ஜோடி பொருத்தம் கேள்விகள்!!!

எங்கள் குடியிருப்பில் உள்ள பத்து தம்பதிகள் சேர்ந்து காதலர் தினம் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளோம். அதில் நான் ஜோடி பொருத்தம் நடத்தலாம் என்று நினைக்கிறேன். அதற்காக கேள்விகள் தயார் செய்து கொண்டு உள்ளேன். தோழிகளே தங்களுக்கு நினைவில் வரும் கேள்விகளை கூறி எனக்கு உதவுங்கள்?

கனவனும்,மனைவியும் ஒருமித்தபதிலை சொல்லுமாரு உள்ள கேள்வியை கேளுங்கள்.

அதுக்குத்தாங்க சில மாதிரி வினாத்தாள் கேட்கிறேன்.

இதுவும் கடந்து போகும் !

ஹாய் மகி!
கணவன் மனைவியிடம் பொதுவான கேள்வியாக இப்படி கேட்கலாம்
நீங்கள் (திருமணம் ஆன பின்) முதல் முதல் இருவரும் சேர்ந்து பார்த்த சினிமா, இருவரும் சேர்ந்து போன மறக்க முடியாத இடம் அல்லது பெற்றுக்கொண்ட பரிசு.
காதல் செய்து மனம் முடித்தவர்கள் என்றால் யார் முதலில் காதலை சொன்னது.அல்லது அவன்/அவள் என்ன கலர் உடை அணிந்திருந்தார்கள் அந்த சமையம்.
யார் குடும்பத்தில் சிக்கனமானவர்/ விரைவில் கோபம் கொள்பவர் /அதிகம்நகச் சுவையுனர்வாளர் இன்னும் பல.
மேலும் விபரம் தேவைப் பட்டால் விஜய் டிவியில் காதல் மீற்றர் பாருங்கள்.இன்னும் ஐடியா கிடைக்கும்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் மஹி...,ஆஹா... பக்கத்தில் நடந்தால் உடனே நாங்களும் கலந்துப்போமுல்ல..
ரொம்ப நல்ல விஷயம் செய்றீங்க.... சரி எனக்கு தெரிந்த கேள்விகளை தருகிறேன்.
ஓகேன்னா.... சொல்லுங்க...சரியா...?

1. திருமணம் முடிந்து முதன்முதலில் கணவர் மனைவிக்கோ அல்லது மனைவி கணவருக்கோ வாங்கிகொடுத்த கிஃப்ட் என்ன...?
2. திருமணம் முடிந்து முதன்முதலில் உங்கள் கணவருக்கு சமைத்து கொடுத்த உணவு எது என்று மனைவியிடமும்,உங்கள் மனைவி முதன் முதலில் என்ன சமைத்து கொடுத்தார்கள் என்று கணவரிடமும் கேட்கலாம்.
3. இருவரும் சேர்ந்து ரசித்து பார்த்து இருவருக்குமே பிடித்த படம் எது என்று கேட்கலாம்.
4. கணவர் மனைவிக்கு குழந்தை இருந்தால் அந்த குழந்தை பிறந்த சரியான நேரம் எது என்று கேட்கலாம்.
5. மனைவியிடம் கணவர் அடிக்கடி கோபம் கொள்ளும் பொதுவான விஷயம் எது என்று கேட்கலாம்.
6. மனைவிக்கு பிடித்த கலர் எதுவென்று கேட்கலாம்.கணவருக்கு பிடித்த கலர் என்றால் எல்லா மனைவிகளுக்கு நிச்சயம் தெரியும்.ஆனால் எல்லா கணவர்களும் மனைவிக்கு பிடித்த கலர் என்பதை தெரிந்து வைத்திருக்கமாட்டார்கள்.
7. கணவரிடம் முதன் முதலில் உங்கள் மனைவியை பெண் பார்க்க போகும் போது என்ன கலர் சர்ட் பேண்ட் அல்லது என்ன உடை அணிந்திருந்தீர்கள்? என்றும்,மனைவியிடம்,உங்கள் கணவர் உங்களை முதன் முதலில் பார்க்கும் போது என்ன உடை அல்லது என்ன கலர் பேண்ட் சர்ட் அணிந்திருந்தார்? என்றும் கேட்கலாம்.
8. மனைவியிடம் நீங்கள் சமைக்கும் உணவில் அவர் விரும்பி பாராட்டி சாப்பிடும் உணவு எது? அல்லது மிகவும் பிடித்த உணவு எது? என்று மனைவியிடமும்,உங்கள் மனைவியின் சமையலில் உங்களுக்கு மிகவும் பிடித்தது அல்லது அடிக்கடி பாராட்டும் சமையல் எது? என்றும் கேட்கலாம்.
9. இருவரும் விரும்பி போக வேண்டும் ஆனால் இதுவரை போக முடியவில்லை என்ற இடமோ,ஊரோ என்ன? என்றும் கேட்கலாம்.
10. கணவரின் வீட்டு நபர்கள் அல்லது உறவினர்களில் மனைவிக்கு நெருக்கமானவர்கள் யார் என்று கேட்கலாம்.

இப்போதைக்கு இதுதாங்க நினைவில் வந்தது.மீணுட்ம் தோன்றினால் நாலை வந்து சொல்கிறேன் என்ன.... நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி கொண்டாட வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இனி என் பங்கு.போன வருடம் எங்க newyear பார்ட்டி கேள்விகள் இதோ,

1.உங்க கணவர் ஷிர்ட் சைஸ்.
2.உங்க மனைவி இப்போ கட்டி இருக்கிர ர்ப்பர் பான்ட் அல்லது க்லிப் கலர்.(எவ்வள்வு தூரம் கணவர் மணைவியை கவனிக்கராங்கன்னு தெரியும்).
3.உங்க மனைவி senja முதல் சமையலில் நீங்க பாரட்டியது
அல்லது உங்க குடும்பம் பாரட்டியது.இப்போதைக்கு இதுதாங்க நினைவில் வந்தது. நிகழ்ச்சியை நல்லபடியாக கொண்டாட வாழ்த்துக்கள்.

hi

yogarani - தங்கள் கேள்விகளுக்கு நன்றி, நானும் காதல் மீட்டர் பார்த்து கொஞ்சம் எழுதி வைத்து இருக்கின்றேன். உங்கள் கேள்விகளையும் சேர்த்துகொண்டேன்.

appufar - நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் கட்டாயம் உங்களையும் அழைத்து இருப்பேன். நீங்கள் கொடுத்த கேள்விகள் அனைத்தும் உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி.

saheli - மிக்க நன்றி. உங்கள் கேள்வி rapid ரௌண்டுக்கு உபயோக படுத்திக்கொள்கிறேன்.

இதுதான் அறுசுவை, சும்மா சல்லு சல்லுனு வருது பாருங்க.

இதுவும் கடந்து போகும் !

mahi U.S.la எங்கே.நானும் U.S.la தான் இருக்கேன்.

hi

உங்கள் கணவன்/மனைவியின் பலம் என்ன?பலவீனம் என்ன? என்று கேட்கலாம்.மஹி அமெரிக்காவில் எங்கே இருக்கிறீர்கள்?

நல்லதை நினை நல்லதே நடக்கும்.

நாங்கள் நியூ ஜெர்சியில் இருக்கோம். நீங்கள் இருவரும் எங்கே இருக்கீங்க?

இதுவும் கடந்து போகும் !

சமீபத்தில் கணவர்/மனைவி கொடுத்த பரிசு.
சமீபத்தில் இருவரும் சேர்ந்து பார்த்த சினிமா /இடம் .
சமீபத்தில் நடந்த சண்டையில் யார் யாருக்கு விட்டுகொடுத்தார்கள்./அது யாரால் வந்தது
சமீபத்தில் இருவரும் சேர்ந்து உணவருந்திய ஹோட்டல் எது ?
பொதுவாக மனஸ்தாபம் வரும்போது முதலில் யார் யாருக்கு விட்டு கொடுப்பார்கள்?
பொதுவாக இருவரும் ஒத்து போகும் ஒரு விஷயம் எது?
இருவரும் மனம் விட்டு பேச எந்த இடத்தை/சமயத்தை விரும்புவார்கள்?
இருவரில் யாருக்கு கோபம் அதிகமாக வரும்?

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்