கொள்ளு சட்னி

தேதி: February 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

கொள்ளு - 1 கப்
பூண்டு - 3
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை
வரமிளகாய் - 3


 

குக்கரில் கொள்ளு போட்டு 3 விசில் விட்டு வேக வைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி கொள்ள வேண்டும். கொஞ்ச நேரம் ஆற விடவும்.
பிறகு வேக வைத்த கொள்ளுடன் சேர்த்து, நன்கு அரைக்கவும்.
சுடு சாப்பாட்டிற்கு மிகவும் ஏத்த சட்னி, காரம் தேவைக்கு தகுந்தாற் போல் மிளகாய் போடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சுகந்தி ,இந்த சட்னியை அரைத்த பின் தாளிக்க வேண்டாம்
அல்லவா? .வாழ்த்துக்கள்

வாழு, வாழவிடு..

வாழ்த்துக்கள். டயட் இருப்பவர்களுக்கு ஏற்றது.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

எதிர்பாரா நேரத்தில் குறிப்பை வெளியிட்ட, அட்மின் குழுவிற்கு நன்றிகள் பல...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ருக்சனா- இந்த சட்னி தாளிக்க வேண்டாம் பா, உங்க பின்னூட்டத்துக்கு நன்றி

மஞ்சுளா - ரொம்ப நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இதை நாங்க சட்னியாக பயன்படுத்தாமல் தயிர் சாதத்துடன் துவையல் போல் சாப்பிட்டோம். நல்ல காம்பினேஷன். ரொம்ப சுவையாக இருந்தது. நல்ல ஆரோக்கியமான சுவையான குறிப்பு. நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொள்ளை ஊற வைக்க வேண்டாமா? நான் கொள்ளு யூஸ் பண்ணியதில்லை. அதனால் தான் இப்படி ஒரு கேள்வி.