னது நியூஸ் பேப்பரில் வருவதை அல்ல டாம் அன்ட் செர்ரி என கார்ட்டூனை பற்றி பேச்சு வந்ததால் நானும் சிந்து பாத் கார்ட்டூனை சொன்னேன். அவர்கள் ஃபார்ஸ்ட் ஃபுட் காலத்திற்கு ஏற்றவாறு எத்தனை அனிமேஷன்களுடன் அழகாக இயக்கியுள்ளனர்..? சரி பார்த்தால் தானே தெரியும்.. பார்க்க தொடங்கும் முன்னே அதனை பற்றிய ஒரு கசப்பு...குழந்தைகள் பார்க்கும் போது முழுதும் வேண்டாம் கொஞ்ச நேரம் அதில் கவனம் செலுத்தினால் புரியும்..

நடுவரே தொடர்கதையில் வரும் பலதரப்பட்ட கதாப்பாத்திரங்கள்.. இப்படியும் மனிதர்கள் மண்ணில் உள்ளனரா? என நினைக்கும் அளவிற்கு புது உலகத்திற்கு நம்மை எடுத்து செல்லும்.. அதை ரசிப்பவருக்கே அருமை விளங்கும்..

மீண்டும் வருவேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவர் உள்ளிட்ட அவையை வணங்கி, என் உரையை பதிவிடுகிறேன்.
பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தன், ஜலதீபம், உடையார் முதலான கதைகளை எப்படி சிறுகதைகளாக எழுத முடியும். பல தொடர்கதைகளை எழுதி பெயரெடுத்த எழுத்தாளர்கள் நம் நினைவில் நிற்பது சிறுகதைகள் எழுதியதாலா?. நாவல்கள் எழுதியதாலா?.
மாலை நேரத்தில் ஏதோ ஒரு பலகாரம் சாப்பிட்டு டீ சாப்பிடுறோம் பாருங்க, அது மாதிரி சிறுகதைங்க!. மதிய நேரத்தில சாப்பாடு சாப்பிடுறோம் பாருங்க, அது மாதிரி நாவல்ங்க!. எதை சாப்பிட்டால் பசி ஆறும் என்பது உங்க எல்லோருக்குமே தெரியுங்க!. பட்டிமன்றத்தில பேசறோம் அப்படிங்கறதால உன்மையை மறைச்சு பேசலாமா எதிர் அணிக்காரங்களே?. நம்ம அறிவு பசிக்கு தீனி போடறது நாவல்தானுங்க, சிறுகதைதான்னு நீங்க சொல்றதே தொடர்கதை மாதிரிதானுங்க சொல்றீங்க. ஏதோ அடியேன் புத்திக்கு எட்டிய வரைக்கும் சொல்லிட்டேனுங்க. போய்ட்டு வாரேனுங்க!.

அன்புடன்
THAVAM

என் அருமை நடுவருக்கு என் வணக்கங்கள்;)

மற்றும் சிறப்பாக வாதாடிக்கொண்டிருக்கும் அருமைத் தோழி(ழர்)களுக்கு வந்தனங்கள்;-)

சஸ்பென்ஸ் இல்லாத வாழ்க்கையும், திரில் இல்லாத வாழ்க்கையும் கொஞ்சநாள் கழித்து பாக்கும்போது ஒன்னுமே இல்லாம போயிருக்கும். அட இதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கையா அப்படினு நினைக்கத்தோனும், அந்த மாதிரி வாழ்க்கை சிறுகதை மாதிரிங்க;-)

சஸ்பென்ஸும், திரில்லிங்கும் கலந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா கழியும் வாழ்க்கைதான் அடுத்து வரும் நம் சந்ததியனருக்கும் எடுத்துரைக்கவல்லதாக இருக்கும் இந்த இனிய வாழ்க்கை தொடர்கதை மாதிரிங்க;-).

இப்போ சொல்லுங்க சிறுகதை மாதிரி ஒரே பாராவில வாழ்ந்தேன் மடிந்தேன்னு சொல்லற வாழ்க்கை சிறந்ததா....

இல்லை

புத்தகம் நிறைய அனுபவங்களை கொட்டி வைத்திருக்கும் தொடர்கதை போன்ற வாழ்க்கை சிறந்ததா....

இங்க நான் வாழ்க்கையோட கதையை ஒப்பிட்டு பேச காரணமே, இந்தக் கதையெழுதுகிறவர்கள் வாழ்க்கையைதானுங்க கதையா எழுதுறாங்க.. அதனால்தான்;)

நடுவரே

பேருந்தில் பயணம் செய்யும்பொழுது பயணக்களைப்பு நீங்க புத்தகம் வாங்குவோமே, அதில ஒருதடவை பயணம் செய்யும்போது ஒரு சிறுகதை தொகுப்பு வாங்கி படியுங்க, பத்து சிறுகதை படித்தாலும் மனசுல எதாவது ஒன்னிரண்டு சிறுகதைதான் மனசுல நிக்கும். எல்லாக் கதையும் சிறந்ததாக இருந்தாலுமே எல்லாமும் மனசுல நிக்காது, ஆனா ஒரே ஒரு நாவல் படிச்சு பாருங்க அந்த நீண்ட தூர பயணமும் பாராமாகாது கதையும் நினைவை விட்டு அகலாது.

நடுவரே

பாலுமகேந்திரன் சிறுகதைகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதே அத்தனையுமா நினைவில் நிக்கிறது இல்லையே..
அதுல எனக்கு நினைவில் நின்றது, நன்றாக படிக்கும் குழந்தையை சிறந்த பள்ளி என்று தொலைவில் இருக்கும் ஒரு பள்ளிக்கு சேர்த்து, அக்குழந்தையால் அப்பள்ளியில் கவனம் செலுத்த முடியாமல் பள்ளிக்கு செல்வதை தவிர்க்க வீட்டு மாடியில் படுத்து உறங்கியிருக்குமே அது ஒன்றுதான் இன்றளவும் நினைவில் நிக்குது.

ஆனால் ”விடாது கருப்பு”ன்னு நம்மள எட்டரை மணிக்கு தொலைக்காட்சி பெட்டி முன்னாடி கட்டிப்போட்டதே அந்த தொடரில் ஒரு பாகமாவது மனசுல இருந்து தூக்கிப்போட முடியுமா?

நடுவரே!

பட்டி ஆரம்பத்தில வந்து வணக்கத்த மட்டும் போட்ட நான் எந்த பக்கம் பேசுவேன்னு ஒரு த்ரில்லோட இவ்வளவு நாள் இரண்டு அணியும் ஆவலோட காக்க வைச்சேனே, அதுதாங்க தொடர்கதை.. அந்த தொடர்கதையின் பக்கமே நான் என்று கூறிக்கொண்டு எனது அடுத்த கட்ட வாதத்தை படிக்க நாளைவரை காத்திருக்குமாறு அன்புடன் வேண்டிக்கொண்டு ,இங்க ”தொடரும்” போடறேன்;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்