NRIஐந்து வயது சிறுவன் படிக்கவைக்க வழி கூறுங்கள்

அறுசுவை தோழிகள்,அம்மாக்கள் அனைவருக்கும் வணக்கம்

என் 5வயது மகன் படிக்கிறான், பள்ளிக்கு செல்ல ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. படிக்கறது ,எழுதுவது எதுவுமே செய்ய மாட்டேன் என்கிறான். 21/2 வயதில் இருந்தே எழுதுவான் தமிழ் பாட்டு ஆங்கிலம் பாட்டு எல்லாம் அழகாக பாடுவான். இப்பொழ்து எல்லாம் தலைகீழ் எதையும்
சொல்ல மாட்டேன் என்று விளையாட்டில் மட்டும் கவனம் அதிகமாக இருக்கிறது.
பள்ளியில் அமைதியாக இருப்பான், இப்பொழுது சேட்டை செய்கிறான் எதையும் எழுதுவது இல்லை என்று ஆசிரியர் குறைபட்டு கொல்கிறார்கள். நான் பொருமையாக சொல்லி பார்த்துவிட்டேன், அடித்தும் சொல்லி பார்த்துவிட்டேன், எல்லாம் ஐந்து நிமிடம் வரைக்கும் தான். என்ன காரணமாக இருக்கும் என்று தெரிந்து கொல்ல முயற்ச்சி செய்து பார்த்ததில், என் உறவினர் மகன்[14], மகள்[12] இரண்டு பிள்ளைகளும் எதிர்த்து பேசுவது,படிக்காமல் சண்டையிடுவது, மகள் எதர்க்கு அழுகிறாள் என்று உடனே சொல்ல மாட்டா கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கடைசியாக சொல்வாள்.

எதற்க்கும் அடம் பிடிக்காதவன், அப்பா,அம்மா சொல்படி நடந்தவன், இப்பொழுது தலைகிழாக மாறினது காரணம் தெரிந்தது.
அக்கா,அண்ணா இப்படிதானே செய்றாங்க நான் செய்தால் மட்டும் திட்டுகிறீர்கள் என்று கூறுகிறான்.
[அப்பாடா ஒருவழியா காரணம் கண்டுபித்த சந்தோஷம் ]

வெளிநாட்டில் இருந்து வந்து ஒரு வருடம் ஆகிறது. இங்கு பிள்ளைகள் செய்வதை அமைதியாக பார்ப்பான் நானும் வேலையில் பிள்ளைகளுடன் விளையாடட்டும் என்று இருந்தேன் இப்பொழுது பிரச்சினையில் வந்து நிற்கிறேன்.

இந்த சூழ்நிலையால் பாதிக்க படாமல் என் மகன் அவனாக இருக்க பழையபடி மாற வழிகூறுங்களேன்.

இது குறித்து எனக்கும் ஒரு பெரிய மனக்குழப்பம் உள்ளது..படிப்பில் எந்த வித்யாசமும் இல்லை என்றாலும் எனது ஐந்து வயது மகளும் மற்ற பிள்ளைகள் செய்வதை தாமும் செய்து பார்க்க விரும்புகிறாள்..ஒழுக்கமான பழக்கவழக்கங்களை கற்பிப்பதில் என்னை விட என் கணவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.அப்படி ஒழுங்கா இருக்கும் பிள்ளை சில குழந்தைகளுடன் பழகினால் அன்று வாயில் எச்சிலால் முட்டை விடுவது,கைய்யில் எதையாவது சாப்பிட்டு ட்ரெஸ்ஸில் துடைப்பது என இந்த மாதிரியான பழக்கங்களை செய்து பார்ப்பாள்.கேட்டால் காரணமும் உடனே வந்து விடும்..அந்த பைய்யன் அப்படி தானே செய்கிறான் அவன் அம்மா ரொம்ப குட் மம்மா ஒன்னும் சொல்றதில்லை நீங்க தான் வேண்டாம்னு சொல்றீங்க என்று சொல்கிறாள்..பல சமயம் வளரும் பருவம் தானே என்று விட்டாலும்..சில சமயம் இப்படிப்பட்ட கெட்ட பழக்க வழக்கங்களிலுள்ள பிள்ளைகளிலிருந்து குழந்தைகளை அகற்றி நிறுத்த வேண்டுமோ என்று சந்தேகமும் எழுகிறது.
முன்பு செருப்பு போடாமல் காரிடரில் இறங்க மாட்டாள் ஆனால் சமீப காலமான சில முறை செருப்பில்லாமல் ஓடி விட்டாள் அதற்கும் காரணம் பொறுமையாக "அவன் செய்யும்போது எனக்கும் செய்ய ஆசை " எஙிறாள்
மட்டுமல்லாது இந்த மாதிரியான அடம் பிடி,வால் பிள்ளைகளுடன் தான் பழகவும் விரும்புகிறாள்..வேண்டாம் என்று ஒரு அளவிற்கு மேல் தடுக்க முடிவதில்லை
இல்லை அதையெல்லாம் நாம செய்து பார்க்க கூடாது நீ நல்ல பிள்ளை என்றால் புரியவும் செய்கிறது இருந்தாலும் நாமும் செய்து பார்க்கலாமே என்றொரு ஆர்வம்..என் சந்தேகம் இப்பொழுது இந்த பழக்கங்கள் நாம சொல்ல சொல்ல மாறுமா அல்லது இம்மாதிரி பிள்ளைகளிடம் நெருங்க விடாமல் பார்க்கலாமா..அது தவறோ என்றும் தோன்றுகிறது

உங்கள்மனகனின் பழக்கவழக்கங்கள் மாற்றம் அதற்கு காரணமாக இருக்கலாமே தவிற படிப்பு மாற அதிக காரணம் அதுவாக எனக்கு படவில்லை..ஆர்வமின்மையே காரணம்..படிக்க உட்கார்ந்தால் தப்பு செய்தால் கோவத்தால் அடிக்க வேண்டாம்..ஆர்வத்தில் தொடங்குவது வெறுப்பில் முடியும்.
வால் பிள்ளைகள் இருக்க தான் செய்யும் தப்பில்லை..ஆனால் சில அம்மாக்கள் என்ன செய்தாலும் கல் போல பார்த்துக் கொண்டிருப்பார்கள்..அதை பார்க்கையில் நம் குழந்தைகளுக்கு நம் அம்மா மட்டும் இதெல்லாம் செய்ய விடுவதில்லையே என்ற ஒரு எண்ணம் தோன்றுகிறது என்று நினைக்கிறேன்

இல்லை தளிகா என் பையனையும்
நான் நன்றாக கவனித்து பார்த்துவிட்டேன்.மற்ற குழந்தைகள் என்ன கெட்ட
பழக்கம் பலகுகிரார்களோ (மரியாதை குறைவாக பேசுவது நீங்க என்று சொல்லாமல் நீ என்று சொல்லுவது,நம்மை அடிப்பது ,எத்துவது,கிள்ளுவது,எச்சிலில் முட்டைவிடுவது,நாக்கால் நம்மை நக்குவது ,பேச்சில் மாற்றம்...........இப்படி நிறைய அனுபவப்பட்டு ,இப்போது அவனை யாருடனும் நான் இல்லாமல் விளையாட விடுவது கிடையாது.....மற்ற பிள்ளைகளுடன் அவன் இருக்கும் நேரத்தை குறைத்து விட்டேன்.விளையாடவிட்டு வினையை வாங்குவதைவிட ,,,,விளையாட விடாமல் ,நாமே அவர்களுடன் விளையாடுவது உசிதம் என்று நினைக்கிறன்.....இப்போது உள்ள குழந்தைகளிடம் நல்லதை கற்பதைவிட கேட்டதை சீக்கிரமே கற்கிறார்கள் ,மற்ற குழந்தைகளை குறை சொல்வதைவிட நாமே நம் குழந்தையை பாதுகாத்துகொள்ளலாம்.....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அன்பு தோழி தளிகா நீங்கள் கூறுவது முற்றிலும் சரி இங்கு அம்மாக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
///அதை பார்க்கையில் நம் குழந்தைகளுக்கு நம் அம்மா மட்டும் இதெல்லாம் செய்ய விடுவதில்லையே என்ற ஒரு எண்ணம் தோன்றுகிறது///
என் வீட்டிற்கு அருகில் இருக்கும் பெண் பிள்ளை என் அம்மா தான் நல்ல அம்மா மண்ணில் விளையாடுகிறேன் பார்த்தியா என்று சொல்ல என் மகன் வீட்டுக்கு வந்து என்னிடம் சொல்லி அழ அரம்பித்துவிட்டான் நான் புரியவைப்பதற்குள் நான் ஒரு வழி ஆகிவிட்டேன். இப்பொழுது மண்ணை தோட மாட்டான் கையில் புண்ணு வரும் அந்த பொண்ணுக்கு சொல்லகிறான்.

இது இருபக்கம் இருக்க என் கணவருக்கு வேறு இடத்தில் வேலை கிடைத்து வந்து புது இடம், புது பள்ளி, பிள்ளைகள் எல்லாம் அவன் வயது ஒத்த பிள்ளைகள் எல்லாம் நன்றாக விளையாடிட்டு படிக்கிற நேரத்தில் படித்துகொண்டுஇருந்தான். எந்தநேரம் ஒரு நோட்டு பென்சில் கையில் வைத்து எழுதி கொண்டும் இருப்பான். நான் பொதும் நாளைக்கு படிக்கலாம் என்று கூறி புத்தகத்தை வாங்கி வைப்பேன், ஆர்வம் இருந்து இருக்கிறது தோழி இப்பொழுது halfyearly leave முடிந்து இந்த ஒரு மாததில் homework note எடுத்து இரண்டு வரி எழுதிட்டு மீதி எழுதாமல் பென்சில் இல்லை, சாக்கு சொல்லிட்டு ஏமாற்றுகிறான் மணிக்கணக்கில் எழுதவைக்க வேண்டி இருக்கிறது. தோசை திருப்பி போட்ட மாதிரி அகிவிட்டானே அதான் கவலை.
நீங்கள் சொல்வது போல் ஆர்வம் அதிகரிக்க முயற்ச்சிக்கிறேன்
உடனே பதில் தந்தமைக்கு நன்றி தோழி

தளிகா சொன்னது 100% உண்மைதான். என் பொண்ணும் அப்படித்தான் செய்கிறாள். எவ்வளவோ சொன்னாலும் கேட்பதில்லை. ஆனால் குழந்தைகளையும் குற்றம் சொல்ல முடியாது. இந்த வயதில் சேட்டை ப்ண்ணாம வேற எப்போ பண்ணுறது.... வெளியே விடாமல் பூட்டி வைத்தால் அவங்க குழந்தைப்பருவத்தை நாம் அபகரிப்பது போல் ஆகிவிடாதா... மற்ற பசங்ககூட விளையாட விட்டால் நல்லதும் கெட்டதும் சேர்ந்து படிக்கிறாங்க. குழந்தைகள் உலகமே தனிதான். அவர்கள் உரிமையை நாம் பறிக்கக்கூடாது. நாமும் கூடவே இருந்து கண்காணிப்பதே ஒரே வழி என்பது என் கருத்து.

மேலும் சில பதிவுகள்