தெற்கு வாசல் வீடு நல்லதா?

அன்பு அறுசுவை தோழர் தோழிகளே என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.நாங்கள் வீடு மாறலாம் என்று இருக்கிறோம்.எங்கள் வீட்டு முன் போர்ஷன் காலி ஆகிறது.அது தெற்கு வாசல்.நாங்கள் இப்பொழுது இருப்பது கிழக்கு வாசல்.தெற்கு வாசல் நல்லதா இல்லையேல் கெடுதலா.மிகவும் குழப்பத்தில் உள்ளேன்.வாஸ்த்து பற்றியோ ஜாதகம் பற்றியோ தெரிந்தவர்கள் எனக்கு பதிலளிக்கவும்.அறுசுவையில் பல விஷயங்கள் தெரிந்த நண்பர்கள் இருக்கிறீர்கள்.எப்படிப்பட்ட கேள்வியானாலும் விடை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் கேட்டுள்ளேன்.பிளீஸ் பதிலளியுங்கள்.

நான் கேட்ட கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை ஏன் தோழிகளே.பிளீஸ் தெரிந்தவர்கள் உடனே பதில் சொல்லவும்.

வாஸ்து பற்றி எனக்கு தெரியாதேடா;(

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க.

இங்க துபாயில வீடெல்லாம் வாஸ்த்து பாத்து கட்றாங்களான்னே எனக்கு இன்னி வரைக்கும் தெரியலைடா.. ஏன்னா சூரியன் உதிக்கும் கிழக்கு பக்கமும், மறையும் மேற்கு பக்கமும்தான் இங்க அறைகள் மூலையைக் கொண்டிருக்கிறது. இங்க வாசல் எல்லாம் தென் கிழக்கு, வட மேற்கு, வட கிழக்கு இப்படி இரண்டு இரண்டு திசையோட முடிவோடுதான் இருக்கு. எனக்கே கிச்சன்ல கிழக்கு பக்கமா கேஸ எப்படி வைக்கிறதுன்னு இன்னிவரைக்கும் குழப்பமாவேதான் இருக்கு;( ஏன்னா கிழக்கு பக்கம் கிச்சன்ல மூலைதான் அமைஞ்சிருக்கு;(

Don't Worry Be Happy.

ஜெயா நல்லயிருகீங்கலாபா .உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் பதில் போட்டதற்கு மிக்க நன்றிபா.தெரிந்தவர்கள் பதில் போடுவார்களா என பொருத்திருத்து பார்க்கிறேன்.

1.http://www.scribd.com/doc/6446319/Vasthu-Sastra-in-Tamil....இந்த லிங் உங்கலுக்கு use ஆகும்...

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா.நீங்கள் சொன்ன லிங்கில் போய் பார்கிறேன்.

2.http://www.indusladies.com/forums/book-lovers/77957-vasthu-sastra-in-tamil-pdf.html

இதுல pdf file இருக்கு பா Download செய்துக்குங்க பா..

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

http://www.yousendit.com/transfer.php?action=batch_download&send_id=1039175651&email=398a443de2ca9e814c715fe83a9a06fc
-Ashiq

சுந்தரி, கோவிக்காதீங்க பா. எனக்கு தெரியாதுன்னு சொல்றதுக்கு ஒரு பதிவு போடனுமான்னு நினைச்சு விட்டுட்டேன் பா. ரொம்ப சாரி பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆஷிக் முதலில் உங்கள் பதிலை பார்த்ததும் நீண்ட நாள் பார்க்காத நண்பரை பார்த்த மகிழ்ச்சி தான் எனக்கு.பின் நீங்க எனக்காக பதிலளித்தது இரண்டாவது ஆனந்தம். ரொம்ப நன்றி.நீங்க சொன்ன லிங்கில் போய் பார்க்கிறேன்..

சுந்தரி, எப்படி இருக்கீங்க :-)
ரெம்ப பிசி..அதுனால அதிகமா வரமுடியல
’’எனக்கு ஒரு டவுட் அருசுவைல கேள்வி போடுறேன்
அங்கே வந்து பதில் சொல்லனும்”
அப்படினு நம்ம ஆமி மிரட்டல் :-)
வந்தும் நாளேச்சேனு போய்ட்டு வரலாம்னு வந்தேன்
அப்படியே அட்மின் எதாவது எச்சரிக்கை விட்டுருக்காரானும்
பாத்துட்டு வரலாம்னு வந்தேன் -))
வந்த பாத்தேன் முன்பைவிட இன்னும்
அருசுவை முன்னேற்றம் கண்டுள்ளது கொஞ்சம் சந்தோஷமாதான் இருக்கு :)
அப்படியே பழைய ஆளுங்க இருக்காங்களானு பாத்தேன்
உங்க பேரு கன்னுல மாட்டிச்சு :-)
ஒரு பதிவு போட்டுட்டேன்...அந்த லிங்கை அப்படியே
காப்பி செய்து, Addres Bar ல Paste செய்து போனால்
ஒரு PDF File டவுன்லோட ஆகும்..அது வாஸ்து பற்றிய
செய்திகள் தமிழில் எழுதப்பட்டுள்ள ஒரு நூல்
அது உங்களுக்கு பயனளிக்குமா என்று பாருங்கள்.
எனக்கு வாஸ்து பற்றி ஒன்றும் தெரியாது :-)
டேக் கேர்
அன்புடன்
ஆஷிக்

மேலும் சில பதிவுகள்