பட்டிமன்றம் - 34 : தொடர்கதையா?சிறுகதையா?

காத்திருந்து யாரும் நடுவரா வராம பட்டி துவங்காம இருந்த காரணத்தால் நானே துவங்குறேன். வாதிட கண்டிப்பா வந்துடுவீங்கன்னு நம்பறேன். :) ஏமாற்றாம வந்துடுங்க. நம்ம தலைப்பி :

சிறந்தது எது? தொடர்கதையா?சிறுகதையா?

சூப்பரான தலைப்பை தந்த பவித்ரா'கு மிக்க நன்றி.

இதில் கதை புத்தகம், டிவி சீரியல் என எல்லாமே அடங்கும். மற்ற பட்டியின் விதிமுறைகள் இதுக்கும் பொறுந்தும்.

அன்பு நித்திலா.... மிக்க நன்றி. தாமதமா பார்க்கிறேன் பதிவுகளை. யோகா'கு பதில் சொல்லிட்டீங்களா?? இப்போ நிம்மதியா? உங்களுக்கு பட்டியில் இருக்கும் ஆர்வம் எனக்கு ரொம்ப பிடிக்குது. உங்களை போல் ஆர்வமாக கலந்து கொள்ளும் தோழிகளால் தான் பட்டி வெற்றி பெருகிறது. மிக்க நன்றி. அடுத்த பட்டியில் சந்திப்போம். இப்போதெல்லாம் தினமும் வெளியே போகும் வேலை வந்து விடுகிறது. வீட்டில் இருக்கும் நேரமும் ரொம்பவே பிசியா போகுது. அதனால் தான் அடிக்கடி காணாமல் போகிறேன்.

கல்பனா... நமக்கு வேலையே பிள்ளைகளை பார்ப்பது தான். அதுக்கே தான் நமக்கு திக்குமுக்காடுது. இன்னும் வீட்டு வேலையும் சேர்த்து பார்க்கும் நேரம் வந்தா என்ன பண்ணுவேனோ எனக்கு தலைய சுத்துது. நடக்கும் போது நடக்கட்டும். மிக்க நன்றி கல்பனா, அடுத்த் அபட்டியில் மீண்டும் சந்திப்போம்.

இளவரசி... மிக்க நன்றி //ஆஃப் லைன் மெஸேஜ் போட்டேன் பாருங்க // - எதுல போட்டீங்க, எங்கும் காணோமே!!! யாராவது சுட்டுட்டாங்களா??? ;( இளவரசி... அடுத்த பட்டிக்கு அவசியம் வாங்க நேரம் ஒதுக்கி. நீங்க இருந்தா பட்டி இன்னும் சுவாரஸ்யமா இருக்கும். உங்க கவிதை போன்ற வரிகளை படிக்க எங்க எல்லாருக்கும் விருப்பம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்