மீன் பிரியாணி

தேதி: February 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (20 votes)

 

பாசுமதி அரிசி - 3 டீ கப் (தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறியது)
(அதல், காக்கை, கொடுவா )மீன் துண்டுகள்- 5, 6
எண்ணெய் - அரை கப்
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
புதினா, மல்லி இலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு

தயிர் பச்சடி செய்வதற்கு:
தயிர் - 3/4 கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய கேரட் - சிறு துண்டு
பொடியாக நறுக்கிய மல்லி - சிறிதளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - அரை தேக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கி வைக்க வேண்டும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
மீனை சுத்தம் செய்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் முறுகாமல் அரை பாகம் வேகும் அளவு பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் தயிர், மல்லி இலை சேர்த்து கிளறவும்.
பிறகு பொரித்த மீன் துண்டுகளை மசாலா கலவையில் போட்டு மூட வேண்டும்.
ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் விகிதம் 3 கப் அரிசிக்கு 4 கப் (அரை கப் குறைத்துக்கொள்ள வேண்டும்) தண்ணீர் ஊற்றி தனியே ரைஸ் குக்கரில் சாதம் செய்யவும். கொதி வரும் போது அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்தால் சாதம் தனித்தனியே வரும்.
மசாலா கலவையில் மீன் வெந்ததும் மீனை தனியே எடுத்துவிட்டு சாதத்தை அதில் கொட்டி கிளற வேண்டும்.
கிளறியவுடன் சாதத்தின் மேல் மீன் துண்டுகளை போட்டு, புதினா, மல்லி இலை சேர்க்கவும்.
பிறகு பாயில் பேப்பர் கொண்டு மூடவேண்டும்.(மிதமான தீயில்) கால் மணிநேரம் கழித்து இறக்க வேண்டும்.
தயிர் பச்சடிக்கு தேவையானப்பொருட்களில் சொன்னதுபோல் எல்லாவற்றையும் தனியே நறுக்கி வைக்கவும்.
பிறகு அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு பிசைந்து பிரிட்ஜில் கால் மணிநேரம் வைத்திருந்து பரிமாறவும். தயிர் பச்சடி தயார்.
அருமையான மீன் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடியும் சேர்த்து பரிமாற சுவையோ சுவை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்கள் மீன் பிரியாணி பார்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது.கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்பேன்.thank u very much

Tharifa.

மீன்ல பிரியாணி செய்யணும்னு ரொம்ப நாளா ஆச. ஆனா ரிஸ்க் எடுத்து சொதப்பிச்சுன்னா அடுத்து பிரியாணி செய்யவே முடியாது :( ஆனா உங்க குறிப்புல மீனை தனியா எடுத்துடுறதுனால அப்படியே உடையாம இருக்கும்னு நெனைக்கிறேன்.

கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆசை யார விட்டது;) எங்க வீட்டிலேயும் ஒவ்வொருதடவை மீன் வாங்கிட்டு வரும்போதும் மீன் பிரியாணி செய் செய்னு கெஞ்சலா இருக்கும்;-)
ரிஸ்க்கெல்லாம் எனக்கு ரஸ்க்குன்னு சொல்ற நானே இதுவரைக்கும் இந்த மீன் பிரியாணி ரிஸ்க் மட்டும் எடுத்ததில்லை;-))
உங்க தயவில இனி நானும் செஞ்சு அசத்திடறேன், நன்றி அசத்தலானக் குறிப்புக்கு;-).

Don't Worry Be Happy.

வித்யாசமான குறிப்பு மீன் பிரியாணி நான் கேள்விப்பட்டதே இல்ல .இதுபோல் நல்ல வித்யாசமான குறிப்பு கொடுக்க வாழ்த்துக்கள்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

உங்கள் பெயரை தெரிந்துக்கொள்ளலாமா .முதலில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.பார்க்கவே மிக அருமையாக உள்ளது.செய்தால் மிக சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.முயற்சி செய்து பார்க்கிறேன். என்னுடைய மற்றும் என் மகனுடைய favourite dish.தொடரட்டும் உங்கள் படைப்புகள்.

Expectation lead to Disappointment

பிஷ் பிரியாணி பார்க்கவே சூப்பரா இருக்கு,என் ஹஸ்க்கு ரொம்ப பிடிக்கும்,ப்ரண்ட்ஸ் வீட்டில் சாப்பிட்டு இருக்கோம்,ஆனா, எனக்கு மீன் பிடிக்காது,சீக்கிரமே செஞ்சு பார்க்கிறேன்.

என்ன ஹசீனா இது எனக்கு தராமல் அறுசுவைக்கு அனுப்பிட்டிங்களே ..
எனக்கு மீன் பிரியாணி சரியா செய்ய வராது நான் முயற்ச்சித்து பார்க்கிறேன் உங்கள் குறிப்பை சரியா பிரியாணி தராததால் அழுதுகொண்டே வாழ்த்தும் தோழி ...ருக்சானா

வாழு, வாழவிடு..

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும்,குழுவிற்கும்

எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹசீன்

ஹசீனா, மீன் பிரியாணி சூப்பர் பா. ஒரே முறை என் கணவரின் நண்பர் செய்து சாப்பிட்டு இருக்கிறேன். உங்கள் குறிப்பு மிகவும் எளிமையாக, விளக்கமாகவும் உள்ளது. மீனுக்கு தூண்டில போட்டிருக்கேன். மாட்டினவுடனே பிரியாணிதேன். படத்துல வச்சிருக்கறத யார்க்கும் தராதீங்க. இதோ நான் வந்துட்டே இருக்கேன். வாழ்த்துக்கள் பா :) தொடரட்டும் பிரியாணி பணி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் mrs .ஹனிபா நலமா?
உங்க பெயர் என்ன?
உங்க அன்பான வாழ்த்துக்கு நன்றிமா.

ஹசீன்

ஹாய் ஆமினா,

ரிஸ்க் எடுங்க.ஏன்னா உங்களுக்கு ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி.

(நிறைய குறிப்புகள் தெரியும் என்பதற்கு சொன்னேன்)

செய்துப்பாருங்கள்.நன்றிமா.

ஹசீன்

ஹாய் ஜெயா நலமா?
அடுத்ததடவை மீன் வரும் போது ரிஸ்க் எடுத்து செய்து
ரஸ்க்கை சாப்பிட்டு விடுங்கள்.

உங்க அன்பான பதிவிற்கு நன்றி ஜெயா.

ஹசீன்

ஹாய் அஸ்வதா,

மீன் பிரியாணி கேள்விப்பட்டதே இல்லையா?
ஒரு நாள் செய்துப்பார்ருங்கள் .

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

ஹசீன்

அஸ்ஸலாமு அலைக்கும் ஹசீனா....,நலமா...?
மீன் பிரியாணி பார்க்கும் போதே சூப்பராக இருக்குங்க...
இதே போல் தான் மீனை பொறித்து தம் போடும் விதம் எல்லாமே....
ஆனால் நீங்கள் தக்காளியே சேர்க்கவில்லையே... அது புதுமையாக இருக்கு.
நீங்கள் செய்திருக்கும் முறைபடி ஒரு தடவை செய்துபார்க்கணும்.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ஹசீனா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

என் பெயர் தாரிfஆ.உங்கள் பெயர் ஹசீனா என்பதை தெரிந்து கொண்டேன்.உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் சூப்பர்.

Tharifa.

ஹாய் ஹசீனா மீன் பிரியாணி செய்யணும்னு ஆசை,என்னவர் கேட்டுடே இருப்பார்,செய்ய சொல்லி,ஆனா பயம் சொதப்பிடுவனோன்னு,உங்க குறிப்பு எளிமையா,தெளிவா,சூப்பரா இருக்கு,விரைவில் செய்துவிட்டு சொல்கிறேன்,எப்படி வந்துச்சுன்னு,,,,,,,,உங்களுக்கு என் நன்றி +வாழ்த்துக்கள்.ஒரே ஒரு doubt நெய் சேக்க தேவையில்லையா????

சலாம் ஹசினா ,மீன்ல பிரியாணிசெய்யணும்னு ரொம்ப நாள் ஆசை ரிஸ்க் எடுக்க பயம் நீ குடுத்த குறிப்பு ஈசியா இருக்குடா கண்டிப்பா செய்துட்டு சொல்றேன்
வாழ்த்துக்கள்
விருப்ப பட்டியில் சேர்த்தாச்சு

ஹாய் மீனால் நலமா?
என் பெயர் ஹசீன். செய்துப்பாருங்கள் மீனால்.

உங்க செல்லத்துக்கும் கொடுங்க.உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

ஹசீன்

ஹாய் ரீம்,
சீக்கிரமே செய்துக்கொடுங்க.உங்க பதிவிற்கு நன்றிமா.

ஹசீன்

மீன் பிரியாணீ சூப்பர் பா செய்துட்டு சொல்ரேன் சிம்பளாவும் இருக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
ஸ்ரீ

என்ன ருக்ஸானா,இப்படி சொல்லிடீங்க.உங்களுக்கு இன்னுமா வரவில்லை.

முதலில் உங்களுக்கு தான்.செய்துப்பாருங்கள் ருக்ஸானா.

ரொம்ப நன்றிமா.(கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்)very good.
என் id . அப்சராவிடம் வாங்கிகோங்க.விருப்பம் இருந்தால்.

ஹசீன்

ஹாய் கல்ப்ஸ் நலமா,

மீன் கிடைத்ததா.செய்துப் பாருங்கள்.இப்போதான் ருக்ஸானா பாதி வாங்கிட்டாங்க.

உங்களுக்கு பிரெஷ்ஆ கொடுக்கிறேன் வாங்க.ரொம்ப நன்றி கல்ப்ஸ்.

ஹசீன்

ஹசீனா மீன் பிரியாணி செய்முறை ஈசியா இருக்குற மாதிரி தெரியுது. எனக்கொரு சந்தேகம் ஹசீன் மசாலாவில் மீன் துண்டுகளை போட்டுட்டு தண்ணீர் ஊற்றனுமா. ஊற்ற கூடாதா? மீனை அரைப்பாகம் தானே வேக வைச்சு சேர்த்திருக்கோம். எப்படி மீன் நல்லா வேகும்?

ஹாய் அப்சரா,

நீங்களும் இப்படிதான் செய்வீங்களா.

நான் தக்காளி சேர்த்து இருக்கிறேனே அப்சரா.கவனிக்கவில்லையா!

உங்க பராசாப்பம் செய்து அனுப்பிவிட்டேன்.

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

ஹசீன்

ஹாய் நலமா?

தைரியமா செய்துப்பாருங்க நம்ம வீடுதானே. 2 தடவை சொதப்பினால் அடுத்ததடவை

சரியாக வந்துவிடும்.நெய் சேர்க்கலாம்.மோஸ்ட்லி நான் நெய் சேர்ப்பதில்லை.

நெய் சேர்த்தல் இன்னும் மனமாக இருக்கும்.உங்க வாழ்த்துக்கு நன்றிமா.

ஹசீன்

தாரிfஆ ரொம்ப நன்றிma.

ஹசீன்

வளைக்கும்சலாம் மா நலமா,

கண்டிப்பா செய்துப்பாருங்கமா.நல்லா வரும்.

உங்க அன்பான வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

ஹசீன்

ஹாய் ஸ்ரீ,

செய்துப் பார்த்துவிட்டு சொல்லுங்க மா.

உங்க வாதுக்கு ரொம்ப நன்றிமா.

ஹசீன்

ஹாய் வினோஜா நலமா,

தண்ணீர் ஊற்ற வேண்டாம்.மீன் மசாலாவிலே வெந்துவிடும்.தயிர் எல்லாம் இருக்கு இல்லையா.

அரை பாகம் என்றால் ஒரு பக்கம் மட்டும் இல்லை.அரை பொரியல்,இரண்டு பக்கமும் தான்.

மீனை போட்டு மூடிமூடிவிடுகிறோம் அல்லவா,சந்தேகமே வேண்டாம்.நல்ல வெந்து இருக்கும்

நன்றிமா.

ஹசீன்

ஹசீனா நான் நலம். சந்தேகத்தை தெளிப்படுத்திற்கு நன்றி. போட்டோஸில் பார்க்கும் போது தண்ணீர் ஊற்றியது போல் இருந்தது அதான் கேட்டேன்.

hope, it ll be good in taste. though am a new comer to kitchen side, but am very interested in cooking. so i ll try this recipe. sister's, pls do send kinds of receipes, it ll help the girls like me. assalamu alikkum. peace be upon u all.

மீன் பிரியாணி ரொம்ப அருமையாக இருக்கு

ஜலீலா

Jaleelakamal

ஹசீனா... பார்க்கவே ஆசையா இருக்கு. எல்லாரும் மீன் பிரியாணி வாடை வரும்'னு சொல்றாங்களே... நிஜமா? அதனாலேயே நான் மீனில் பிரியாணி செய்ய தயங்குவேன். இதை பார்த்ததும் எனக்கு செய்ய ஆசை வந்துட்டுது. மீன் உடையாதா? நல்ல சுவையான குறிப்பு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் நசீமா நலமா?
welcome to arusuvai.........
உங்க அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.
மேலே யாரும் சமைக்கலாம் பகுதிக்கு போய்ப் பாருங்கல்மா..
நிறைய குறிப்புகள் கிடைக்கும்.

ஹசீன்

ஜலீலா அக்கா,

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா..

ஹசீன்

வனி அக்கா நலமா,

மீனை நாம் சுத்தம் செய்வதில் தான் இருக்கு. உப்பு,மஞ்சள்,வினிகர் போட்டு கழுவினால்

மீனின் வாடை சுத்தமாக வராது. கண்டிப்பாக செய்துப் பாருங்கள்.

மீனை எடுத்துவிட்டு சாதம் சேர்த்து கிளறி விட்டு மீனை அதன் மேல் போட்டு தம் போட்டால்

உடையாமல் வரும்.

நன்றி அக்கா உங்க வாழ்த்துக்கு............

ஹசீன்

மீன் பிரயாணி சூப்பர். கண்டிப்பா செய்துவிட்டு சொல்றேன். ரொம்ப சுலபமா இருக்கு.
மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்

மீன் பிரியாணி செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருதது. கணவரின் பாராட்டு மழை-ல் நனைத்தேன்.
என் பெயர் நித்யா. ஆறுசுவைக்கு புதிய மெம்பெர்.

வாழ்க வளமுடன்

ஹாய் நித்தியா நலமா?
welcome to arusuvai...
வாவ்.............மீன் பிரியாணி செய்துப் பார்த்தீங்களா,
ரொம்ப சந்தோசம்.

ஹசீன்

உங்க புனியத்தில் பாராட்டு கிடைத்தது. :) Marriage ஆகி 6 மாதகள் ஆகிறது. உங்க recepies ரொம்ப useful லா இருக்கு.

வாழ்க வளமுடன்

superb recipe

love ever.. hurt never

இன்று உங்க மீன் பிரியாணி செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது tuna மீன் மட்டும் தான் சேர்த்தேன். நான் தேங்காய்ப் பால் சேர்த்தேன். தயிர் தெரியாது எங்கு கிடைக்கும். ரொம்ப சூப்பர் receipe

ஹாய் அனு நலமா?
செய்துவிட்டீர்களா.ரொம்ப சந்தோக்ஷம்.
இதற்கு தேங்காய்ப் பால் சேர்க்க கூடாது.தயிர் என்றால் yogaurt என்று கேளுங்கள்.super marketஇல் கேளுங்க...

thank you..

ஹசீன்

இன்று மீன் பிரியாணிசெய்து சாப்பிட போறம்.

I cooked Fish Briyani and really super.