சீர்வரிசை

பொங்கல் சீர் யார், யாருக்கு, எதற்காக கொடுப்பது விளக்கமாக கூறவும்.

தோழி மஹி, திருமணமான பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள் சார்ப்பாக சீர் வரிசை தருவார்கள். இதில் அவரவர் வசதிக்கு தகுந்தபடி புடவை, புது அரிசி,வெல்லம்,பருப்பு,கரும்பு,மஞ்சள் - இஞ்சி கொத்து, நெய், விளக்கு திரி போன்றவைகளை தருவார்கள். வயதான பிறகு இவ்வளவும் தர முடியாவிட்டாலும் பிறந்த வீட்டின் சார்பாக புடவையோ, பணமோ கண்டிப்பாக அந்த பெண்களுக்கு போய் சேரும். இதில் உள்ள காரணம் சரிவர தெரியவில்லை. பொறுத்திருங்கள். நம் தோழிகள் வருவார்கள் பதிலோடு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

திருமணமானவுடன் அந்த பெண்ணிற்கு பிறந்த வீட்டில் இருந்து பாத்திரம், புடவை, நகை , வெள்ளி சாமான்கள் , என்று கொடுப்பார்கள் . அதன் பிறகு தான் வருடத்திற்கு இரண்டு முறை வரிசை கொடுக்க ஆரம்பிப்பார்கள் . அதாவது பொங்கல் வருவதற்கு முன்னும் தீபாவளி வருவதற்கு முன்னும் கொடுப்பார்கள் . பெண்ணின் தந்தை நன்றாக இருக்கும் வரை அவர் தான் கொடுப்பார். வயோதிகமானால் அல்லது தவறிவிட்டால் அதன் பிறகுஉடன் பிறந்தவர்கள் கொடுப்பார்கள் .

திருமணத்திற்கு பின் முதன் முறை கொடுப்பது தெரியும், அடுத்த, அடுத்த முறை கூட வசதிக்கு ஏற்ற படி
//அதன் பிறகு தான் வருடத்திற்கு இரண்டு முறை வரிசை கொடுக்க ஆரம்பிப்பார்கள். அதாவது பொங்கல் வருவதற்கு முன்னும் தீபாவளி வருவதற்கு முன்னும் கொடுப்பார்கள்.//
எனக்கு தெரிந்த வரை இது பெண்ணுக்கு பிறந்த வீட்டிலிருந்து கொடுப்பது என்று தெரியும். ஆனால் என் முக்கியமான கேள்வி மருமகனுக்கு பெண் வீட்டிலிருந்து கொடுப்பது இல்லையே? என்பது தான்.

இதுவும் கடந்து போகும் !

மகி ,
மருமகனுக்கு பெண் வீட்டில் இருந்து என்ன கொடுக்கணும்னு எதிர்பாகுரீங்கன்னு எனக்கு தெரியல . திருமணமாகும்போது சீர்வரிசை என்ற பெயறில் ஒரு தந்தை தன் வாழ்நாளில் சம்பாதித்து சேர்த்து வைத்ததை செலவு செய்கின்றார் . அது போல் வருடம் தோறும் செய்யணும்னு எதிர்
பாகுரீன்களா ????????
கல்யாணத்தின் போது மணமகனுக்கு பட்டு வேஷ்டி , பட்டு சட்டை , செய்ன், பிரேஸ்லெட் அப்டின்னு போடுறாங்க. ஒரு வேளை அவர்கள் திருமணமானவுடன் தனி குடித்தனம் போகிறார்கள் என்றால் அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களையும் அந்த பெண்ணின் தந்தை தான் வாங்கி கொடுக்கிறார் . அந்த பொருட்களை என்ன அந்த பெண் மட்டும் தான் உபயோகிக்கிராலா ??? இருவரும் சேர்ந்து தானே உபயோகிகிரார்கள் .

வாங்க ரம்யஸ்ரினி, இப்படி பட்ட பதிலுக்காகதான் காத்திருந்தேன். ஆமாம் நீங்கள் சொல்வதுபோல //சீர்வரிசை என்ற பெயறில் ஒரு தந்தை தன் வாழ்நாளில் சம்பாதித்து சேர்த்து வைத்ததை செலவு செய்கின்றார்.//. எங்கள் வீட்டிலும் அதே போல்தான் நகைகள், மணமகனுக்கு பட்டு வேஷ்டி , பட்டு சட்டை , செய்ன், பிரேஸ்லெட், மோதிரம் (என் எல்லா சித்தப்பாகளும், மாமாக்களும்), வரவேற்புக்கு சூட்ஸ், இது தவிர மற்ற பூஜை சாமான்களும், பாத்திரங்களும் (குறைவு ஏனெனில் நங்கள் அமெரிக்கா வந்து விட்டோம்), கட்டில், பீரோ, மெத்தை, மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் திருமணத்திற்கு முன்பும், பின்பும்.

விஷயத்துக்கு வருகிறேன். இந்த நாலரை வருடத்தில் ஒவ்வொரு வருடமும் சீர் என்ற பெயரில் தீபாவளி, பொங்கல் மற்றும் என் புகுந்த வீட்டில் இருவர் இறந்ததற்கும் நகை, பணம், டிரஸ் (எனக்கு, என் கணவருக்கு, என் மாமியாருக்கு) கொடுத்தார்கள். இதனை என் பெற்றோர் அல்லது என் சித்தப்பா (என் பெற்றோர் வேறு ஊரில் உள்ளனர்) யாரேனும் என் மாமியார் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்தார்கள் (முக்கிய குறிப்பு: நாங்கள் அமெரிக்காவில் இருகின்றோம்). அவர்கள் என் மாமியார் வீட்டுக்கு வரும் போது அவர்கள் சரியான முறையில் நடந்து கொள்ளாததால் (அவமரியாதை செய்ததால்) என் பெற்றோர் கடந்த தீபாவளி சீரை போஸ்டலில் அனுப்பி விட்டனர். அதையும் அவர்கள் உடனே வாங்கி கொள்ளாமல் ஒரு மாதம் கழித்துதான் வாங்கி கொண்டனர் (வீட்டில் இல்லாமல் இருந்து இருக்கலாம்). அதனால் இந்த பொங்கலுக்கு என் பெற்றோர் பணத்தை (ஐந்தாவது பொங்கல்) எங்கள் joint அக்கௌன்ட் இருக்கும் வங்கியில் கட்டிவிட்டார்கள்.

உண்மையில் சொல்லவேண்டுமானால் என் கணவருக்கு இதை பற்றி எல்லாம் கவலை பட்டு கொண்டு இருக்கவும், நியாபகம் வைத்து கொண்டு இருக்கவும் நேரமும் இல்லை, அந்த அளவும் அவர் மோசமானவரும் இல்லை. பொங்கல் முடிந்து ஒரு மாதம் கழித்து கடந்த வாரம் (என் மாமியார் தொலைபேசியில் சொல்லி இருப்பார்கள் போல) ஏன் பொங்கல் சீர் வீட்டுக்கு வரவில்லை என்று என்னிடம் கேட்டுவிட்டு, அது மட்டும் இல்லாமல் என்னிடம் ஒரு வாரமாக பேசவில்லை, காலையில் நான் சீக்கிரம் வேளைக்கு சென்று விடுவதால் பேச கூட நேரம் இருக்காது, மாலையில் அவர் வெளியில் சாப்பிட்டு விட்டு லேட்டாக வருவார். அதற்குள் நான் தூங்கி விடுவேன் (எனக்கு அதை பற்றி விவாதம் செய்யவும் விருப்பமில்லை காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்பதனால்).

ஒரு வாரமாக நான் ரொம்ப கவலை பட்டு கொண்டு இருந்தபோது என் friend ஒருத்தி சொன்னாள் பொங்கல், தீபாவளி சீர் ஒரு பெண்ணுக்கு (கணவருக்கோ, மாமியாருக்கோ அல்ல) பிறந்த வீட்டிலிருந்து கொடுப்பது. ஆகையினால் இனி கேட்டால் என்னுடைய சீரை நான் வாங்கி கொண்டேன் என்று மட்டும் சொல்லி விட்டு நீங்கள் கவலை படாமல் உங்கள் வேளையில் கவனம் செலுத்துங்கள் என்று சொன்னாள்.

அதனால் தான் நான் "பொங்கல் சீர் யார், யாருக்கு, எதற்காக கொடுப்பது விளக்கமாக கூறவும்" என்று கேள்வியை நான் அறுசுவை தோழிகளிடம் வைத்தேன்.

மிக்க நன்றி !

இப்போ சொல்லுங்க நான் என்ன எதிர் பார்கிறேன் என்று?

நம் எல்லா தோழிகளும் இன்று விஜய் டிவி நீயா? நானா? (http://www.rajtamil.com/) பாருங்கள். தலைப்பு - வரதச்சனை.
நம்மால் அடுத்த தலைமுறையிலாவது இதை எல்லாம் மாற்ற முடியுமா என்று பார்க்கலாம்.

இதுவும் கடந்து போகும் !

நீயா நானா பார்த்துவிட்டு இப்போதான் வர்ரேன்.நிஜமாவே ரொம்ப வருத்தமான உண்மை.கல்யாண்மாகி ஒரு வருடம் வரை தான் இந்த சீர் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்,இதென்ன வருஷா,வருஷம் குடுக்கணுமா??கொடுமையா இருக்கு.சரி நமக்கு நம் பெற்றோர் வாங்கி தருவதில் ஒரு நியாயம் இருக்கு,மாப்பிள்ளைக்கு,மாமியாருக்கு ஏன் வாங்கி குடுக்கணும்???

பொங்கல் சீர் என்பது எங்கள்பக்கம் திருமணமானதும் வரும் முதல் பொங்கலுக்குமட்டும் மகள் மற்றும் மாப்பிள்ளைக்கும் பொங்கல் பானை துணிமணி மற்றும் வசதிக்கேற்ப பவுன் வைப்பார்கள்.பிறகு வருகின்ற பொங்கல் எல்லாம் அவரவர் விருப்பமே.தீபாவளி,ஆடி போன்றவையும் அதுபோலத்தான். எந்த கட்டுபாடும் இல்லை.

hi

hi friend
பெண்ணிடம் இருந்து(வீட்டாரிடம்) யாசகம் கேட்டு வாங்கி கொள்வது.----மாப்பிளை வீட்டுக்கு வாங்கி கொள்வார்கள்.இதன் பெயர் சீர் வரிசை.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

கொடுப்பதைவிட கேட்பதுதான் ரொம்ப கேவலமா இருக்கு. நானும் நீயா நானா பார்த்துட்டேன் நிறைய விஷயங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
நன்றி saheli & kirbalini

இதுவும் கடந்து போகும் !

மேலும் சில பதிவுகள்