காதலா... காதலா...

வைரமுத்து எழுதிய "தண்ணீர் தேசம்" கவிதை தொகுப்பில் ஹீரோ ஹீரோயின அறிமுக படுத்தும் போது ஒரு அருமையான வசனம் இருக்கும்...என்னை மிகவும் கவர்ந்த இரு வரிகள் - "இப்போது மனைவி போல் இருக்கும் என் காதலி... பின்னாளில் காதலி போல் இருக்க போகும் என் மனைவி"... ரொம்ப சிம்பிளான வரிகள் தான், ஆனால், அதில் ஒரு ஆளமான உண்மை இருக்கு...கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் காதலர்களாக நினைத்தால்,திருமண வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழலாம்... இல்லையா... நான் எதுக்கு இவ்ளோ பில்ட்-அப் விடறேன்னு பாக்குறீங்களா...வேற எதுக்கு...பிப்ரவரி வந்தாச்சு... Valentine's day-கு என் அத்தானுக்கு என்ன கிஃட் கொடுக்கலாம்நு யோசிச்சிட்டு இருந்தேன்...சரி, நம்ம தோழிகள்கிட்ட கேக்கலாம்நு தான் இந்த இழை... So, Valentine's day-கு உங்க ப்ளான் என்ன??

1) "Valentine's day எல்லாம் வெளிநாட்டுல தான் கொண்டாடுவாங்க, அது நம்ம கலாச்சரத்தை கெடுக்குது"
2) அது என்ன காதலை வெளிப்படுத்த தனி ஒரு நாள் மட்டும்... அதில் எனக்கு உடன்பாடில்லை
3) நாங்க அரேஞ்டு மேரேஜ், அதுனால, Valentine's day எல்லாம் நாங்க கொண்டாட மாட்டோம்...

அன்பு தோழிகளே...
தயவு செஞ்சு நான் மேல எழுதியிருக்கிற, 3 டைலாக் சொல்லாம, கொஞ்சம் ஜாலியா எடுத்துட்டு பதிவிடுங்க, சரியா??

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

எல்லாமே தெளிவா, அழகா சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா இதுக்கு நம்ம தோழிகள் வரவேற்ப்பு அதிகமா தான் இருக்கும்

//நாங்க அரேஞ்டு மேரேஜ், அதுனால, Valentine's day எல்லாம் நாங்க கொண்டாட மாட்டோம்...///-இந்த மாதிரி யாரும் சொல்லிடாதீங்க, லவ் மேரேஜ் பண்ணுனவங்க தான் கொண்டடனும்ன்னு ஒன்னும் இல்ல, அரேஞ்டு மேரேஜ் கொண்டாடறது தனி அழகுங்க.. அந்த அழக இங்க வந்து சொல்லுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஷர்ட் ,பேனா ,அவர் இப்போதைக்கு ஆசை படுற பொருள் ஏதாவது வாங்கி தரலாம்.
அவருக்கு பிடித்த சமையலை விதவிதமா நிறைய வகை செய்து அசத்தலாம்...!!!எதை மறந்தாலும் ஆண்கள் இதை மறக்கமாட்டார்கள்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுகந்தி, அஸ்வதா - பதிவிற்கு நன்றி..
சுகந்தி - தோழிகள் வந்து பதிவிடட்டும்... நீங்களும் உங்க Valentine's day ப்ளான் சொல்லலாமே...
அஸ்வதா - ஐடியாக்கு நன்றி... ஆனால், ஷ்ர்ட், பேனா எல்லாம் நார்மலா எப்போதும் கொடுக்கிற கிஃட் இல்லயா???... எதாச்சும் வித்தியாசமா,தோணுச்சுன்னா கண்டிப்பா வந்து சொல்லுங்க...

அப்புறம் தோழிகளே... கிஃட் ஐடியா மட்டும் இல்லாம, நீங்க Valentine's day எப்படி கொண்டாடலாம்நு இருக்கீங்க,இதுக்கு முன்னாடி எப்படி கொண்டாடி இருக்கீங்க, உங்க அன்பு கணவருக்கு என்ன வாங்கி கொடுக்கலாம்நு இருக்கீங்க, இதையும் பகிர்ந்து கொள்ளலமே...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

அவருக்கு ரொம்ப பிடித்தது .அவர் தேடி பார்த்து கிடைக்காதது நீங்க கொஞ்சம் இப்ப ரிஸ்க் எடுத்து தேடிப்பாத்தா கிடைக்கும் எங்கின்ர ஏதாவது ஒரு திங்க்ஸ் வாங்கி கொடுக்கலாம் அது அவங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை குடுக்கும் அப்பரம் ஷேர்ட் , காஸ்ட்லி பர்ஸ் இப்படி நிரய இருக்கு

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஸ்ரீ... நீங்க சங்கீநு என்னை தான் சொல்லிருபீங்கன்னு நினைகிறேன்னு... :) என் பெயர் சரண்யா... ஓகே... உங்க ஐடியா நல்லா இருக்கு... அஸ்வதாவும் இத தான் சொன்னாங்க... குட்...

அப்புறம் ஸ்ரீ, நீங்க //இப்படி நிரய இருக்கு// அப்டீனு சொல்லிருகீங்க... எப்டிங்க... ஜென்ட்ஸ்-கு கிஃட் செலக்ட் பண்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா... ஹையோ... நா அதுல ரொம்ப அனுபவ பட்டிருகேன்... ஒவ்வொரு occasion-கும் அத்தானுக்கு கிஃட் வாங்கறதுக்குள்ள, தலையே வெடிச்சிடும்...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

இந்த வருடம் என் ப்ளான் "PLATINUM BAND OF LOVE" JOYALUKAS. எப்படி?

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

வாவ்வ்வ்வ்... கலக்குங்க நாகராணி...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

இதுவரைக்கும் நீங்க என்னெல்லாம் வாங்கி கொடுத்து இருக்கீங்கன்னு சொன்னால் எங்களுக்கு வசதியாக இருக்கும்.சொல்றீங்களா???

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பெல்ட், பெர்பியும், வாட்ச், டை, டிரஸ், ரிங், பெர்முடாஸ், சன்கிளாஸ் இவ்வுளதான் எனக்கு தெரியுது. எல்லா நாளும் அன்பாகதான் இருக்கும். இது ஸ்பெசல் டே. திபா

மேலும் சில பதிவுகள்