பட்டிமன்றம் - 34 : தொடர்கதையா?சிறுகதையா?

காத்திருந்து யாரும் நடுவரா வராம பட்டி துவங்காம இருந்த காரணத்தால் நானே துவங்குறேன். வாதிட கண்டிப்பா வந்துடுவீங்கன்னு நம்பறேன். :) ஏமாற்றாம வந்துடுங்க. நம்ம தலைப்பி :

சிறந்தது எது? தொடர்கதையா?சிறுகதையா?

சூப்பரான தலைப்பை தந்த பவித்ரா'கு மிக்க நன்றி.

இதில் கதை புத்தகம், டிவி சீரியல் என எல்லாமே அடங்கும். மற்ற பட்டியின் விதிமுறைகள் இதுக்கும் பொறுந்தும்.

நடுவருக்கு காலை வணக்கம்.

தொடர்கதைக்குள் டிவி சீரியல் அடங்கும் என்கிறீர்கள்.அந்த சீரியல் எப்படி

எடுக்கப்படுகிறது என்பதை பார்ப்போமா,நடுவர் அவர்களே.

இப்ப ஒரு கதையென்றால் நீங்க எப்படி யோசிப்பீங்க.கதைகரு

கதாபாத்திரங்கள்,கதையில் சில நிகழ்வுகள்,சில உரையாடல்கள்,முடிவு என்று

இருக்கும்.ஆனால்,இந்த சீரியல்கள் அப்படி கிடையாது சீரியல்களின் கதையை

எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்று பார்த்தால்,மிகப் பெரிய

குடும்பம்,இல்லையென்றால் ஒருவரே இருவரை மணப்பது,அந்த வீட்டில் நான்கு

குழந்தைகள்,இந்த வீட்டில் நான்கு குழந்தைகள் இப்படி இருக்கும்.அப்போது தானே

நிறைய கிளைக் கதைகளை உருவாக்க முடியும்.வருஷக் கணக்கில் ஓட்ட முடியும்.

கதாநாயகி வராவிட்டாலும் அவர்களை வைத்து ஓட்டலாம்:)அப்புறம் டிஆர்பி

ரேடிங்,எந்த கதாபாத்திரத்தை மக்கள் ரசிக்கிறார்களோ அதை சுற்றியே கதை

நகரும்,ஒருவர் நடிக்க வராவிட்டால் அந்த கேரக்டர் க்ளோஸ் ஆகிவிடும்,வேறொரு

கதை வந்துவிடும்.நூறு எபிஸோட் வரை ஒரு டைரக்டர் இருப்பார்,திடீரென்று அவர்

காணாமல் போய்விடுவார்,பிறகொருவர் வந்து கதையை அவர் இஷ்டத்திற்கு

கொண்டு செல்வார்.கதை என்றால் ஒன்றிரண்டு நெகட்டிவ் கதாபாத்திரங்கள்

இருக்கும்.சீரியலை பார்த்தீர்கள் என்றால் கதாநாயகியை தவிர எல்லாமே நெகட்டிவ்

கேரக்டர்கள்தான்.பெரும்பாலும் பெண்களையே வில்லிகளாக சித்தரிப்பார்கள்.ஒரு

பெண் கதாநாயகி,ஒரு பெண் வில்லி,பெரும்பாலும் ஆறு வருடங்கள் கதாநாயகி

கஷ்டப்பட்டுவிட்டு,ஏழாவது வருடத்தில் போராடத் தொடங்கி,எட்டாவது வருடத்தில்

வெற்றி பெற்று சீரியலை முடிப்பார்கள்.இதுதான் சீரியல்களின் கதை,நடுவரே.

நடுவரே,தொடர்கதைக்கென்று ஒரு அழகு உள்ளது,சிறப்புள்ளது.இவையெல்லாம்

அடங்கியது தொடர்கதையா என்று நன்கு யோசித்து பாருங்கள்.உண்மையான

தொடர்கதையின் சிறப்பை சொல்ல கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்.

அன்புடன்
நித்திலா

//இதுதான் சீரியல்களின் கதை//

நம் தோழி எழுதியிருக்கும் இந்த சிறுகதையே படிக்க எவ்வளவு நல்லா இருக்கு பார்த்தீங்களா நடுவர் அவர்களே. அது தான் சிறுகதையின் சிறப்பு. எங்க அணியினர் சொல்லாம விட்ட கருத்துக்களை கூட தேடி எங்களுக்காக சொல்லி இருக்காங்க எதிரணி தோழி :), நன்றி தோழி. அவங்களே இந்த சீரியல் கொலருபடியை புட்டு புட்டு வைச்சிட்டாங்க. இப்படி ஒரு கதை வெறும் கமெர்ஷியல் நோக்குல உருவாகினா, அது எப்படி சிறந்ததா இருக்க முடியும். எனவே சிறுகதைகளே சிறந்தது.

இதுவும் கடந்து போகும்.

//சிறு சிறு விசயங்களை ஒப்பிடரேன்னு ஆரம்பிச்சு அதுலயே //

நடுவரே,இப்ப உங்கள் தோழியின் திருமணத்தில் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான

நிகழ்ச்சி இருக்கும்,நகைச்சுவையான நிகழ்வுகள் இருக்கும்.நீங்கள் ஒரு

தொடர்கதை படிக்கின்றபோது அந்த கதையில் இந்த நிகழ்வுகள் வரும்,அப்போது

உங்கள் மனம் ஒரு நிமிடம் மகிழும்,ஆஹா,நம் தோழி திருமணத்தில்

நடந்தமாதிரி இருக்கேனு நினைச்சு பார்ப்பீங்க,அதைத்தான் எங்களணியில்

கூறியுள்ளோம்.

//தொடர்கதைகள் ஸ்லோ பாய்சன் போல கொஞ்சம் கொஞ்சமா மனதை//

ஸ்லோ பாய்சனா??? நடுவரே,என்ன நீங்க ஸ்லோ பாய்சன் சிறந்ததானா

கேட்டிருக்கீங்க? நடுவரே,தொடர்கதையில் ஒரு துளி விஷம்கூட

கிடையாது.அதனால் நீங்கள் அடைந்த தீமை என்னங்க? பாண்டிய நாட்டின் முத்து

வளத்தை சொல்வதுதான் ராஜமுத்திரை,சோழர்கள் எவ்வாறு கடல்கடந்து

சென்றார்கள்,அவர்களின் கப்பல் படையின் திறமை என்ன என்றெல்லாம்

கடற்புறா கூறும்.எத்தனை புத்தகங்களை படித்து,தமிழ் இலக்கியங்களை படித்து

கதை எழுதுகிறார்கள்.விஷமொன்றை ஏன் இவ்வளவு சிரமப்பட்டு விதைக்க

வேண்டும்.விஷமென்றால் அவை எப்படி வேர்விட்டு வளர்ந்தது,சிறப்பு

வாய்ந்ததாக இருக்கிறது? சரி,சரித்திரக் கதையை விடுங்கள்.இன்றைய கதைக்கு

வருவோம்.

வெண்ணிலவு சுடுவதென்ன கதையில் கதாநாயகியை பற்றி கூறுகையில்

ஆசிரியர் அவர் பணியைப் பற்றியும் கூறியிருப்பார்.அதற்கு வாசகர் ஒருவர்

நீங்கள் கதையின் நாயகியை பற்றி கூறுகையில் எங்களுக்கும் நிறைய ஐடியாஸ்

கொடுத்திருக்கீங்கனு சொல்லியிருக்காங்க.அந்த கதையில் வரும்

அம்மா,பெண்,சுதாகரி,பவித்ரா உரையாடல்கள் தாய்மையையும்,குழந்தையின்

மனதையும் அழகாக சொல்லியிருப்பதாக

பாராட்டியிருப்பார்கள்.நடுவரே,எத்தனையோ உதாரணங்கள் சொல்ல

முடியும்.நேரமின்மை காரணமாக சிலவற்றோடு நிறுத்திக் கொள்கிறேன்.

தொடர்கதைகளால் யாரோ ஒருவர் ஏதோ ஒரு விதத்தில் பயன்

பெறுகிறார்கள்,அதுவே உண்மை.பயன் என்றால் மகிழ்ச்சி,ரசனையையும்

சேர்த்திதான் நடுவர் அவர்களே.

அன்புடன்
நித்திலா

///சிறுகதைகளை அவர்கள் அவர்கள் பர்ஸ்சுக்கு ஏற்றார் போல் வாங்கி கொள்ளாலாம் நடுவர் அவர்களே. பணப்ப்ரச்சனையையும் கிடையாது. இப்படி கதை படிக்கிறேன் சீரியல் பார்க்கிறேன் என விளம்பரதாரர், புத்தகம் எனும் பெயரில் பிறர் பர்ஸ்சை நிரப்பாமல், அந்த நேரத்தில் நாமும் பிறரும் முன்னேற நேரத்தை பயன்படுத்தலாம். அந்த கதாபாத்திரம் என்ன அடுத்து செஞ்சிருக்கும்னு யோசிக்கும் நேரத்தில், நாம் அடுத்து முன்னரே என்ன செய்யலாம்னு யோசிக்கலாமே. உங்கள் சிந்திக்கும் சக்தியை ஏன் உண்மையில் இல்லாத ஒரு கதாபாத்திரத்திர்க்காக சிலவழிக்க வேண்டும்/////

நடுவரே,ஒரு கதையை ஒரே பாகமா போட்டா புத்தகத்தின் விலை ஐந்நூறு ஆயிரம்

வரும்.தனி பாகமாக வரும்போது இருநூறு,முந்நூறு, என்று

இருக்கும்.பதிப்பகத்தார்,வாசகர்கள் இருவர் நிலையையும் யோசிக்கனும் பாகம்

பிரிக்கறப்ப அப்படீனு சொல்லியிருக்கேன்.மத்தபடி தொடர்கதைகள் அத்தனையும்

விலை உயர்ந்தது கிடையாது,நாற்பது ரூபாய் புக் இருக்கு.சிறுகதை தொகுப்புனு

போட்டு இருநூறு ரூபாய்க்கும் இருக்கு.கண்ணம்மா,விலை கொண்டு ஒன்றின்

சிறப்பை தீர்மானிக்க முடியாது.தாங்கள் அறியாததா தோழி.

நடுவரே,நீங்கள் சினிமா பார்ப்பீர்களா,டிவி பார்ப்பீர்களா,பீச்,ஹோட்டல்,டூர் எல்லாம்

செல்வீர்களா??அதற்கு எவ்வளவு ரூபாய் செலவிடுவீர்கள்.அதனால் நீங்கள்

அடைந்தது என்ன?சினிமாவில் வரும் காட்சியை பார்த்து தேம்பி தேம்பி

அழுவார்களாமே,அதெல்லாம் ஏன் நடுவர் அவர்களே.

அன்புடன்
நித்திலா

\\\\\\\ஆனா இந்த சிறுகதை இருக்கே அதில ஒரு பிரச்சனை பத்தி சொல்லியிருப்பாங்க அதுக்கு உடனே எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஒரு தீர்வும் இருக்கும். அட அதுக்கப்புறம் என்னாச்சு.. அப்படிங்கற ஒரு நீண்ட தொடரும் போட்டதாதான் அந்த சிறுகதை முடிஞ்சு இருக்கும்.////////////

இந்த தொடர்கதை இருக்கு பாருங்க நடுவரே வெளியில் பொய்ட்டு டய்டா ஒருத்தர் வருவார் அதுக்குள்ள ஒரு இடைவெளி அப்பரம் அவர் வீட்டுக்கு வந்து காப்பி கேப்பார் அடுத்த இடைவெளி அப்பருமும் தொடரும் காபி போட்டு அத எடுத்துட்டு வருவாங்க அதுல என்னவோ இருக்கர மாதிரி அப்படியே ஸ்லோமோஷன்லயே வருவாங்க அட என்னன்னு பாத்தா கீழே தொடரும்ன்னு போட்ருவாங்க அதுக்கு பேர் சஸ்பென்சாம் அதிகமா போனா பத்து நிமிடக்கதை அந்த கதைய 30நிமிடமா போடுவாங்க இப்படி பாக்கரதுக்கு பரச்சனை வந்ததா முடிந்ததா அப்படின்னு இருக்கலாமே.
என்ன நடுவரே தலை வலிக்குதா இஞ்சி டீ போட்டு தரட்டுமா.

அன்புடன்
ஸ்ரீ

///இப்படி ஒரு கதை வெறும் கமெர்ஷியல் நோக்குல உருவாகினா, அது எப்படி சிறந்ததா இருக்க முடியும். எனவே சிறுகதைகளே சிறந்தது///

நடுவரே,தொடர்கதை என்றால் சீரியல் மட்டுமே கிடையாது,சீரியலும் கிடையாது.

அர்த்தமற்ற சீரியலை வைத்து தாங்கள் தொடர்கதையின் சிறப்பை தீர்மானிக்க

கூடாது என்பதே என்னுடைய வாதம்.சீரியல்கள் இன்று வந்தது.தொடர்கதைகள்

ராமாயணம்,மகாபாரதம் காலந்தொட்டு இருக்கிறது.சாண்டில்யன்,அகிலன்,கல்கி,

ரமணிசந்திரன்,ஜெய்கக்தி,சுஜாதா,இந்திரா சௌந்தர்ராஜன்,முத்துலட்சுமி ராகவன்,

சுபா,ராஜேஷ்குமார்,அனுராதா ரமணன், இன்னும் எத்தனையோ

எழுத்தாளர்கள்,அவர்களின் எண்ணற்ற படைப்புகள்,பெரும் கடலோடு ஒரு துளி

சீரியலையா ஒப்பிடுவீர்கள்,அதைக் கொண்டா சிறந்ததை தீர்மானிப்பீர்கள்??

நடுவரே,ஒரு நிமிடம் மனத்திரையில் இவர்களின் படைப்புகளை ஓட

விடுங்கள்.சிறந்தது எதுவென்று புரியும்.

அன்புடன்
நித்திலா

தொடர் கதைகள் பலவற்றுள் ஆரம்பத்திலிருந்து படித்து முடிக்கும்போது பல கதாபாத்திரங்கள் பெயர் நமக்கு மறந்துவிடும் நடுவர் அவர்களே.

ராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்களில் ஆயிரக்கணக்கில் சிறுகதைகள் மறைந்துள்ளது, அதுதான் அந்த காவியங்களின் பலம். தோழி குறிப்பிட்டிருக்கும் கதைகளிலும், பல சிறுகதைகள் இருக்கும், ஆக தொடர்கதைகளின் பலமே சிறுகதைகள் அதனுள் இருப்பதுதான், சோ ஹீரோ சிறுகதைதான். தொடர்கதைகள் சிறுகதைகளை விட சுவாரஸ்யமானது, சஸ்பென்ஸ் நிறைந்தது என்பதை தவிர சிறுகதைகள் மீது அவர்களாலேயே வேறு குறைகளை சொல்ல முடியவில்லை, இதிலிருந்தே சிறுகதைகள் தான் சிறந்தது என புரிகிறதே நடுவர் அவர்களே.

மற்றபடி அவர்கள் தொடர்கதைகளின் பலம் என குறிப்பிடும் அனைத்தும் சிறுகதைகளுக்கும் உண்டு, சிறுகதைகளும் தாய்ப்பாசம், ஏக்கம், குழந்தைகளின் உணர்வுகள், சகோதரத்துவம் என எல்லாவற்றையும் கூறுகிறது. ஏன் மன்னர்கள் பற்றியும் சிறுகதைகள் வாயிலாக அறிகிறோம் தானே. கிருஷ்ணா தேவராயர் பற்றி தெரிந்ததே தெனாலிராமன் கதைகள் படித்து, விக்ரமாதித்தன் பற்றி வேதாளம் கதைகள் படித்து, அக்பர் அவர்களை பற்றி பீர்பால் கதைகள் படித்து நாம் கற்றுக்கொள்ளவில்லையா.

இதுவும் கடந்து போகும்.

அப்பாடியோ... தீர்ப்பை யோசிச்சுகிட்டே வந்தா இங்க இன்னும் சண்டை முடியல போல ;( யாராது நடுவரை காப்பாத்துங்கப்பா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இவர்கள் கொடுத்திருக்கும் அனைத்து நல்ல காரியங்களை சிறுகதைகளும் செய்கிறது நடுவர் அவர்களே//

நடுவரே,உங்களிடம் சில கேள்விகள்,டக்டக்கென்று பதில் சொல்ல வேண்டும்.

எந்த சிறுகதையையாவது படித்தவுடன் உங்கள் மனதில்

மகிழ்ச்சி,சோகம்,ஆர்வம்,கோபம் என மனதின் அத்தனை உணர்வுகளும்

தோன்றியுள்ளதா?

கதாபாத்திரங்கள் நீங்காமல் இடம் பெற்றுள்ளதா?

உரையாடல்கள் உங்கள் மனதில் நிலை பெற்றுள்ளதா?

எதாவது ஒரு துறை பற்றி பேஷன் டிசைனிங் என்று வைத்துக்

கொள்வோம்,உங்களுக்கு போதித்துள்ளதா?

சோழ மண்டலமோ,இல்லை கோவையோ உங்கள் கண்முன் வந்ததா?

வாழ்க்கை முறை,மக்களின் பழக்கவழக்கங்கள் அறிந்து கொண்டீர்களா?

நடுவரே,இன்னும் எண்ணற்ற கேள்விகள் உண்டு.பாவம் நீங்கள் போதும்.

சிறுகதை என்றால் சின்னப் பிள்ளைகளின் கதைகளை மட்டும் பார்க்காமல் மற்ற

கதைகளையும் பாருங்கள்.தொடர்கதை என்றால் சீரியலை மட்டும் சொல்லாமல்

பிறகதைகளையும் எதிரணியை பார்க்கச் சொல்லுங்கள்,நடுவரே.

நடுவரே,நான்கு வரி காதல் கவிதை அழகு.நாற்பது வரி காதல் கவிதை

அதைவிட அழகு.நான்கு வரி உங்கள் மனதை தொடும்.நாற்பது வரி கவிதை

இருக்கிறதே,உங்கள் மனதை வசப்படுத்தி விடும்.சுவாசக்காற்றை விட தீண்டிச்

செல்லும் தென்றல் சிறந்ததா,நடுவர் அவர்களே.

அன்புடன்
நித்திலா

சற்றே தோழியை அறுசுவை முகப்புக்கு வந்து பார்க்க சொல்லுங்கள் நடுவர் அவர்களே. "காகித பூக்கள்" "அன்பால் அழகான வீடு" "கமலா எனும் இயந்திரம்" "சந்தேக பேய்" "ஒரு பெண்ணின் மனம்" "பிசிக்ஸ் சார்" "புத்திர சோகம்" "தவளை தன வாயால் கெடும்" "நிறம் மாறாத பந்தங்கள்" "உன் கண்ணில்" "பசுமைப்புரட்சி" "சானுவும் நானும்" - எந்த உணர்ச்சிகள் இல்லை சிறுகதைகளில், வீட்டில் நடக்கும் ஒரு சிறு சந்தோஷ நிகழ்வு முதல் உலகத்தை ஆட்டும் சமூக பிரட்சனைகள் வரை இதில் அடங்குகிறதே.

வரிகள் நான்கா நார்ப்பதா என்பது முக்கியமில்லை, கருத்து எதன் மூலம் எளிதில் அடைகிறது, சீக்கிரம் அடைகிறது என்பதே முக்கியம்.

சுவாசகாற்று எது? தென்றல் எது? என உங்களுக்கு தெரியும் அல்லவா நடுவர் அவர்களே.

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்