enaku ungalin yosanai vendum

enaku thirumanam agi 3 years aaguthu .... marriage aagi 6 monthlaye en husband drinks adichitu vanthu adichar...antha month than thal depavaliku amma vetuku vantha edathula marupadium drinks adichitu en ammavaye bad words use pani thititar ...antha kovathu nan en amma vetlaye irunten avar ena vitutu chennai poitar apa naan 6 month concive... kulanthai pirakum varai ena vanthu pakala nanum ph pala pakala....enaku paiyan piranthan .... apaum paka varala ...one month ana vudan nane kulanthaia thukitu en appava kutitu ...en atha vetuku ponen...avanga ena yethukitanga...nan vanthathu therijathum ena kanavar vetuku varathaye vitutar...visarichathula avar inuru ponnu kuda mariage panamale valrarnu therinjikiten.... police courtunu alanjum avar enga irukar ena panrar nu adresse ...therila...
en nilama ena aaga pothonu thinam thinam alugiren.... nan ena pana vidai solunga sisters please....

ithil karuthu entru onnum solla mudiyathu. nengal avarai kalyanam anaudane avarai patri therinthu kondu thiruthi irukalam. illana solli puriyavachi irukalam. dont feel. i am pray to god. nalla result sekiram ungala thedi varum. feel pannathinga.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அன்புத் தோழி பொற்கொடி, உங்கள் கதை மிகவும் வருந்ததக்கதே.உங்கள் கணவரை பற்றி சரியாக விசாரிக்காமல் திருமணம் செய்து உங்கள் பெற்றோர் உங்களுக்கு பெரிய துன்பத்தை இழைத்து விட்டனர். சரி விடுங்கள். போனது போகட்டும். இனி நடக்க வேண்டியதை பாருங்கள்.

உங்கள் மாமியார் உங்களை ஏற்றுகொண்டதாக சொன்னீர்கள். சிறிது காலம் அவருடனே தங்கியிருந்து உங்கள் குழந்தையை கவனித்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடவில்லை. நீங்கள் படித்திருப்பின் படிப்புக்கேற்ற வேலையை தேடிக் கொள்ளுங்கள். வேலைக்கு செல்லுங்கள். காலம் இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. அனைத்தையும் மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டு. தன்னம்பிக்கை, தைரியத்தை இழக்க வேண்டாம். உங்கள் கணவரின் வாழ்க்கையில் நடுவில் வந்த பெண் விரைவில் நடுவிலேயே விட்டு செல்வாள். அப்போது உங்கள் கணவர் உங்களையும், குழந்தையையும் கண்டிப்பாக தேடி வருவார்.தன்னம்பிக்கை, தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒருபோதும் இவ்விரண்டையும் கைவிடாதீர்கள். தவறுகள் செய்த உங்கள் கணவரே தைரியமாக உலவும்போது அவரை கட்டிய ஒரே பாவத்தை தவிர வேறு ஒன்றும் அறியாத நீங்கள் ஏன் பயந்து நடக்க வேண்டும். தாய் வீட்டில் தங்குவதை நினைத்தும் பார்க்க வேண்டாம். வாழ்க்கை என்பது ஒருமுறை தான் போராடி பாருங்கள். கண்டிப்பாக வெற்றி உங்களுக்கே. சீக்கிரமே உங்கள் கணவர் உங்களை, உங்கள் அன்பை புரிந்து உங்களை தேடி வர இறைவனை பிரார்த்திக்கிறேன். நல்லதே நடக்கும். கவலை வேண்டாம் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்கலின் நிலைமை வருத்ததை தருகிரது . கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் கணவர் உங்களை தேடி வருவார் அதுவரை காத்திருங்கள் .தங்களுக்கு கடவுள் முத்துபோல் பிள்ளை ஒன்றை கொடுத்துள்ளார் அந்த மழலையின் நினைவில் அனைத்தையும் மரக்க முயர்ச்சி செய்யுங்கள் . தோழி கல்பனா அவர்கள் அழகாக கூரியுள்ளார் அதுவே என் கருத்தும்

அன்புடன்
ஸ்ரீ

தோழி,இது ஒரு சோதனை,இந்தநேரத்தில் தான் நீங்கள் தைரியமா இருக்கணும்.உங்க படிப்புக்கேற்ற வேலை தேடி கொள்ளுங்கள்.பொருளாதாரத்தில் யாரையும்,டிபண்ட் பண்ணாமல் இருந்தாலே நம்மை அறியாமல் நம்க்கு ஒரு தைரியம் வரும்,பையனோட எதிர்காலம் கருதியாவது நீங்க தைரியமா இருங்க.

தோழி,முதலில் தாங்கள் எந்நேரமும் கண்ணீர் சிந்துவதை நிறுத்துங்கள்.எந்த சூழலிலும் மனம் கலங்காதீர்கள்.பிறருடைய பரிதாபப் பார்வை நமக்கு வேண்டாம்.அது,உங்களை மேலும் மேலும் சோகத்தில்தான் ஆழ்த்தும்.நம் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று சிந்தியுங்கள்.தற்காலிக தீர்வாக இல்லாமல் நிரந்திரத் தீர்வாக இருக்கட்டும்.

இப்போது உங்கள் பிரச்சனைக்கு வருவோம்.உங்களுக்கு மணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது.ஆனால்,ஆறு மாதம் மட்டுமே தாங்கள் தங்கள் கணவருடன் வசித்துள்ளீர்கள்.மணமான கொஞ்ச காலத்திலேயே தன்னை நம்பி வந்த
பெண்ணை குடித்துவிட்டு வந்து அடித்திருக்கிறார்.குடிப்பதும்,அதைவிட ஒரு பெண்ணை கைநீட்டி அடிப்பதும்,அதுவும் அவள் கர்ப்பவதியாக இருக்கும்போது அடிப்பது எவ்வளவு பெரிய தவறான செய்கை???

சரி,அதைத்தான் தாங்கள் பொறுத்துக் கொண்டீர்கள்.அதை உணர்ந்து அவர் வருந்தியிருக்கலாம்,திருந்தியிருக்கலாம்.ஆனால்,அவ்வாறு நடக்கவில்லை.தன் தவறுகளை தொடர்ந்திருக்கிறார்.தாய் போன்று மதிக்க வேண்டியவரை தகாத வார்த்தைகளால் பேசுவது எவ்வளவு பெரிய தவறு?? தன் தாயிடம் இவ்வாறு நடந்து கொண்டால் எந்தப் பெண்தான் பொறுத்துக் கொள்வார்?

தோழி,தங்கள் கோபம் நியாயமானதே,அதில் தவறேதும் இல்லை.உங்கள் கணவர்தான் நிகழ்ந்தவைக்கு வருத்தம் தெரிவித்து தங்களை நாடி வந்திருக்க வேண்டும்.இந்த நேரத்தில் உங்கள் மீது அன்பை பொழிந்திருக்க வேண்டும்.ஆனால்,அவ்வாறு நிகழவில்லை.நீங்கள் அவரை தேடி சென்றுள்ளீர்கள்.சரி,போனது போகட்டும்.இனியாவது குழந்தையின் முகத்தை பார்த்து திருந்தியிருக்கலாம்.அப்படியும் நடக்கவில்லை.

உங்கள் புகுந்த வீட்டில் உங்களை ஏற்றுக் கொண்டார்கள்.ஓகே.ஆனால்,கணவனின் துணையல்லவோ அங்கு முக்கியமானது.உங்கள் வரவை அறிந்து தன் வீட்டையே தவிர்க்கிறார்.காரணம்,இன்னொரு பெண்.தாங்கள் தேடிப் பார்த்து தோற்று
விட்டீர்கள்.

தோழி,நீங்கள் சில விஷயங்களை நன்கு யோசித்து பாருங்கள்.

உங்கள் கணவர் திருமணத்திற்கு முன்பே வேறு யாரையேனும் நேசித்துள்ளாரா,தன் பெற்றோரின் வற்புறுத்தலால் தங்களை மணந்து கொண்டாரா??

உங்களிடம் அவர் அன்பாக நடந்து கொண்டுள்ளாரா??

உங்கள் மீது எந்த தவறும் இல்லாதபோது நீண்ட காலமாக தங்களை தவிர்த்ததன் நோக்கம் என்ன??

இன்று உங்களை ஏற்றுக் கொண்டிருக்கும் புகுந்த வீடு,நாளை உன்னால்தான் என் மகன் வீட்டிற்கே வருவதில்லை என்று உங்கள் மீது குற்றம் சாட்டினால் உங்கள் நிலை என்ன??

ஒருவேளை உங்கள் கணவர் திரும்பி வந்தாலும் அவரால் உங்களுக்கு நல்ல கணவனாகவும்,பிள்ளைக்கு நல்ல தந்தையாகவும் இருக்க முடியுமா??

பிஞ்சு மனம் பாதிப்படையாத வண்ணம் குடும்பச் சூழல் இருக்குமா??

தோழி,இவற்றையெல்லாம் நன்கு ஒரு தடவைக்கு பலதடவை யோசித்து முடிவெடுங்கள்.

தோழி,நீங்கள் உங்கள் தாய் வீட்டில் இருப்பதில் எந்த தவறுமில்லை.உங்களிற்கு தேவையான அன்பும்,அரவணைப்பும்,மரியாதையும்,பாதுகாப்பும் அங்குதான் கிடைக்கும்.நீங்கள் எந்த கடமையையும் மறுத்துவிட்டு,மறந்துவிட்டு தாய் வீட்டிற்கு செல்லவில்லை என்பதை உங்கள் நினைவில் நிறுத்துங்கள்.கடமையை மறந்தவர்,சரியாக செய்யாதவர் உங்கள் கணவர்தான்.

தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.என்றுமே யாரையும் சார்ந்திருக்காமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.எந்த முடிவையும் பிறருக்கு பயந்து எடுக்காதீர்கள்.இது உங்கள் வாழ்க்கை.உங்கள் செல்வத்திற்கு ஒரு நல்ல குடும்ப சூழலை உருவாக்கிக் கொடுங்கள்.

தோழி,வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கலாம்.போராடுவதே வாழ்க்கையாக இருக்க கூடாது.இருக்கும் ஒரு வாழ்க்கையையும் போராடியும்,காத்திருந்தும் கழித்து விடாதீர்கள்.வாழ்க்கை மகிழ்ச்சியோடு வாழ்வதற்கே,உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்.உங்களுக்கு நல்வாழ்வு அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

நான் உங்கள் மனம் புண்படுமாறு எதாவது கூறியிருந்தால் மன்னிக்கவும் தோழி.

அன்புடன்
நித்திலா

hai...nithila... romba nandringa en msg pathu enaku reply pannathuku... unga karuthu romba atharava, nambikaiyaa irunthuchi... en vetla nan than muthal ponu enaku aduthu2 sisters and one brother irukanga...nanum avara vetutu vanthathula irunthu work pannitu thanga iruken computer operatora... sisters 2 perum padikiranga thambium padikiran... nenga msgla sorry keturthnga venamga sorry elam nenga yethum thapa yeluthalanga... arusuvai.comla msg panvudan enaku niraia frnd vanthirkanga romba santhosama irukunga... srimathi mam, revathy mam, kalpanasaravanan mam, reem and u...elarume raomba nambikaiya msg panirkanga... apram nan marriage pothu +2 and 2 computer course thanga muchi irunthen ipo corresla BCA panrenga, and tally mudichirken...
by
d.kodi

மேலும் சில பதிவுகள்