வளைக்காப்பின் நோக்கம் தெரிந்துகொள்ளலாமா?

வணக்கம் தோழிகளே! என் பெயர் கல்பனா,நான் அறுசுவைக்கு புதிது, நான் தற்போது ஐந்து மாத கர்ப்பிணி,, ஏழாம் மாதம் வளைக்காப்பு செய்ய இருக்கிறோம்,வளைக்காப்பின் அவசியமும்,நோக்கமும் சொல்ல முடியுமா தோழிகளே!

குழந்தைகளுக்கு 7 மாத்திலேயே காது கேட்க ஆரம்பிக்கும். நாம் வளையலின் ஓசை குழந்தைக்கும் கேட்கும். இதையே வளைகாப்பாக நடத்துகிறார்கள். இன்னும் ரொம்ப விரிவா இதை சொல்லலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்களும் தனி ஒரு மனிதரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வந்ததாக இருந்ததில்லை. பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.

பொதுவாக கர்பினிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து 7 முதல் 9 மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு ஜான் குளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது. உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.

அது போல ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன்னைச் சுற்றி நாங்கள் தான் இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகாப்பு.

இதுவும் கடந்து போகும் !

முன் காலத்தில் வீட்டிற்கு வேலைக்கு ஆள் வைக்க மாட்டார்கள் ,கூட்டுகுடும்பமாகதான் இருப்பார்கள்,அவர்கள் வீட்டு சமையல் அறையில் எந்நேரமும் ஏதாவது ஒரு வேலை நடந்துகொண்டே இருக்கும்.பெண்கள் வேலைபார்த்து கொண்டே இருப்பார்கள்.சிறிதளவே ஒய்வு இருக்கும்.ஆதலால் கர்பிணி பெண்களுக்கு ஏழு மாதம் வரை நன்கு வேலை செய்தால் சுக பிரசவம் ஆகும்.ஏழு மாதங்களுக்கு பிறகு பாரம் அதிகமாவதால் அவர்களுக்கு சற்று ஓய்வு தேவைபடுவதாலும் ,என்னதான் கணவர் அருகில் இருந்தாலும் பிரசவ நேரத்தில் தன் அம்மா அருகில் இருக்கவேண்டும் என்றுதான் ஒரு பெண் நினைப்பால் ,வளைகாப்பில் எல்லோரும் குழந்தையையும் தாயையும் வாழ்த்துவதால் அந்த பெண்ணுக்குள் இருக்கும் பிரசவ பயம் போய் மிகவும் சந்தோசம் ஆகி தைரியம் கொள்வாள் . இதுபோன்ற காரனக்கலால்தான் ஒரு பெண்ணுக்கு எழு மாதத்தில் வளைகாப்பு வைத்து தாய் வீடு அழைத்து வருவார்கள்.நீங்கள் நல்லபடியாக குழந்தை பெத்தெடுத்து ,நீங்களும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அன்புள்ள கல்பனா,

வளைகாப்பு செய்வத்ற்குப் பல காரணங்கள் இருக்கும். ஆனாலும் என் மனதிற்குப்பட்ட ஒரு காரணத்தைச் சொல்கிறேன். பெண்ணுக்குப் பிரசவ காலம் நெருங்கும்போது எந்த நேரத்திலும் அவளுக்கு வலி எடுக்கக்கூடும். அது இரவாகவும் இருக்கலாம், பகலாகவும் இருக்கலாம். அப்பொழுது அவள் வலியால் புரண்டு படுக்கும்போது கேட்கும் வளையல் சத்தம் மற்றவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பி அவளுக்குத் தேவையான கவனிப்பை அளிக்க வழி வகுக்கும் அல்லவா? சில பெண்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் எழுப்பாமல் இருந்துவிடக் கூடும். வளையல் சத்தம் சரியான சமத்தில் அவளுக்கு மற்றவரின் கவனிப்பை அளிக்கும் என்று நான் நினைத்துக்கொள்வேன். இது என்னுடைய சொந்த கருத்து.
எஸ்.ஏ.பூரணி

AnbE Sivam

கர்ப்பினிப் பெண்ணின் சந்தோஷத்துக்காக இருக்கலாம்..சும்மாவே நாம் எப்பவாவது கண்ணாடி வளையல் கை நிறைய அணிந்து கொண்டால் அன்று என்னவோ ஒரு சந்தோஷம் வரும்.ஜலீலக்கா அடிக்கடி சொல்வாங்க சந்தோஷமா இருக்கனும்னா எப்பவாவது வளையல் கை நிறைய போட்டுக்கனும்னு..
அதனால் தான் என நினைக்க்கிறேன்
முன்பெல்லாம் நான் கர்ப்பமாக இருப்பவர்கள் பக்கம் கூட பார்க்க மாட்டேன்..சே பார்க்கவே அசிங்கமாக இருக்கு என்று நினைத்துக் கொள்வேன்.சொந்த அனுபவத்தில் தான் எவ்வளவு பெருமையான விஷயம் என்று புரிந்தது.கர்பினிப் பெண்ணை கவுரவிப்பதற்காக வந்த சடங்காக இருக்கலாம்

அஸ்வதா,சொன்னதை தான் நானும் நினைத்தேன்.கர்ப்பிணியின் பயத்தை போக்கி சந்தோஷமாக்கவும்,அம்மா வீட்டிற்கு சென்று ஒய்வெடுக்கவும் ஒரு சான்ஸ்.

ஆமினா,அஸ்வதா,மஹி,ரீம்,தளிகா,பூரணி உங்கள் அனைவரின் கருத்திர்க்கும்,பதிலுக்கும் நன்றி!

என் தாய் வீடு இந்தியாவில்,நான் மிகவும் பயத்துடனும்,கவலையாகவும் இருக்கிறேன். நீங்கள் சொல்வதை கேட்கும் போது தெம்பா இருக்கு,உங்கள் வாழ்த்துக்கு நன்றி!!!!

கல்பனா கவலை படாதீங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

இதுவும் கடந்து போகும் !

இக்கருத்தை நன்றாக உள்ளது

மேலும் சில பதிவுகள்