தேதி: February 11, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மரவள்ளி கிழங்கு - 2 கப்
அரிசி - 1 கப்
சீரகம் - 1 tsp
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய அரிசியுடன் கிழங்கு சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
புளிக்க தேவையில்லை உடனே தோசையாக வார்க்கலாம்.
தேங்காய் அல்லது வேர்கடலை சட்னியுடன் பரிமாறவும்.