சீன பிஷ் ஃப்ரை

தேதி: May 2, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய அருள்மீன் - ஒன்று
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
வினிகர் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் சாஸ் - 100 மில்லி
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - ஒரு ஸ்பூன்


 

முதலில் மீனை சுத்தம் செய்து, இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
அரிசி மாவு, வினிகர், உப்பு சேர்த்து மீன் மீது தடவி 10 நிமிடங்கள் வைக்கவேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை லேசாக வதக்கி, அத்துடன் மிளகாய் சாஸ் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும்.
சற்று பெரிய கடாயில் அரை லிட்டர் எண்ணெய் விட்டு நன்றாக சூடு வந்தவுடன் மீனை மெதுவாக எண்ணெயில் விட வேண்டும்.
ஒரு நிமிடம் கழித்து மீனை புரட்டி போட்டு, இன்னும் ஒரு நிமிடம் வேகவிட்டு மெதுவாக எடுத்து ஒரு தட்டில் வைக்கவேண்டும்.
ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சாஸை, அதன் மீது ஊற்றி, சூடாக பரிமாறலாம்.
இது தனியாகவோ சோற்றுடன் சேர்த்தோ சாப்பிட சுவையாக இருக்கும்.


எண்ணெய் நன்றாக சூடு வரும் முன் மீனை அதில் போடக்கூடாது. அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. மீன் சிறியதாக இருந்தால் வெட்டாமல் முழுமையாகவே வேகவைக்கலாம். இது சீனர்கள் மிகவும் விரும்பி உண்ணும் மீன் உணவு.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சகோதரி அஸ்மா,

அருள் மீன் என்பது நான் இதுவரை கேள்விப்படாத மீன் வகை. இதற்கு வேறு ஏதும் பெயர் உண்டா ? இந்த ஃபிரை வேறு எந்த மீன் கொண்டு செய்யலாம் ?

அன்புள்ள ரீட்டா!நலமா?

அருள் மீன் பற்றி கேட்டிருந்தீர்கள். அதன் வேறு பெயர் என்னவென்று தெரியாததால் உங்களுக்கு உடனே பதில் கொடுக்கவில்லை. இங்கு சிலரிடம் விசாரித்துப் பார்த்ததில் எல்லோருமே அருள் மீன் என்றே சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் "Indian Halibut" என்றும் சொல்கிறார்கள். அதன் அடையாளங்களை எனக்கு முடிந்தவரை சொல்கிறேன்.

அருள் மீன், நாக்கு மீன், திருக்கை மீன், திமிலை மீன் போன்றவை ஒரு பக்கம் வெள்ளை நிறமாகவும், மறுபக்கம் கறுத்த நிறமாகவும் இருக்கும். தட்டையாக இருக்கும். இரண்டு கண்களும் இரண்டு பக்கமாக இல்லாமல் ஒரே பக்கமாக இருக்கும். ரொம்ப சீக்கிரம் வெந்துவிடக்கூடிய மிருதுத் தன்மைக் கொண்டதாக இருக்கும். எதற்கும் இந்த link ஐ பாருங்கள்!

http://habitatnews.nus.edu.sg/guidebooks/marinefish/text/383.htm

வேறு மீன்களில் இந்த ஃபிரை செய்யவேண்டுமானால் அதே டைப் கொண்ட நாக்கு மீனில் செய்யலாம்.

அன்பு சகோதரி அஸ்மா,

நான் நலம், நீங்க எப்படி இருக்கீங்க ? உங்க அழகான, விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. இங்கு நாக்கு மீன் கிடைக்கும். அதை வைத்து இந்த ஃபிரை செய்து பார்க்கிறேன்.