பட்டிமன்றம் - 34 : தொடர்கதையா?சிறுகதையா?

காத்திருந்து யாரும் நடுவரா வராம பட்டி துவங்காம இருந்த காரணத்தால் நானே துவங்குறேன். வாதிட கண்டிப்பா வந்துடுவீங்கன்னு நம்பறேன். :) ஏமாற்றாம வந்துடுங்க. நம்ம தலைப்பி :

சிறந்தது எது? தொடர்கதையா?சிறுகதையா?

சூப்பரான தலைப்பை தந்த பவித்ரா'கு மிக்க நன்றி.

இதில் கதை புத்தகம், டிவி சீரியல் என எல்லாமே அடங்கும். மற்ற பட்டியின் விதிமுறைகள் இதுக்கும் பொறுந்தும்.

எல்லாரும் இந்த தலைப்பில் இவ்வளவு பேச முடியுமா'னு நினைக்கும் அளவுக்கு பேசிருக்கீங்க. ;) சூப்பர். நானும் சூப்பரா குழம்பி இருக்கேன். தீர்ப்பு சொல்லும் நேரம் ஆகியும் ஒரு முடிவுக்கே வர முடியாம தலை சுத்துது.

கதைன்னா என்ன? கற்பனை கலந்த நிஜம்? முழுக்க கற்பனை? நிஜம் சார்ந்த கற்பனை அதாவது நிஜத்தோடு ஒத்து வரும் கற்பனை? எப்படி இருந்தாலும் கதை என்பது ஏதோ ஒரு நிகழ்வு.

நம்ம ஊர் மக்களுக்கு (என்னையும் சேர்த்து தான்) கதை ரொம்ப விருப்பம். புத்தக வடிவில் வந்தாலும் சரி, டீவி வழியாக வந்தாலும் சரி, பிறர் வாய் வழி வரும் மற்றவர் வாழ்க்கை கதை ஆனாலும் சரி, வேலைக்காரி மூலம் வரும் வம்பு கதை ஆனாலும் சரி.... கதை சுவாரஸ்யமானது தான்.

இன்று அரசு அலுவலகத்தில் பலருக்கு (வேலை பார்க்கிறவங்களுக்கு தான்) முழு நேர வேலையே புத்தகம் படிப்பது தான். நம்ம மவுன்ட் ரோட் கோஆப்டெக்ஸ் பக்கம் போங்க, துணியை எடுத்து காட்டி விக்கிறதை விட அதிக ஆர்வம் புத்தகத்தின் மேல் தான் இருக்கும். இதை எல்லாம் பார்த்தா என்னடா இருக்கு இதுலன்னு நினைக்க தோணும். சரி இது போல் எங்கோ நடக்கும் சின்ன தப்பை வைத்து நாம் எல்லாமே அப்படின்னு முடிவு பண்ண கூடாதே.

இப்போ பிரபலமா எல்லாரும் விரும்பி படிச்ச நாவல்கள், தொடர்கதைகள் என்று ஒரு பெரிய பட்டியல் சொல்லலாம். அதை எல்லாம் படிக்காதவர்கள் இருக்கலாம், ஆனால் அந்த தலைப்புகள் கூட தெரியாதவங்க இருக்க இயலாது. அதை நம் சீதாலஷ்மி எழுதிய "படித்தவை ரசித்தவை" வெற்றியில் புரிஞ்சுக்கலாம். அந்த அளவுக்கு அந்த கதைகள் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு, வரவேற்பை பெற்றிருக்கு. பல சரித்திரத்தை நாம் இன்று புரிந்து கொண்டது, தெரிந்து கொண்டதே தொடர் கதைகள் மூலம் தான்னு சொல்லலாம். நம்மால் கற்பனையிலேயே அந்த கால வாழ்க்கை எப்படி இருந்தது என்று படம் ஓட்டி பார்க்கும் அளவுக்கு கண் முன் காட்சிகளுக்கு வடிவம் கொடுத்தது தொடர்கதைகளும் நாவல்களும். ஆங்கிலம் ஆனாலும், தமிழானாலும் ஒரு நாவலை கையில் எடுத்தால் வைத்து விட்டு போக மனமில்லாமல், சாப்பிடாமல் தூங்காமல் படிக்கும் பிரியர்களும் உண்டு. காரணம் அடுத்து என்ன, என்ன என்று நம்மை தவிக்க வைக்கும் சக்தி கொண்டவை அவை. எடுத்தால் வைக்க இயலாது என்று தெரிந்தும் அடுத்த நாவலை படிக்க மனம் ஏங்கும்.

சீரியல்களும் இது போல் தொடர்கதை தானே!!! எல்லாம் தரமாக இருக்கா?? இல்லை எல்லாம் தரமானவை இல்லை. ஒரு சீரியல் பார்க்க துவங்கிட்டா அதை விட இயலாது, அதில் சில விஷயங்கள் நம்மை எரிச்சலாக்கினாலும் "சரி என்னதான் முடிவுன்னு பார்ப்போமே"னு பல்லை கடிச்சுகிட்டு பார்க்கும் மக்கள் தான் இன்று அதிகம். கங்கா யமுனா சரஸ்வதி'னு ஒரு சீரியல் பலருக்கும் மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன். ;) ஒரு பரம்பரையே கதையா வந்தது. ஒரு சில சீரியல்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் உண்மையில் வளர்ந்து கல்யாணமே ஆகி இருக்கும், ஆனாலும் "அவருக்கு பதிலாக இனி இவர்" என்று சொல்லி சீரியலில் வேறு ஒருவரை வைத்து அந்த குழந்தை கதாப்பாத்திரம் போய்கிட்டு தான் இருக்கும். இதெல்லாம் ஒரு எக்ஸ்ட்ரீம்... ஆனாலும் நல்ல தொடர்கதைகள் குடும்பத்தில் இருக்க வேண்டிய பாசத்தை சொல்லும் சீரியல்கள் வரத்தான் செய்கிறது.

தொடர்கதைகள், நாவல்கள் பொதுவாக மனித மனதை விட்டு நீங்கா இடம் பெருகின்றன. அதில் வரும் கதாபாத்திரங்களும் அவர்கள் நினைவில் என்றும் வாழ்கின்றன. அந்த அளவு நம் வாழ்வோடு கலந்து விடுகின்றன அந்த கதைகளும், நிஜங்களும். இதிகாசங்கள், புராணங்கள், சரித்திரம் எல்லாமே இன்று நம்மிடையே வாழ்வது இப்படி படித்தும், பார்த்தும், கேட்டும் தானே!!!

அப்படியானால் சிறுகதைகள் மனதில் நிற்பதில்லையா?? நிச்சயம் அப்படிப்பட்ட நல்ல சிறுகதைகளும் உண்டு. தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், பல நீதிக்கதைகள் சிறுகதைகளாக வந்து தானே நம்மிடையே வாழ்கின்றன. அவை சொல்லும் நீதியை நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்வதில்லையா?? புத்திசாளித்தனமும், சுவாரஸ்யமும், சிந்திக்கும் திறனும் வளர்க்கும் சிறுகதைகள் கொட்டிக்கிடக்கின்றது. இன்று நம் அறுசுவையில் கதை மலர், காலச்சக்கரம் போன்ற தலைப்புகளில் குவிந்து கிடைக்கும் சிறுகதைகள் எத்தனை எத்தனை. இவற்றுக்கு இருக்கும் வரவேற்பு எவ்வளவு!!! ஒரு சில வரிகளில் பலருக்கு புத்தி சொல்லும், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் எப்படி தரத்தில் குறைவாகும்???

என்ன சொல்லவரேன்... இருங்க... நானும் குழம்பிட்டேன். மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கருத்தை அழகாக, தெளிவாக, சுவாரஸ்யமாக, எதார்த்தமாக, நம்பும்படியாக, ரம்பம் போடாமல், கொண்டு செல்லும் கதைகளே சிறந்தவை. அவை சிறுகதையானாலும் சரி!! தொடர்கதையானாலும் சரி!!! :D அப்பாடியோ எப்படியோ முடிச்சுட்டேன்.

பட்டியில் பங்கு பெற்ற அனைவருமே இம்முறை வெற்றி பெற்றவர்கள் தான். எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

---

அன்புடன்
நித்திலா

கடைசி நிமிஷத்திலும் விடாம பொராடிய போராடிகிட்டு இருக்க நித்திலா, யோகலக்ஷ்மி, கல்பனா, ஸ்ரீ, ருக்சனா, ஜெயலக்ஷ்மி ... கலக்கிட்டீங்க. கடைசியில் நல்ல நல்ல பாயின்ட்ஸா கொடுத்து சிந்திக்க வெச்சுட்டீங்க. தொடர்கதைகளோட சிறப்பும் சொல்லி, சிறுகதைகளும் மனசுல நிக்கும்'னு நிரூபிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்.

பட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் நன்றிகள். நீங்க இல்லாம இந்த வாரம் பட்டி நடந்திருக்காது. மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நித்திலா என்னாச்சு?? ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

!!!!!!!!!!!!!!!!??????????????????????

அன்புடன்
THAVAM

---------------------------------------------------டமால்----------------------------------------------------------------------- யாராவது காப்பாத்துங்களேன்!!!!!!!!!

அன்புடன்
THAVAM

வாவ் எதிர் பார்க்காத தீர்ப்பு நடுவரே.
என்ன அருமயா அலசி ஆராய்ந்து தீர்ப்பை சொல்லி இருக்கிங்க
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
கதைகளில் நாம் கட்டுண்டு கிடக்கிறோம்
\\\என்ன சொல்லவரேன்... இருங்க... நானும் குழம்பிட்டேன். மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கருத்தை அழகாக, தெளிவாக, சுவாரஸ்யமாக, எதார்த்தமாக, நம்பும்படியாக, ரம்பம் போடாமல், கொண்டு செல்லும் கதைகளே சிறந்தவை. அவை சிறுகதையானாலும் சரி!! தொடர்கதையானாலும் சரி!!! :D அப்பாடியோ எப்படியோ முடிச்சுட்டேன்.///
கூறியிருக்கிற பாயிண்ட் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்
நல்ல தீர்ப்ப வழங்கிய நடுவருக்கு என் வாழ்த்துக்களும்
ரோஜா மலர் பொக்கேயும்...பிடிங்க நடுவரே

வாழு, வாழவிடு..

நல்ல தீர்ப்பு நான் இன்னைகு தீர்ப்ப எதிர் பார்க்கவே இல்லை அதுவும் இந்த மாதிரியான தீர்ப்பை நினைத்துகூட பார்க்கவில்லை வாழ்த்துக்கள்

அன்புடன்
ஸ்ரீ

நடுவரே, தீர்ப்பு எங்கே? தீர்ப்பு எங்கே? எங்காச்சும் வழில மிஸ் பண்ணிட்டீங்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தவமணி... என்னாச்சு?? தீர்ப்பு சரி இல்லையா? இல்ல இப்போ எதிர்பார்க்கலயா?

ருக்சனா... வருசையா எல்லாரும் குழப்பிட்டு போனாங்க, நீங்க ஒருத்தராவது புரியும்படி பதிவு போட்டீங்க. மிக்க நன்றி :)

ஸ்ரீ... பொதுவா திங்கள் காலை தீர்ப்பு வரும், ஆனால் பலருக்கு நேரம் இல்லாமல் போவதால் இரவில் தீர்ப்பு பதிவிடுவார்கள். இந்த பட்டியில் முதலில் ரொம்ப தொய்வா போச்சு, எனக்கு நடுக்குமா நடக்காதான்னு தோணிடுச்சு. காமெடியாவும் பேச வாய்ப்பு இருக்கும் என்றே இந்த தலைப்பை எடுத்தேன், அப்படியும் கடைசி நேரத்தில் தான் சூடு பிடித்தது. இன்று இதுக்காக நான் தீர்ப்பை தாமதம் செய்தால் நாளை பட்டியில் அதுவே வழக்கமாயிடும். அதான் நேரத்துக்கே தீர்ப்பை கொடுத்துட்டேன். கோவிச்சுக்காதீங்க யாரும்.

கல்பனா... வாதங்கள் நிறைய மிஸ் ஆனதால தீர்ப்பும் மிஸ் ஆயிடுச்சு. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்