எண்ணெய் கத்தரிக்காய்

தேதி: January 31, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

கத்தரிக்காய் - அரை கிலோ
எண்ணெய் - 100 மில்லி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு
வறுத்து அரைக்க:
-------------------
தேங்காய் - ஒரு மேஜைக்கரண்டி
எள்ளு - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
மல்லி - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
தாளிக்க :
----------
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி


 

முதலில் கத்தரிக்காயை கழுவி சிறியதாக இருந்தால் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். வறுக்க வேண்டிய மசாலா பொருட்களை வறுக்கவும்.
வெறும் வாணலியில் தேங்காய் துருவலை வறுத்து வைக்கவும்.
மசாலா பொருட்களுடன், பாதி வெங்காயம், பாதி தக்காளியை சேர்த்து மிக்ஸியில் சுற்றி எடுக்கவும்.
நாண் ஸ்டிக் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மீதம் உள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளிக்கவும்.
பின் மீதம் உள்ள தக்காளி, கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.
அதில் கத்தரிக்காயை போட்டு எண்ணெயில் பத்து நிமிடம் பிரட்டி பிரட்டி வேக விடவும்.
அரைத்த மசாலா பொருட்களை சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கத்திரிக்காயுடன் சேர்த்து வேக விடவும். வெந்த பின்பு புளிக்கரைசலை கெட்டியாக கரைத்து ஊற்றவும். மசாலா, புளி வாடை அடங்கியவுடன், மிகச்சிறிய துண்டு வெல்லம் சேர்த்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்து இறக்கவும்.
சுவையான தளதளக்கும் வீடே மணக்கும் எண்ணெய் கத்திரிக்காய் தயார். திருமதி. ஆசியா உமர் அவர்களின் குறிப்பை பார்த்து சிறு மாற்றத்துடன் இந்த குறிப்பை செய்துள்ளார்.

இது பிரியாணி வகைக்கும், வெரைட்டி ரைஸ், சப்பாத்தி, தோசைக்கு நன்றாக இருக்கும். புளி அளவாக சேர்க்கவும். எண்ணெய் கூட்டியோ குறைத்தோ அவரவர் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், சுவையான குறிப்பை தந்த ஆசியா'கும் மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்குபிடித்த எண்ணெய் கத்திரிக்காய் .செய்து பார்த்திட்டு சொல்றேன்.இதுபோல் இன்னும் நல்ல குறிப்புக்கள் கொடுக்க வாழ்த்துகிறேன்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா... மிக்க நன்றி. ஆசியாவின் குறிப்புகள் எப்பவுமே சுவையா இருக்கும்.... எனக்கும் ரொம்ப விருப்பம். செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு ரொம்ப பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் சூப்பர் வனிதாக்கா வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

எண்ணெய் கத்தரிக்காய் பார்க்கவே நல்ல இருக்கு.

ஒரு நாள் செய்துப்பார்த்து விடுகிறேன்.

வாழ்த்துக்கள் அக்கா.........

ஹசீன்

மிக்க நன்றி வனிதா.அருமையாக செய்திருக்கீங்க,எல்லாம் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைத்தால் இன்னும் தளதளன்னு இருக்கும்.
இங்கு பழைய தோழிகள் யாரும் காணோமேன்னு இருக்கு.எல்லாரும் வந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எனக்கு ரொம்ப நாளா எண்ணெய் கத்தரிக்காய் செய்யனும்ன்னு ஆசை ஆனா செய்முறை தெரியாது இப்ப உங்க விளக்கம் சூப்பர் பா நான் நாளையே செய்து பாத்துட்டு சொல்ரேன் வாழ்த்துக்கள் தொடர்ந்து நிரைய குரிப்புகள் குடுங்க பா

அன்புடன்
ஸ்ரீ

ருக்சனா... மிக்க நன்றி.

ஹசீனா... மிக்க நன்றி, செய்து பாருங்க.

ஆசியா... நான் பழைய ஆளா புது ஆளா?? எனக்கே தெரியல. ;( இது பார்ட்டிக்கு செய்தேன் ஆசியா, சர்ப்ரைஸ்'அ இருக்கட்டும்'னு தான் உங்களுக்கு பின்னூட்டம் தராம குறிப்பை படமா அனுப்பினேன். இவருக்கு கத்திரிக்காஇ கண்ணுக்கு தெரிஞ்சா தான் பிடிக்கும், அதான் ரொம்ப குழைய வைக்கல. சுவையாக இருந்தது ஆசையா.... ரொம்ப ரொம்ப நன்றி. பார்ட்டியிலும் எல்லாரும் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. :)

ஸ்ரீ... அவசியம் செய்து பாருங்க, ரொம்ப சுவையாக இருக்கும். விரும்பினா ஆசையா சொன்ன மாதிரி குக்கரில் 2 விசில் வைத்து பாருங்க. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாக்கா படங்களுடன் தெளிவான குறிப்புகளும் தந்துள்ளீர்கள்.என்ன நீங்கள் கைவினை பக்கமே இப்ப வரவில்லையே.

பார்க்கும்போதே கண்ணை கட்டுது. வாழ்த்துகள். சோம்பு இல்லாமல் செய்யலாமா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

என்ணெய் கத்திரிக்கா பாக்கும்போதே அருமையா இருக்கு வாழ்த்துக்கள் ... செய்து பாக்குரேன் வனி...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இஸ்லாமிய இல்ல எண்ணை கத்திரிக்காயின் சுவை கேட்கவா வேணும், அருமையாக இருக்கும்,

ஜலீலா

Jaleelakamal

இனியா... மிக்க நன்றி.கைவினை பக்கம் வர ஆசை தான். 4 வேலைகள் செய்து கொண்டிருக்கேன். ஆனால் அவற்றை முடித்து அனுப்ப நேரம் தான் 3 மாதமாக இல்லை ;(

மஞ்சுளா... சோம்பு இல்லாமல் நான் செய்ததிலை, ஆசியா தான் சொல்லணும் ;) மிக்க நன்றி.

சுவர்ணா... மிக்க நன்றி. செய்துட்டு சொல்லுங்க.

ஜலீலா... பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. சுவையாகவே இருந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா