பட்டிமன்றம் - 34 : தொடர்கதையா?சிறுகதையா?

காத்திருந்து யாரும் நடுவரா வராம பட்டி துவங்காம இருந்த காரணத்தால் நானே துவங்குறேன். வாதிட கண்டிப்பா வந்துடுவீங்கன்னு நம்பறேன். :) ஏமாற்றாம வந்துடுங்க. நம்ம தலைப்பி :

சிறந்தது எது? தொடர்கதையா?சிறுகதையா?

சூப்பரான தலைப்பை தந்த பவித்ரா'கு மிக்க நன்றி.

இதில் கதை புத்தகம், டிவி சீரியல் என எல்லாமே அடங்கும். மற்ற பட்டியின் விதிமுறைகள் இதுக்கும் பொறுந்தும்.

பட்டிமன்றத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்,
பட்டிமன்ற விதிகளை வகுத்தவர்,
பட்டிமன்ற சிறப்பு இழை உருவாக்கியவர்,
எந்த நேரமும் வாய் பட்டி... பட்டி... என்றே கூறிக் கொண்டிருக்கும்.
சுகந்தி அவர்கள் செய்து பவித்ரா அவர்களால் கொடுக்கப்பட்ட வெஜ் ரோலை சாப்பிட்டபின் நடுவர் அவர்கள் காணாமல் போய்விட்டார். இன்னும் பட்டிக்கு வரவில்லை... கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு பயப்படாதீங்க வெஜ்ரோல்லாம் தர மாட்டோம்.

அன்புடன்
THAVAM

பவித்ரா... வாங்க. //தட்டில் இருந்து சாப்பாடு எடுத்து சாப்பிடுவதற்கு பதிலாக தரையை தடவிட்டு இருப்பாங்க// - ஹஹஹா... நிஜமாவா?? சீரியலை விட காமெடியா இருக்கும் போலிருக்கே.

ரம்யா.... விடுவதாக இல்லை போலிருக்கே!!! //நடுவரே தொடர்கதையில் வரும் பலதரப்பட்ட கதாப்பாத்திரங்கள்.. இப்படியும் மனிதர்கள் மண்ணில் உள்ளனரா? என நினைக்கும் அளவிற்கு புது உலகத்திற்கு நம்மை எடுத்து செல்லும்.. // - கரக்ட்டு. ஆல் லேடி வில்லீஸ். ;(

தவமணி... வாங்க வாங்க. நீங்களும் தொடர்கதை பக்கமா??? கலக்குங்க. மதிய உணவு ஆச்சா??? சாப்பாட்டு நினைப்பாவே இருக்கீங்க போல ;)

ஜெயலக்ஷ்மி... //என் அருமை நடுவருக்கு // - ஹெஹெஹெஹெ. தேன்க்யூ தேன்க்யூ. //சஸ்பென்ஸ் இல்லாத வாழ்க்கையும், திரில் இல்லாத வாழ்க்கையும் கொஞ்சநாள் கழித்து பாக்கும்போது ஒன்னுமே இல்லாம போயிருக்கும்// - இதெல்லாம் ஓவரா இல்ல??? வாழ்க்கையே த்ரில்லர் படம் மாதிரி இருந்தா தூக்கமே வராதுங்க. ;( எப்படியோ சின்ன சின்ன கதையெல்லாம் மனசுல நிக்காதுன்னு சொல்லிட்டீங்க.

தவமணி... நான் காணமலாம் போகலங்க. ;) நெட் கனக்ட் ஆவதில் பிரெச்சனை. சரி செய்ய ஆள் அழைத்தும் வரவில்லை. தாமதமாகுதே என்று காலையில் இருந்து வீடு முழுக்க சுற்றி நானே போன் லைனை சரி செய்து இப்ப வந்திருக்கேன் பட்டிக்காக.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நடுவருக்கு,வணக்கம்.

அறுசுவையின் அனைத்து தோழிகளுக்கும் வணக்கம்.

கதைகள் என்றும் சுவாரஸ்யமானவை.கொஞ்சம் உண்மையும்,கொஞ்சம்

கற்பனையும் கலந்தவை.சிறுகதைகள் ஒரு வட்டமிட்டு,அதற்குள் மட்டும்

இயங்கும்.அந்த வட்டத்துள் மட்டுமே இயங்க முடியும்.அந்த வட்டத்தை

தாண்டும்போது அதன் தோற்றம் மாறிவிடும்.ஒரு வட்டமிட்டு சொல்லப்படும்

சிறுகதையை விட,நீலவானைப்போன்று நீண்டும் அழகாகவும்,

சுவாரஸ்யமாகவும்,எப்போதும் ரசிக்க கூடியதாகவும் இருக்கும்

தொடர்கதைகளே சிறந்தது என்பதே என்னுடைய வாதம்.

நடுவரே,தொடர்கதைகள் சரித்திரக் கதைகள்,காதல்

கதைகள்,குடும்பக் கதைகள்,என்று பலவற்றை தன்னுள் கொண்டுள்ளது.

சிறுகதையிலும் இவற்றை சொல்லலாம்.ஆனால்,தொடர்கதையில் சொல்லப்படும்

அதே அழகோடு சொல்ல முடியுமா என்று பார்த்தால்,அதற்கு சிறுகதையில்

வாய்ப்பில்லை.

நடுவரே,வர்ணணைகள்,கதை சொல்லும் விதம்,கதாபாத்திரங்கள் என்று பல்வேறு

விஷயங்களில் வேறுபட்டு நிற்கிறது.படிப்பதற்கு எளிது என்பதால் மட்டும் ஒன்று

எவ்வாறு சிறந்ததாக இருக்க முடியும்,நடுவரே.

நடுவரே,தொடர்கதைகள்,கதாபாத்திரங்களை நம்முன் கொண்டு வரும்,கதை

நிகழும் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும்,மனம் சொல்லும் உணர்வை

தெளிவாக படம் பிடித்துக் காட்டும்,பல்வேறு திருப்பங்களை,சுவாரஸ்யங்களை

வழியெங்கும் விதைத்திருக்கும்.நம் மனம் கதை பின்னே ஓடும்,காட்சிகளை

ரசிக்கும்,கதாபாத்திரங்களுக்காக உருகும்,முடிவிற்காய் தவிக்கும்.

நடுவரே,இப்போது நாம் ஒரு சிறுகதையை எடுத்துக்

கொள்வோம்.ரமணிசந்திரனின் பாசமலர் தோட்டம்,இந்த கதையில் அழகான

குடும்பம்,கணவன்,மனைவியிடையே ஏற்படும் ஊடல்,கூடல் என்று

கதையை முடித்திருப்பார்கள்.மிக அழகான ஒரு கதை.

இப்போது அவரின் உள்ளம் கொள்ளை போகுதே கதையை எடுத்துக்

கொண்டால்,கார் ரேசை விரும்பும் கதாநாயகன்,தொழிலதிபராய் வளர விரும்பும்

கதாநாயகி,முதல் சந்திப்பில் ஏற்படும் மோதல்,பின்னர் காதல்,திருமணம் என்று

பல்வேறு திருப்பங்களோடு பயணிக்கும்.நடுவரே,இவற்றில் எதை தாங்கள்

ரசித்து,ஆவலோடு படித்தீர்களோ அதுவே சிறந்தது.

நடுவரே,தொடர்கதையின் வரலாற்றில் சிறப்பான இடம் வகிக்கும் சரித்திரக்

கதைகள் பற்றி முதலில் பார்ப்போம். தொடர்கதையாய் வெளிவந்து வாசகர்களால்

பெரிதும் கொண்டாடப்பட்டு,பின்னர் புத்தக வடிவிலும் பெரும் வரவேற்பை

பெற்று,இன்றும் பதினாறாம் பதிப்பு,பதினேழாம் பதிப்பு என்று வெளிவந்து

கொண்டிருக்கும்,எழுத்துலகில் நீங்கா இடம் பெற்ற புகழ் பெற்ற சரித்திரக்கதைகள்

ஒன்றே போதும் தொடர்கதைகளின் சிறப்பை சிறப்பாய் சொல்வதற்கு.

நடுவரே,சரித்திரக் கதைகள் எழுதுவது சுலபமான விஷயமல்ல என்று தங்களுக்கே

தெரிந்திருக்கும்.ஆனால்,அதன் சுவை அதிஅற்புதமானது,அழகு தமிழால்

எழுதப்பட்டது,ரசித்து ரசித்து சுவைக்க கூடியது.கதாபாத்திரங்கள் நம் மனதை

மயக்க கூடியது.கதை சொல்லும் பாங்கும்,செல்லும் பாங்கும் இருக்கிறதே

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.உரையாடல்கள் ஒவ்வொன்றும் வாசிக்கும்

போதே எவ்வளவு இனிமை!!

நடுவரே,இங்கு எண்ணற்ற சரித்திர கதைகள்

உண்டு.கடற்புறா,ராஜமுத்திரை,யவனராணி,விஜயமகாதேவி,ராஜதிலகம்,

கன்னி மாடம்,மன்னன் மகள்,சேரன் செல்வி பட்டியல் நீண்டு கொண்டே

போகும்.அவை வெறும் கதையை மட்டும் கூறிச் செல்வதில்லை.அன்றைய

வாழ்க்கை முறை,நகரங்களின் தோற்றம்,ஆடை,ஆபரணங்கள் என்று எண்ணற்ற

விஷயங்கள் கதையினூடே கலந்து பயணிக்கும்.

நடுவரே,நீங்கள் ரசித்து படித்த சரித்திரக் கதைகளின் கதாபாத்திரங்கள் உங்கள்

நினைவில் இல்லையா?ஒரு நிமிடம் கண்மூடி யோசித்து பாருங்கள்,நடுவரே.

யவன ராணியின் பெயரை சொன்னவுடன் உங்கள் கண்முன் அவர் பிம்பம்

தோன்றுகிறதா,வாயு வேகத்தில் பறக்கும் ரதத்தில் பாய்ந்து வரும் கரிகாலனை

நெஞ்சம் நினைக்கின்றதா?காதலனை நினைத்து பூங்கொடி உதிர்க்கும் கண்ணீர்

துளிகள் உங்கள் மனதை சுடுகின்றதா?அநபாயனும்,கருணாகர பல்லவனும்

உங்களை கடல் கடந்து அழைத்து சென்றார்களா?நடுக்கடலில் காதல் சொல்லும்

விஜயனை ரசித்தீர்களா?செழியன் புகாரை அடைவானா என்று

தவித்தீர்களா?பல்லவ இளவரசன் காஞ்சியை நீங்கியது ஏன் என்று

யோசித்தீர்களா??இளஞ்செழியனின் மதிநுட்பத்தையும்,வீரத்தையும்

வியந்தீர்கள்தானே,சோழ மண்டலமோ,பல்லவ ராஜ்ஜியமோ,சந்திர குப்த

மௌரியனின் பாடலிபுத்ரமோ,உங்கள் மனம் பயணப்பட்டது

உண்மைதானே?காட்சிகள் கண்முன் விரிந்து தாங்களும் அங்கு வாழ்ந்தீர்கள்

தானே,நடுவரே.பின்னாளில் அவ்விடங்களை காணும்போது உங்கள் மனம்

சென்றது எங்கே நடுவரே.

காகிதத்தில் காட்சி தோன்றி,விழி நிறைந்து மனம் லயிக்கும் சிறப்பு கொண்ட

சரித்திரக் கதைகளைவிட தொடர்கதையின் சிறப்பை சொல்ல சான்றொன்றும்

வேண்டுமா என்ன,நடுவர் அவர்களே.

அன்புடன்
நித்திலா

நடுவரே!

தொடர்கதை படிக்கும் சுகம் இருக்கே அது அலாதிங்க, அந்த தொடர்கதை படிக்கும்போதே நம்ம வாழ்க்கையில நடந்த சில சுவராஸ்யமான நிகழ்ச்சியும் வந்து மனச அள்ளிட்டு போகுமே ஆஹா அத என்னென்னு சொல்ல....

செல்லப்பாட்டிக்கிட்ட மடியில படுத்து கதை கேட்ட அனுபவங்கள்...

விடுமுறை நாளைக் கழிக்க குடும்பத்தோட சுற்றுலா சென்ற அனுபவங்கள்....

கணவன் மனைவிக்கு அன்போட வாங்கி வந்திருக்கும் சர்ப்ரைஸ் பிறந்தநாள் பரிசு.....

திருமண விழாவில் நடக்கும் சில சுவராஸ்ய நிகழ்வுகள்...

நாய்க்குட்டிய குளிப்பாட்டி பிறகு அது மறுபடியும் சேத்தில புரண்டு
விளையாடுமே அந்த தருணம்

இதெல்லாமே தொடர்கதையில வந்து போகும்போது நம்ம வாழ்க்கையில நடந்ததையும் ஒப்பிட்டு பார்த்து அட ஆமா இப்படியெல்லாம் நடந்திருக்கேன்னு மகிழ்ச்சி அடைகிறோமோ அப்ப வருகிற அந்த ஆனந்தத்தை தொடர்கதை மட்டும்தாங்க தரும்.

நடுவரே!

சமீபத்தில ஒரு சீரியல் பாக்க வாய்ப்பு வந்தது. அதில ஸ்கூல்லேர்ந்து திரும்பிய மகள் காய்ச்சோலட வந்திருப்பதை பார்த்த தகப்பன், மனைவியிடம் “பச்ச தண்ணியில குளிக்க வச்சியா? ஐஸ்கிரீம் கொடுத்தியா”ன்னு அடுக்கடுக்கா கேள்வி கேக்கும்போது அட எல்லா அப்பாமார்களும் இப்படிதான் இருப்பாங்கன்னு நான் மனச தேத்திக்கேட்டேன். ஏன்னா இந்த நிகழ்ச்சி அடிக்கடி எங்க வீட்டிலேயும் நடக்கும்.

ஆனா இந்த சிறுகதை இருக்கே அதில ஒரு பிரச்சனை பத்தி சொல்லியிருப்பாங்க அதுக்கு உடனே எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஒரு தீர்வும் இருக்கும். அட அதுக்கப்புறம் என்னாச்சு.. அப்படிங்கற ஒரு நீண்ட தொடரும் போட்டதாதான் அந்த சிறுகதை முடிஞ்சு இருக்கும்.

அடுத்து என்ன நடந்ததுன்னு ஒரு நாள் காக்க வைச்ச சீரியலா இருந்தாலும், அடுத்த பக்கத்த திருப்ப வச்ச நாவலா இருந்தாலும்.., இல்லை ஒரு வாரம் காக்க வைச்ச வார இதழ் தொடர்கதையா இருந்தாலும்.., காக்க வைத்த நாட்களிலும், காக்க வைத்த நிமிடங்களும்.., காக்க வைத்த பக்கங்களும்.. அடுத்து என்ன அடுத்து என்னனென்னு நம்ம மனச சிந்திக்க வைக்கும் இது நமது கற்பனைத்திறனையையும் வளர்க்கும் கதையிலும் நல்ல முடிவையும் எடுத்துரைக்கும்.

அதனால ஒரே பக்கத்தோட முடிஞ்சு போன.., கற்பனை திறனை வளர்க்க வல்லாத சிறுகதையைவிட.. நீண்டு தொடர்ந்து வாழ்க்கையின் பிம்பங்களை பிரதிபலிக்கும் கற்பனை திறனை வளர்க்க உதவும் தொடர்கதையே படிக்க.. பாக்க சிறந்தது, சிறந்தது என்று கூறி என் இந்த வாதம் இத்தோடு முடியவில்லை இன்னும் இருக்குன்னு சொல்லி அடுத்த என் வாதம் வரும்வரை காத்திருக்க தொடரும் போடறேன்;-)

Don't Worry Be Happy.

என்ன சூப்பராக வாதங்களை வைத்து இருக்காங்க என்னதணி தோழிகள்.
அப்புறம் நான் என்னத்த சொல்றது .
வாதங்களை பார்த்து எதிரணியினர் ஓடிப்போய்விட்டார்களா
உசுப்பேத்திவிடுற நடுவரையும் காணோமே ...
அனைவரும் விரும்புவது தொடர்கதையே
இன்றைய உலகத்தில் புத்தகங்களின் விற்பனை அதிகம்.
மக்களின் மனதில் நல்ல கதைகள் காவியமாய்
இன்றளவும் நிற்ப்பது தொடர்கதைகளே..
இதற்க்கு மேல் தொடர்கதையின் மகிமையை சொல்ல வார்த்தை கிடையாது
நல்ல தீர்ப்பை வழ்ங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நடுவரை.
சிறந்தது தொடர்கதையே.. தொடர்கதையே...

வாழு, வாழவிடு..

நடுவரே,தொடர்கதைகள் நம் வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை

அடிப்படையாக கொண்டு கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதப்படுகிறது.

தொடர்கதைகள் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் படிப்பவர்களுக்கு

பாடமாகவும் இருக்கிறது.கதையில் இடம்பெறும் சம்பவங்கள் நம்மை சிந்திக்க

வைக்கிறது.ஒரு பிரச்சனையை பல்வேறு கோணங்களில் பார்க்கச்

செய்கிறது.எச்சரிக்கை உணர்வை தருகிறது.மனம் சோர்வுறும் சமயங்களில்

புத்துணர்வு தருகிறது.நம் வாழ்வுடன் தொடர்புபடுத்தி மகிழச் செய்கிறது.பல்வேறு

துறை தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.ஆராய்ந்து

பார்த்தல்,புரிதல் என்று பலவற்றை சொல்லிச் செல்கிறது.மாறி வரும்

காலகட்டங்களை வாசகர்கள் அறிய உதவுகிறது.தொடர்கதைகள்

காலமாற்றங்களை தன்னுள் கொண்டுள்ளது.

தொடர்கதை என்பது உங்கள் ரசனைக்கும்,அறிவிற்கும்,மனதிற்கும் எண்ணற்ற

விஷயங்களை அருவியாய் பொழிவது,இதமாய் தொடுவது.உங்களை சிரிக்கவும்,

அழுகவும்,சிந்திக்கவும்,மகிழவும்,நெகிழவும்,ரசிக்கவும்,வியக்கவும் வைத்த

தொடர்கதைகளே மிகச் சிறந்தது.

நடுவரே,ரமணிசந்திரன் அவர்கள் ஒரு மாத இதழிற்கு அளித்த பேட்டியை படிக்க

நேர்ந்தது.அதில் அவர் தன் கதைகள் கணவன் மனைவி சண்டையை

குறைத்திருப்பதாக கூறியுள்ளார்,நடுவரே.தன் கதாநாயகி போல

தைரியமாக,உறுதியோடு வாழ்வதாகவும்,கதாநாயகன் போன்று அன்பான

கணவனாக நடந்து கொள்வதாகவும் தன் வாசகர்கள் தன்னிடம் தெரிவித்ததாக

கூறியிருந்தார்.இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி நடுவரே.

//ஏன் தொடர்கதையையும் பாகமா பாகமா பிரித்து கொடுக்கிறாங்க, தொடர்கதை ஒரே வல வல கொல கொல தான்//

நடுவரே,உங்களுக்கே தெரியும் பெரும்பாலான சரித்திரக் கதைகளே பல

பாகங்களை கொண்டுள்ளது.தொடர்கதைகளாக வெளிவந்து பின்னர் புத்தக வடிவம்

பெற்று இரண்டு மூன்று பாகங்களாக வெளி வருகிறது.பொன்னியின் செல்வன்

ஐந்து பாகங்கள்,ஜலதீபம் நான்கு பாகங்கள்,ராஜமுத்திரை இரண்டு

பாகங்கள்,கடற்புறா மூன்று பாகங்கள் என்று சொல்லிக் கொண்டே

போகலாம்.நடுவரே,இந்த கதைகளை எல்லாம் ஒரே புத்தகமாக வெளியிட

முடியாது என்பது தங்களுக்கே தெரியும்.முழு கதையையும் பார்த்தால்

மிகப்பெரிது.புத்தகம் வெளியிடுவது சாதாரண விஷயம் கிடையாது,பர்ஸ்

வெயிட்டாக இருக்க வேண்டும்,வாசகர்களாலும் வாங்க முடிய

வேண்டும்.நடுவரே,இந்த அச்சிடுவது,பைண்டிங் இவற்றை பற்றியெல்லாம்

நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.கதையை எவ்வாறு பாகம்

பிரிக்கிறார்கள் என்பதை மட்டும் ஒரு தொடர்கதையை கொண்டே காண்போமா

நடுவரே.

நடுவரே,நாம் கடற்புறாவை எடுத்துக் கொள்வோம்.மூன்று பாகங்கள் கொண்டது

என்பது தங்களுக்கு தெரியும்,மிக அற்புதமான ஒரு கதை என்பதும் தங்களுக்கு

தெரிந்திருக்கும்.பரவாயில்லை, நான் சொல்வதையும் ஒருதரம் கேளுங்கள்.

முதல் பாகத்தில்,கருணாகரப் பல்லவன் கலிங்கத்தில் பிரவேசம் செய்வதில்

இருந்து கதை தொடங்குகிறது.நுழைந்தவுடனே அவன் சந்திக்கும்

ஆபத்துக்கள்,அந்த நேரத்தில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் காஞ்சனாதேவியை

காதலிப்பது,சிறையில் அடைபட்டு மரணத்தை எதிர்நோக்கி

காத்திருப்பது,பின்னர் அநபாயனும்,காஞ்சனா தேவியும் வந்து மீட்டுச்

செல்வது,கலிங்கத்தில் இருந்து தப்பி வர திட்டமிடுவது,கப்பலில் ஏறவரும்

கடைசி நேரத்தில் கண்டு பிடிக்கப்படுவது,கருணாகர பல்லவன் மட்டும் எவ்வாறு

தனித்து போரிட்டு தன்னை சேர்ந்தவர்களை காப்பாற்றி கப்பலில்

ஏற்றுகிறான்.நடுவரே,இந்த இடம் வெகு அற்புதமாக இருக்கும்.இப்படியொரு

வீரனா என்று அசந்து விடுவீர்கள்.காதலி கப்பலில் இருக்கிறாள்,கருணாகர

பல்லவனோ கரையில் தனியொருவனாய் போரிட்டு கொண்டிருக்கிறான்.கடற்புறா

செல்கிறதே வாருங்கள் என்று கரையை நோக்கி கதறுகிறாள்,கண்களில் வழியும்

கண்ணீர் காட்சியை மறைக்கிறது.கப்பல் பாய் விரித்துஓடுகிறது.நடுவரே,இத்தோடு

முதல் பாகம் முற்றும்.

நடுவரே,கதை முழுவதும் படிக்க படிக்க சுவாரஸ்யம் கூடிக் கொண்டே

செல்லும்,உண்மையைச் சொல்லுங்கள் நடுவரே,கதை எந்த இடத்திலாவது

இவர்கள் குறிப்பிட்டது போல் உள்ளதா??? நடுவரே,மிகப்பெரிய கதையை நான்

ஒருசில வரிகளில் அடக்கியுள்ளேன்.அத்தியாயங்கள் ஐம்பதை

தாண்டும்.இப்போது,உங்கள் மனதில் கருணாகர பல்லவன் நிலை என்ன என்று

அறிய ஆவலாக இருக்கிறதா,எதிரிகளுடன் தனியொருவன் எத்தனை நேரம்

போராடுவான்,காஞ்சனா தேவி மீண்டும் தன் காதலனை சந்திப்பாளா

என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதா.அடுத்த பாகத்தை படிக்க மனம்

துடிக்கிறதா??

கதைகள் பாகம் பிரிப்பதற்கான அடிப்படை என்னவென்று நான் சொல்லவும்

வேண்டுமா,நடுவர் அவர்களே.

அன்புடன்
நித்திலா

\\இதெல்லாமே தொடர்கதையில வந்து போகும்போது நம்ம வாழ்க்கையில நடந்ததையும் ஒப்பிட்டு பார்த்து அட ஆமா இப்படியெல்லாம் நடந்திருக்கேன்னு மகிழ்ச்சி அடைகிறோமோ அப்ப வருகிற அந்த ஆனந்தத்தை தொடர்கதை மட்டும்தாங்க தரும்.\\

\\மக்கள் ஆமோதிப்பதால் தான் அவ்வாறு சீரியலே எடுக்கப்படுகிறது.. அத்தனை விளம்பர ஸ்பான்சர்கள் சும்மா ஒன்னும் கிடைப்பதில்லை.. பார்க்காமலா எடுக்கிறார்கள்.. நடக்காததையா காட்டுகிறார்கள்? சொல்லுங்க நடுவரே ;)\\

இது போல தான் நடுவரே, இப்படி சிறு சிறு விசயங்களை ஒப்பிடரேன்னு ஆரம்பிச்சு அதுலயே ஊறி, பின் அந்த கதாநாயகியே (அ) கதாநாயகனையே தான்தான்னு கற்பனை பண்ணி, தன் வாழ்க்கையில் நடக்குறத எல்லாம் அந்த கதாப்பாத்திரங்கள் வாழ்வோடு ஒப்பிட்டு குழம்பிடறாங்க. பின் வீட்டில் நடக்கும் சின்ன விசயத்தையும் பெரிய பிரச்சனைகளா கற்பனை பண்ணி வாழ்வை கெடுத்துக்குறாங்க. பெண்கள் ஆண்கள் இருவருக்கும் இது பொருந்தும்.

இந்த தொடர்கதைகள் ஸ்லோ பாய்சன் போல கொஞ்சம் கொஞ்சமா மனதை நிதர்சனத்தில் இருந்து இழுத்து ஒரு பொய்யான உலகத்துக்கு கொண்டு போய்டுது என்பதை எதிரணியினர் வாதத்திலேயே நீங்க புரிஞ்சுக்கலாம் நடுவரே.

இதை இன்னும் விளக்கனும்னா உங்களுக்கு புரிய ஒரு கதையை வைத்தே சொல்றேன், சந்திரமுகி கதையை எடுத்துக்கங்க, கங்கா கதையை கேட்டதோடு விடாமல், அதையே "தொடர்ந்து", அதை பற்றியே சிந்தித்ததின் விளைவு அவள் மனம் குழம்பி மனநோயில்விட்டது. "கங்கா சந்திரமுகி போல் நின்னா, சிரிச்சா, சந்திரமுகியா மாறிட்டா." இது கதை என்பதால் சற்று அதிகப்படுத்தி காட்டி இருந்தார்கள், ஆனால் உண்மையிலும் இப்படி நடக்க தான் செய்கிறது, மனதிற்கு இயல்பாகவே ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் இருப்பது தான் இதற்க்கு காரணம்.

அது ஒரு த்ரில், மயக்கம்னு அவங்களே சொல்றாங்க. ரிலேக்சேஷன் என்பது அமைதியை தரனும் நடுவரே, த்ரில், சஸ்பென்ஸ் எல்லாம் அமைதியா சொல்லுங்க, ஒரு ஸ்ட்ரெசிலிருந்து இன்னொரு ஸ்ட்ரெசுக்கு மாரறாங்க என்பது தான பொருள், ஆனால் இது புரியாமலையே எதிரணி பேசுறாங்க, அதை தான் ஸ்லோ பாய்சன் அப்படீன்னு சொல்றேன். ஆனால் சிறுகதைகள் இப்படி இல்லை, அதை படிக்கும் பொது ஒரு டைவெர்ஷியன் நம் மனசுக்கு கிடைக்கும், பின் எளிதில் அதிலிருந்து வெளியில் வந்துடலாம்.

\\சீரியலால் தான் பிரச்சனை..என்றால் அவளுக்கு எந்த பிரச்சனையையும் சமாளிக்க தெரியாது என்று தான் அர்த்தம் நடுவரே.. ஏதோ அவளிடமே சில பக்குவம் இல்லை எனப் பொருள்.\\

எதிரணியினர் பக்குவமாக இருப்பதில் மகிழ்ச்சி. ஆனால் எல்லோரிடமும் இந்த பக்குவம் எளிதில் வருவதில்லை தோழி, அப்படியே ஒரு கதையில் மூழ்கி விடுவார்கள், இதை விளக்க ஒப்செஷன் என்பது சரியான வார்த்தையாக இருக்கும்னு நினைக்கிறேன்.

இன்னும் சரியாக சொல்லப்போனால் பெண்கள் விடுதலைக்கு பெரிய தடையாக இருப்பது இந்த சீரியல்களே. மீண்டும் மீண்டும் பெண் என்றால் இப்படிதான் இருக்கணும், இப்படிதான் நடக்கனும்னு சொல்லி சொல்லி அவளுக்கு என்ன கொடுமை நடந்தாலும் அப்படியே சகிச்சி தியாகத்தின் உருவா இருக்குற ஒரு கதாப்பாத்திரத்தை கற்பனைல ஈசியா சக்செஸ் பார்முலா என்கிற பெயரில் கான்பிக்குறாங்க. நடப்பதை தான் காட்டுறாங்கன்னு நம் மனமும் ஏத்துக்குது. எந்த ஒரு தொடர்கதையாவது ஒரு அடங்காபிடாரி வில்லி பெண்ணும், ஒரு அமைதியான பெண்ணும் இல்லாமல் இருக்கா சொல்லுங்க, குறிப்பா சீரியல்கள், எனக்கு தெரிஞ்சு இல்லை, அப்படியே இருந்தாலும் அது ஆயிரத்தில் ஒன்னாகதான இருக்கும்.

தொடர்கதைகளில் ஒபெநிங் எல்லாம் நல்லாதான் இருக்கும் ஆனால் பினிஷிங் சரியா இருப்பது அரிது. எதிரணி தோழிகள் சிறுகதைகளில் பின் அந்த கதையில் என்ன ஆச்சுன்னு தெரியாது அப்படீன்னு சொன்னாங்க. எத்தனையோ தொடர்கதைகளில் பல கதாபாத்திரங்கள் என்ன ஆனான்கன்னே சொல்லாமல் கதையை முடிச்சிடுவாங்க, அவங்க போட்ட முடிச்சியை அவங்கலாலேயே எடுக்க முடியாது.

//பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் படிப்பவர்களுக்கு பாடமாகவும் இருக்கிறது.கதையில் இடம்பெறும் சம்பவங்கள் நம்மை சிந்திக்க வைக்கிறது.ஒரு பிரச்சனையை பல்வேறு கோணங்களில் பார்க்கச்செய்கிறது. எச்சரிக்கை உணர்வை தருகிறது.மனம் சோர்வுறும் சமயங்களில் புத்துணர்வு தருகிறது. "நம் வாழ்வுடன் தொடர்புபடுத்தி மகிழச் செய்கிறது". பல்வேறு துறை தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.ஆராய்ந்து பார்த்தல்,புரிதல் என்று பலவற்றை சொல்லிச் செல்கிறது.மாறி வரும் காலகட்டங்களை வாசகர்கள் அறிய உதவுகிறது.தொடர்கதைகள் காலமாற்றங்களை தன்னுள் கொண்டுள்ளது. தொடர்கதை என்பது உங்கள் ரசனைக்கும்,அறிவிற்கும்,மனதிற்கும் எண்ணற்ற விஷயங்களை அருவியாய் பொழிவது,இதமாய் தொடுவது.உங்களை சிரிக்கவும், அழுகவும்,சிந்திக்கவும்,மகிழவும்,நெகிழவும்,ரசிக்கவும்,வியக்கவும்.//

இவர்கள் கொடுத்திருக்கும் அனைத்து நல்ல காரியங்களை சிறுகதைகளும் செய்கிறது நடுவர் அவர்களே. வாழ்வுடன் தொடர்பு படுத்துவதிலும் ஒரு அளவை தருகிறது.

ஒரு முக்கியமான கருத்து நடுவர் அவர்களே. கதைகள் என்பது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் மிக அவசியமானது. அவர்களுக்கு ஏற்றது சிறுகதைகளே. ஒரே கதாப்பாத்திரம் எல்லா கதைகளிலும் வந்தாலும், ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையே குழந்தைகளுக்கு. சிறுகதைகள் மூலம் நாம் பல நல்ல கருத்துகளை சொல்லித்தரலாம். பெரியவர்களையே மயக்கும் இந்த தொடர்கதைகள் குழந்தைகள் மூளையை எந்த அளவுக்கு பாதிக்கும் சிந்திச்சு பாருங்க. பெரியவர்கள் சீரியல் பார்க்கிறேன்னு ஆரம்பிச்சு, அவங்க கூட குழந்தைகளும் பார்த்து பெரிய மனுசங்களை போல் பேச்செல்லாம் சிறு வயசுலயே பேசுறாங்க. இது ஒரு வயசு வரைக்கும் எங்கே பாப்பா டீவில அந்த லதா ஆண்டி பேசுவாங்களே அதுபோல் பேசுன்னு சொல்லி பேச வைச்சு ரசிக்க நல்ல இருக்கும் போக போக அதன் பின்விளைவுகள் கண்டிப்பா நல்லா இருக்காது.

//பர்ஸ், வெயிட்டாக இருக்க வேண்டும்,வாசகர்களாலும் வாங்க முடிய வேண்டும் //

சிறுகதைகளை அவர்கள் அவர்கள் பர்ஸ்சுக்கு ஏற்றார் போல் வாங்கி கொள்ளாலாம் நடுவர் அவர்களே. பணப்ப்ரச்சனையையும் கிடையாது. இப்படி கதை படிக்கிறேன் சீரியல் பார்க்கிறேன் என விளம்பரதாரர், புத்தகம் எனும் பெயரில் பிறர் பர்ஸ்சை நிரப்பாமல், அந்த நேரத்தில் நாமும் பிறரும் முன்னேற நேரத்தை பயன்படுத்தலாம். அந்த கதாபாத்திரம் என்ன அடுத்து செஞ்சிருக்கும்னு யோசிக்கும் நேரத்தில், நாம் அடுத்து முன்னரே என்ன செய்யலாம்னு யோசிக்கலாமே. உங்கள் சிந்திக்கும் சக்தியை ஏன் உண்மையில் இல்லாத ஒரு கதாபாத்திரத்திர்க்காக சிலவழிக்க வேண்டும், நீங்களே யோசிங்க.

ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவது தான் சிறந்தது என சொல்லமுடியாது, எதனால் நன்மை அதிகம் தீமை குறைவு என்பதை கொண்டுதான் எது சிறந்தது? எது மேன்மையானது என முடிவுக்கு வரமுடியும். அப்படி பார்த்தால் சிறுகதைகளே சிறந்தது என்பது ஐயமில்லவே இல்லை.

இதுவும் கடந்து போகும்.

அடடா... நித்திலா ஆரம்பமே அசத்தலான வாதம். மீன் குட்டிக்கு நீந்த கற்று தரணுமா??? நீங்க பட்டியில் அசத்துவீங்க. //நடுவரே,நீங்கள் ரசித்து படித்த சரித்திரக் கதைகளின் கதாபாத்திரங்கள் உங்கள்

நினைவில் இல்லையா?
// - ஏங்க?? நான் எதை ஒழுங்கா படிச்சேன்??? விடுங்க அந்த கதையை.

//காகிதத்தில் காட்சி தோன்றி,விழி நிறைந்து மனம் லயிக்கும் சிறப்பு கொண்ட

சரித்திரக் கதைகளைவிட தொடர்கதையின் சிறப்பை சொல்ல சான்றொன்றும்

வேண்டுமா என்ன// - நியாயமான கேல்வி, எதிர் அணி என்ன பதில் சொல்ல போறாங்கன்னு பார்த்துட்டு வரேன்.

ஜெயலக்ஷ்மி... அடுத்து நீங்களுமா??? நடத்துங்க. //ஆனா இந்த சிறுகதை இருக்கே அதில ஒரு பிரச்சனை பத்தி சொல்லியிருப்பாங்க அதுக்கு உடனே எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஒரு தீர்வும் இருக்கும்.// - பாவம் ஒரு பக்கத்துல முடிக்கனுமில்லங்க.

ருக்சனா... வந்து உங்க அணியினரை வழி மொழிந்துவிட்டு போனீங்களா??? அடுத்தாப்பல வாங்க கவனிக்கறேன். ;)

யோகலக்ஷ்மி... அப்பாடா பதில் சொல்ல நீங்களாவது வந்தீங்களே... சந்தோஷம் :) //கங்கா சந்திரமுகி போல் நின்னா, சிரிச்சா, சந்திரமுகியா மாறிட்டா." // - டூ பேட். பாவம் ஜோ. //த்ரில், சஸ்பென்ஸ் எல்லாம் அமைதியா சொல்லுங்க// - நோ நோ. //அவளுக்கு என்ன கொடுமை நடந்தாலும் அப்படியே சகிச்சி தியாகத்தின் உருவா இருக்குற ஒரு கதாப்பாத்திரத்தை கற்பனைல ஈசியா சக்செஸ் பார்முலா என்கிற பெயரில் கான்பிக்குறாங்க.// - இதை நானும் பார்த்து பிடிக்காம பொலம்புவேன்.

ம்ம்... எல்லாரும் கடைசி கட்ட வாதத்தை முடிச்சுட்டீங்களா??? இன்னும் மிச்சம் மீதி என்னை குழப்ப ஏதும் இருக்கா?? இருந்தா கொட்டிடுங்க.... ;( இன்னைக்கு தூங்காம யோசிச்சா தான் நாளைக்கு தீர்ப்பு சொல்ல முடியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இப்படி சிறு சிறு விசயங்களை ஒப்பிடரேன்னு ஆரம்பிச்சு அதுலயே ஊறி, பின் அந்த கதாநாயகியே (அ) கதாநாயகனையே தான்தான்னு கற்பனை பண்ணி, தன் வாழ்க்கையில் நடக்குறத எல்லாம் அந்த கதாப்பாத்திரங்கள் வாழ்வோடு ஒப்பிட்டு குழம்பிடறாங்க. பின் வீட்டில் நடக்கும் சின்ன விசயத்தையும் பெரிய பிரச்சனைகளா கற்பனை பண்ணி வாழ்வை கெடுத்துக்குறாங்க. பெண்கள் ஆண்கள் இருவருக்கும் இது பொருந்தும்.//

நடுவர் அவர்களே, எதிரணி தோழி சந்திரமுகி படத்தை ஒருமுறை பார்த்திருந்தால் இப்படி சொல்லுகிறார் போலும். எல்லாம் மனபிராந்தி தான் :) சித்தி தொடரை பார்த்து சித்தி மாதிரி வர முடியுமா? இல்லாவிட்டால் மெட்டி ஒலி தொடரை பார்த்து சரோ போன்ற பொறுமைசாலியான மருமகளாக முடியுமா? தொடர்களில் காட்டுவது போல ஒரு வாரத்தில் முன்னேற்றம் காண முடியுமா? என்ன பேசுகிறார் எதிரணி தோழி?தொடர்களில் நாம் காணும் கதாநாயகி போலோ, கதைகளில் நாம் காணும் நாயகிகள் போலோ கற்பனையில் வாழ்ந்தால், நடக்கிற கதையா இது?வீட்டு பிரச்சனைகளை வீட்டு அளவிற்கு தான் கற்பனை பண்ண முடியுமே தவிர "ஸ்பெக்ட்ரம் " அளவிற்கு உலகளாவ கற்பனை பண்ண முடியாது எதிரணி தோழியே :) எங்கள் தொடர்களும் அப்படியே. அதே அளவில் தான் நாங்கள் வைத்திருக்கிறோம்.

//இந்த தொடர்கதைகள் ஸ்லோ பாய்சன் போல கொஞ்சம் கொஞ்சமா மனதை நிதர்சனத்தில் இருந்து இழுத்து ஒரு பொய்யான உலகத்துக்கு கொண்டு போய்டுது என்பதை எதிரணியினர் வாதத்திலேயே நீங்க புரிஞ்சுக்கலாம் நடுவரே.//

நடுவர் அவர்களே, எங்கள் தொடர்கதை இவர்களுக்கு ஸ்லோ பாய்சன் மாதிரி தெரிகிறதென்றால், இவர்கள் சிறுகதை எங்களுக்கு அண்டா பாலில் கலந்த ஒரு துளி விஷம் போல் அல்லவா தெரிகிறது. ஆகமொத்தம் விஷம் விஷம் தானே :)

//சந்திரமுகி கதையை எடுத்துக்கங்க, கங்கா கதையை கேட்டதோடு விடாமல், அதையே ".....ஆனால் உண்மையிலும் இப்படி நடக்க தான் செய்கிறது, மனதிற்கு இயல்பாகவே ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் இருப்பது தான் இதற்க்கு காரணம்//

நடுவர் அவர்களே, எதிரணி தோழிக்கு தொடர்கதை உலகில் ஒரு நல்ல எதிர்காலம் உண்டு என்று சொல்லி வையுங்கள். சிறந்த கற்பனைவளம் அவரிடம் கொட்டி கிடக்கிறது. இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய கற்பனை செய்வது மிகவும் அரிதே :)

//மயக்கம்னு அவங்களே சொல்றாங்க. ரிலேக்சேஷன் என்பது அமைதியை தரனும் நடுவரே, த்ரில், சஸ்பென்ஸ் எல்லாம் அமைதியா சொல்லுங்க, ஒரு ஸ்ட்ரெசிலிருந்து இன்னொரு ஸ்ட்ரெசுக்கு மாரறாங்க என்பது தான பொருள்//

நடுவர் அவர்களே, சிறுகதைகளில் மட்டும் என்ன வாழ்கிறதாம். அங்கேயும் இவர்கள் சொல்லும் அதே தான் நடக்கிறது. ஒரு துளி விஷம் என்றாலும் அதே வீரியம் தான். ஒரு குவளை விஷம் என்றாலும் அதே வீரியம் தான். இதில் அளவு ஒன்றே வித்தியாசப்படும்.

//அதை படிக்கும் பொது ஒரு டைவெர்ஷியன் நம் மனசுக்கு கிடைக்கும், பின் எளிதில் அதிலிருந்து வெளியில் வந்துடலாம்//

நடுவர் அவர்களே, ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு போக ஆற்றை கடந்தாக வேண்டும். அந்த ஆற்றில் ஆளை கொல்லும் முதலைகளும், ஆளையே விழுங்கும் பாம்புகளும் அதிகம். அந்த ஆற்றை எந்த தீங்கும் இல்லாமல் கடந்து விட்டார்களாம். அது போல தான் இவர்கள் படித்த சிறுகதைகளும். ஒரு நிமிடம் வந்து போகும் விளம்பரபடங்கள் எத்தனை உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதை எந்த கணக்கில் சேர்ப்பார்கள் இவர்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//அதே அளவில் தான் நாங்கள் வைத்திருக்கிறோம்.//

உங்களை போன்ற பக்குவம் எல்லோருக்கும் இருக்காது தோழி. வெளி உலகில் அவ்வளவு பழக்கம் இல்லாதவர்கள், தொலைகாட்சியில் காட்டுவதை தான் வெளியுலகமாக நினைக்கிறார்கள். அவர்கள் எளிதில் அவர்களுக்கும் தெரியாமல் இந்த கதாபாத்திரங்களை நம்புகிறார்கள். குழந்தைகளின் போக்கே இதற்கு சான்று. நிச்சயமாக சொல்லுவேன் மெகா சீரியல் பார்க்கும் குழந்தைகள் தேவையற்ற வார்த்தைகளை எளிதில் கற்றுகொள்கிறார்கள். வெளி உலகம் அறியாதவர்களும் இந்த குழந்தைகள் போலவே.

//எங்கள் தொடர்கதை இவர்களுக்கு ஸ்லோ பாய்சன் மாதிரி தெரிகிறதென்றால், இவர்கள் சிறுகதை எங்களுக்கு அண்டா பாலில் கலந்த ஒரு துளி விஷம் போல் அல்லவா தெரிகிறது. //

ஆக மொத்தத்தில் அதிக தீமை தொடர்கதைகளில்னு ஒத்துக்குறீங்க, நல்லது. நீங்க துளி விஷம் என்று சொல்வதை ஒத்துக்க முடியாது, பேரமிர்தம் என்று வேணும்னா சொல்லலாம் சிறுகதைகளை, ஏன்னா ஒழுக்கநெறி கதைகள் சிறுகதைகளில் தான் அதிகம்.

//எதிரணி தோழிக்கு தொடர்கதை உலகில் ஒரு நல்ல எதிர்காலம் உண்டு என்று சொல்லி வையுங்கள். சிறந்த கற்பனைவளம் அவரிடம் கொட்டி கிடக்கிறது. //

நன்றி தோழி. இது கற்பனையல்ல, கதையல்ல நிஜம். :)

//ஒரு நிமிடம் வந்து போகும் விளம்பரபடங்கள் எத்தனை உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதை எந்த கணக்கில் சேர்ப்பார்கள் இவர்கள்//

எந்த விளம்பரம் ஒரே ஒரு முறை மட்டும் ஒளிபரப்ப படுகிறது நடுவர் அவர்களே. தொடர்ந்து அதையே போடும் போதுதான் அதன் தாக்கம் அதிகப்படுகிறது.

மீண்டும் சொல்கிறேன் நடுவர் அவர்களே, தொடர் கதைகள் ஒருவர் மனதை சம்மட்டியால் அடிப்பது போல் மீண்டும் மீண்டும் அடித்து பொய்யான ஒன்றை இதுதான் மெய் என நம்ப வைக்கிறது.

எத்தனை பேர் சரோவை போல் நாமும் பொறுமையாவே இருந்து பார்ப்போம் காலம் மாறும்னு நினைச்சு, தன்னை தானே இழந்துகிட்டு இருக்காங்கன்னு எதிரணி தோழிக்கு தெரியாமல் இருக்கலாம். பொறுமை வேண்டும் தான் இல்லைன்னு சொல்லலை, ஆனால் அடிப்படையா ஒருவருக்கு கிடைக்க கூடிய சுதந்திரம் பறிக்க பட்டாலும், அதையும் தாங்கிகிட்டு இருக்கணும்னு இந்த சீரியல்கள் சொல்லித்தருது, இது சரியா.

சினிமாவுல பறந்து பறந்து சண்டை போட்டா இது நம்மால் முடியாது, இது பொய்னு புரியுற நமக்கு, ஒரு வில்லியோ வில்லனோ மோசமா சிந்திக்கும்போது அவங்க நடிக்குராங்கன்னு புரியறதில்லை, இல்லனா "இவன் திருந்தவே மாட்டானா," "அவங்க குடும்பத்தை இப்படி கொடுமை படுத்துறானே" இப்படியெல்லாம் பொலம்ப மாட்டாங்க. அதே போல் கதாநாயகனை பார்த்து "இவனுக்கு எவ்வளவு பெரிய மனசு," "இவளை இன்னும் இவங்க புரிஞ்சுக்களையேன்னு" புகழவும் பரிதாபமும் பட மாட்டாங்க. மெட்டி ஒலி புடவை, சித்தி புடவை, ஆனந்தம் புடவை இவை எல்லாம் நல்ல விற்பனை ஆக காரணமும் இதுவே.

எனவே சிறுகதைகளே சிறந்ததுன்னு சிறந்த தீர்ப்பை சொல்லுங்க நடுவர் அவர்களே.

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்