பட்டிமன்றம் - 34 : தொடர்கதையா?சிறுகதையா?

காத்திருந்து யாரும் நடுவரா வராம பட்டி துவங்காம இருந்த காரணத்தால் நானே துவங்குறேன். வாதிட கண்டிப்பா வந்துடுவீங்கன்னு நம்பறேன். :) ஏமாற்றாம வந்துடுங்க. நம்ம தலைப்பி :

சிறந்தது எது? தொடர்கதையா?சிறுகதையா?

சூப்பரான தலைப்பை தந்த பவித்ரா'கு மிக்க நன்றி.

இதில் கதை புத்தகம், டிவி சீரியல் என எல்லாமே அடங்கும். மற்ற பட்டியின் விதிமுறைகள் இதுக்கும் பொறுந்தும்.

நல்ல தீர்ப்பு தான் வனி. எல்லோரையும் ஜெயிக்க வச்சிட்டீங்க, யாருமே தோற்க்கலையா, வெரி நைஸ். இந்த பக்கம் அந்த பக்கம் ரெண்டு பக்கமும் இல்லாமல் நடுநிலையாய் சொல்லிட்டீங்க, இரண்டையுமே விட்டுக்கொடுக்க முடியலை உங்களால், சரின்னு தோன்றியதை சொல்லி இருக்கீங்க, அதை தான் சொல்லனமும் கூட. ஆனால் நானும் இப்படி சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கலை, ஏதாவது ஒரு பக்கம் சொல்லுவீங்கன்னு நினைச்சேன், அதனால் தான் எல்லோரும் இந்த ரியாக்ஷன் கொடுக்குறாங்க போலிருக்கு. பட்டியில் இடைவெளி வராமல் பார்த்துகிட்டதுக்கு, பல வேலைகள் இடையிலும் இந்த பொறுப்பை ஏற்று சிறப்பாய் செய்ததற்கு மறுமடியும் ஒரு பொன்னாடை, மறுபடியும் நறுமண மலர் கொத்து.

நித்தி உங்களுக்கு தொடர்கதைகள் ரொம்ப பிடிக்கும் போலிருக்கு. நானும் படிச்சிருக்கேன், ஆனாலும் உங்க அளவுக்கு என் நோலேஜ் ரொம்ப கம்மிதான் (சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்). எனக்கு சரின்னு தோன்றியது சிறுகதைதான், எனக்கு சரி என பட்டதை வாதிட்டேன். நோலேஜ் கம்மியா இருப்பதால், தவறா ஏதேனும் சொல்லி இருந்தா சாரி டா.

கல்பனா, ரம்யா, ஸ்ரீ, பவி, தவமணி அண்ணா, ருக்சானா எல்லோரும் அருமையாய் உங்க கருத்துக்களை வைத்தீங்க. வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்.

ஒரு வழியா பட்டி முடிஞ்சுது. ஒவ்வொருத்தருடைய வாதமும் அவர் சொன்னது தான் சரின்னு என்ன வைக்குதே அது எப்படி? நம்மாளுக திறமையானவுங்க தான்.... பின்னி பெடலேடுகுறாங்க....

அருமையா தீர்ப்பு வழங்கின வனிதா அம்மையாருக்கு வாழ்த்துக்கள்...

நடுவருக்கும் பரிசு கொடுக்கனுமில்ல....................

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகலக்ஷ்மி.. மிக்க நன்றி. இரண்டிலும் நல்ல கதைகளும் இருக்கு, மோசமான கதைகளும் இருக்கு, அதான் இரண்டிலுமே நல்லவை சிறந்ததுன்னு சொன்னேன். எல்லா படத்தின் க்ளைமேக்ஸ்'ம் எல்லாருக்கும் பிடிக்குதா என்னா... அப்படி இன்று என் தீர்ப்பும் நிறைய பேருக்கு பிடிக்கலை போலும் ;)

யோகராணி... மிக்க நன்றி. //ஒரு வழியா பட்டி முடிஞ்சுது// - எப்படா முடியும்'னு கேத்திருந்திங்களா??? ;) //பின்னி பெடலேடுகுறாங்க// - இதெல்லாம் உங்க ஊர் தமிழுக்கும் வந்துருச்சா??? ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மன்னிக்கனும் சகோதரி,
தீர்ப்பு சொல்வதற்கு முன் எங்களை அதிகமாக குழப்பிட்டீங்க இல்லையா?. அதனால மயக்கம் வந்து கீழே விழுந்ததைத்தான் டமால்னு சொல்லியிருக்கேன். தீர்ப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இதைவிட நல்லதொரு அருமையான தீர்ப்பை யாராலும் தந்திருக்க முடியாதென்றே நினைக்கிறேன்.
நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை ரத்தின சுருக்கமாக சொல்வதற்க்குதான் திறமை அதிகம் வேண்டும். அது போல ஒரு பக்க கதைகள் போய் ஒரு வரி கதைகள் வந்துவிட்ட காலமிது. ஐந்து நாட்கள் விளையாடிய கிரிக்கெட் ஒரு நாள் ஆட்டமாக மாறி அதுவும் இப்போது 20...20யாக மாறிவிட்டது. அதே சமயத்தில் நெடுங்கதைகளும் தேவைதான். ஒரு சரித்திர கதையை சிறு கதையாக சொன்னால் சோபிக்காது, வாழ்க்கை வறலாற்றை சிறிய வடிவில் எழுதினால் அது முழுமையடையாது. அதன் முழுமையான அர்த்தமும் மக்களை சென்றடையாது, சமூக நாவல்களும் கூட அப்படித்தான். எழுத வேண்டிய கருத்துக்களை பொறுத்தே அது சிறுகதையா, அல்லது தொடர்கதையா என தீர்மானிக்க படுகிறது. நமக்கு இரண்டுமே தேவைதான். நல்ல தீர்ப்பு. வாழ்த்துக்கள். எனக்கு மிக பிடித்த தலைப்பாய் இருந்தாலும் வேலைகளின் காரணமாய் அதிகமாக பங்கேற்க முடியவில்லை. தொடர்ந்து வாதாடிய சகோதரிகள் அனைவருக்கும், திறம்பட கொண்டு சென்ற நடுவர் அவர்களுக்கும், மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அன்புடன்
THAVAM

வனி

நல்ல சூப்பரான தீர்ப்பு.. ;)
கண்டிப்பா ஒரு பக்க கதைங்கற ஸ்டைல் போயி ஒரு நிமிட கதைனு ஒரே பேராக்கு எழுதியும் கருத்தை ரீச் ஆக வைக்கறாங்க..

வாதிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நடுவருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க & வாழ்த்து

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தவமணி... என்ன மன்னிப்புலாம்??? எனக்கு புரியலன்னு கேட்டேன் அவ்வளவே. மிக்க நன்றி. :) அடுத்த பட்டிக்கு நேரம் ஒதுக்கி அவசியம் வாதிட வாங்க.

ரம்யா... வாங்க. எப்படி இருக்கீங்க? நேரம் கிடைச்சா ஒரு மெயிலை போடுங்க. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நித்திலா என்னாச்சு//

ஹாய் வனி,ஒன்னும் ஆகலை வனி.நாம ஒரே டைம்ல பதிவிட்டிருக்கோம்

வனி.டைம் பாருங்க வனி.நீங்க போட்ட அடுத்த நிமிஷம் நான்

போட்டிருப்பேன்.போட்டுட்டு பார்க்கறேன்.அப்பதான் தீர்ப்பு சொல்லியிருக்கீங்க.

நான் தீர்ப்பை கூட படிக்கலை.தீர்ப்பு சொன்னதுக்கு அப்புறம் வாதம்

எதுக்குனுதான் நான் போட்ட பதிவை உடனே டெலிட்

பண்ணிட்டேன்.வேறொன்னும் இல்லை,வனி.நீங்க ஒன்னும்

நினைச்சுக்காதீங்க.யோகாவுக்கு பதில் சொல்லலையேனு மட்டும்

கொஞ்சம் வருத்தமாயிருந்தது.தீர்ப்பை பத்தி சொல்லனும்னா யோகா

நினைச்சதையேதான் நானும் நினைச்சேன் வனி.உங்களால இரண்டு பக்கத்தையும்

விட்டுக்கொடுக்க முடியலை போலிருக்கு.வாழ்த்துக்கள் வனி.ஓகே வனி.அடுத்த

பட்டியில் பார்க்கலாம்.உங்களுக்கு வொர்க் அதிகம் போலிருக்கு.அப்பப்ப காணாம

போயிடறீங்க.தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும் வனி.

யோகா.எல்,

ஹாய் யோகா,எதுக்கு சாரி சொல்றீங்க.நோ சாரி.ஒரு விஷயம்தான்

சொல்லனும்னு நினைச்சேன் யோகா.அதுக்குள்ள வனி தீர்ப்பு

சொல்லிட்டாங்க.நான் ஒரு சிறுகதைக்குள்ள மனதின் எல்லா உணர்வுகளையும்

காட்ட முடியாதுனுதான் சொல்ல வந்தேன் யோகா.நீங்க சிறுகதைகள்

உணர்வுகளை காட்டாதுனு நான் சொல்றதா புரிஞ்சுட்டீங்க

போலிருக்கு.தொடர்கதைனா ஒரு கதைக்குள்ளயே எல்லாம்

வருமே யோகா அதான் சொன்னேன் யோகா.நீங்க சொல்ற மாதிரி தொடர்கதைகள்

எனக்கு பிடிக்கும் யோகா.சிறுகதைகள்,குழந்தைகள் கதை மட்டும் பிடிக்கும்.நான்

ரொம்ப குட்டிப்பொண்ணு யோகா.உங்களை விடவெல்லாம் நாலேஜ்

இருக்காது.உங்ககிட்டயிருந்து தான் நான் கத்துக்கனும்.உங்ககூட பேசனும்னு

ரொம்ப ஆசை.பேஸ்புக்ல உங்களை தேடி பார்த்துட்டேன்.எனக்கு தெரியலை.நீங்க

பேஸ்புக்ல இருந்தா என்ன பேர்ல இருக்கீங்கனு சொல்றீங்களா யோகா.

அன்புடன்
நித்திலா

வனி, சாரி வனி, தீர்ப்பு சொன்ன அன்னைக்கே பதிவு போட முடியலை. வனிய எப்படி சும்மா விடுறதுன்னு சும்மாவே தீர்ப்பு எங்கேன்னு கேட்டிருந்தேன். உங்களோட பணியின் இடையிலும், குழந்தைகள் கவனிப்பின் இடையிலும் பட்டியை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தி சென்றீர்கள். நீங்க தான் சகலகலாவல்லி ஆச்சே. ஒரே நேரத்துல பல வேலைகளை சுத்தி சுத்தி பார்ப்பீங்க :) நாம ஒரு வேலைலயே சுத்திட்டு இருக்க ஆளுங்க. பாராட்டுக்கள் வனி. தீர்ப்பு எனக்கு பிடிச்ச மாதிரி நடுநிலையாகவே தந்தீர்கள். நிறைவான தீர்ப்பு.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா ,இந்த தலைப்பிற்கு இதுதான் சிறந்த நல்ல தீர்ப்பு....

எப்போதும் சுறுசுறுப்பாய் பட்டியை தாங்கி பிடிக்கும் உங்கள் மென்மையான தோள்களுக்கும்,பட்டு கரங்களுக்கும் வாழ்த்துக்களும் ,மலர்ச்செண்டும் :-
{ஆஃப் லைன் மெஸேஜ் போட்டேன் பாருங்க :-)

பங்கேற்க முடியவில்லை என்றாலும் பதிவுகளையும் ஒன்றாக இன்று படித்தேன்....

எல்லா தோழிகளின் வாதமும் குறிப்பா நித்திலா,யோகா,ஜெயா ,கல்பனா,ரம்யா

வாதங்கள் அருமையோ அருமை...

அருமையான கருத்து குவியல் கொட்டியுள்ள இவர்களின் வாதங்களை படிக்கிறப்போ இவ்வளவு சிறப்பா,இதைவிட சிறப்பா வாதாடவே முடியாதுன்னு தோணும் அளவுக்கு சுவையா சூடா இருந்துச்சு...

பங்கு கொண்ட எல்லா அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

வாய்ப்பிருக்கும்போது மீண்டும் பார்க்கலாம்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பேஸ்புக்கில் ரெக்வஸ்ட் அனுப்பி உள்ளேன், ஏற்றுக்கொள்ளவும்.

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்