இடியாப்பம் கார அடை

தேதி: February 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

இடியாப்பம் - 3
முட்டை - 1
வெங்காயம் - 1
கேரட், பீன்ஸ், முட்டைகோஸ்
உருளைகிழங்கு, சிகப்பு,
ஆரஞ்சு, குடைமிளகாய் - இவையெல்லாம் சேர்ந்து ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
கறி மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி மற்றும் சுடுவதற்க்கு
மல்லிதழை - சிறிதளவு


 

இங்கே சொல்லியிருக்கும் காய்களெல்லாம் ஒரே அளவாக எடுத்து கொண்டு அவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், நறுக்கி வைத்திருக்கும் அனைத்து காய்களையும் போட்டு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மிதமான தீயிலேயே நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தூள் வகைகளை சேர்த்து மூன்று நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும்.பின்பு மல்லிதழையை கழுவி விட்டு பொடியாக நறுக்கி தூவி ஒரு வதக்கு வதக்கி இறக்கி விடவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் இடியாப்பத்தோடு, முட்டை, வதக்கிய காய்களை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.(முட்டை சிறியதாக இருந்தால் இன்னும் ஒன்றை சேர்த்து கொள்ளலாம்.)
தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் சிறிது எண்ணெய் தடவி விட்டு கை நிறைய கலந்து வைத்திருக்கும் கலவையிலிருந்து எடுத்து உருட்டி மெதுவாக தவாவில் தட்டவும். மொத்தமாகவும் இல்லாமல் திட்டமாக இருக்கும்படி சமப்படுத்தவும்.
பின்பு அதை சுற்றி ஒரு தேக்கரண்டி நிறைய எண்ணெய் ஊற்றி குறைந்த தீயிலேயே நன்கு அடி சிவக்கும் வரை விடவும். அடி சிவந்ததும் மெதுவாக திருப்பி போட்டு இன்னும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சுற்றிலும் ஊற்றவும்.
இரண்டு பக்கமும் சிவந்து ஓரமெல்லாம் மொறு மொறுவென்று இருக்கும். சுட சுட எடுத்து பரிமாறவும். மாலை நேர சிற்றூண்டியாகவும் சாப்பிடலாம். லன்ச் பாக்ஸிற்கும் கொடுத்து அனுப்ப ஏதுவாக இருக்கும்.

இதையே ரைஸ் வெர்மிஸிலியிலும் செய்யலாம். ரைஸ் வெர்மிஸிலியை நன்கு கொதிநீரில் போட்டு பதினைந்து நிமிடம் வைத்து விட்டு பின்பு நன்கு தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி விட்டு பாத்திரத்தில் போட்டு இதர சாமான்களை சேர்த்து நன்கு பிசைந்து சுடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சலாம் அப்சரா அக்கா ..!! நலமா ??
ரொம்ப புதுமையான ரெசிபியா இருக்கு .. விரைவில் செய்துட வேண்டியது தான் ..!! :)
வாழ்த்துக்கள் அக்கா ...!!!

Express Yourself .....

நலமா அப்சரா?
விதம்விதமா செய்து கலக்குரிங்க ..வாழ்த்துக்கள் அப்சரா.
படங்கள் அருமை...நன்றி

வாழு, வாழவிடு..

நல்லா இருக்கீங்களா?பிள்ளைகள்,கணவர் நலமா?

அருமையான குறிப்பு..
இடியாப்பமென்றாலே செய்வது கொஞ்சம் நேரம் எடுக்கும்..

எல்லாரும் டக்கென்று செய்யமாட்டாங்க...ஆனா நீங்க அத செய்து திருப்பி அத வச்சு அடை பண்ணிருக்கீங்கன்னா..உண்மையில் பாராட்ட வேண்டும் நிறைய....

எங்க வீட்டில் எல்லாருக்கும் இடியாப்பம் பிடிக்கும்...நிச்சயம் செய்துட்டு சொல்றேன்..

வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் ஷாகியா...,
நான் நலம் நீங்கள்,அண்ணன்,மகள் நலமா...?
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மா...
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க சரியா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் ருக்சானா...,
நான் நலம்.நீங்கள்,அண்ணன்,மகள் நலமாக இருக்கின்றீர்களா...?
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ருக்சானா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நாங்கள் அனைவரும் நலம் இளவரசி.
நீங்களும்,வீட்டில் அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா...?
நீண்ட நாட்களாகிவிட்டது தங்களிடம் பேசி...
வாரத்தில் ஒரு முறை இடியாப்பம் செய்து விடுவேன்.
அதில் ஒன்றிரண்டு மீந்தால் இனிப்பு அடை செய்வேன்.
அதையே கொஞ்சம் கார அடையாக செய்து பார்ப்போமே என்றுதான் முயன்றேன்.
இம்முறையில் செய்தது என் கணவருக்கு மிகவும் பிடித்து விட்டது.
ஆஃபீஸ் பாக்ஸிக்கு கூட கேட்டு வாங்கி எடுத்து சென்றார் என்றால் பாருங்களேன்
முடிந்த போது செய்து பாருங்க... நிச்சயம் பிடிக்கும்.
வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி இளவரசி...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா... புது வகையான குறிப்பு. செய்ய ஆசை வந்துருச்சு. இன்னும் 2 நாளில் செய்துடுவேன் ;) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சலாம் அப்சரா
வீட்டில் அனைவரும் நலமா? குட்டிங்க எப்படி இருக்காங்க நான் கேட்டேன்னு சொல்லுமா விதவிதமா செய்து அசத்திட்ட சூப்பர் வாழ்த்துக்கள்
நான் மெயில் எப்பவோ பண்ணிட்டேன் உன் பதிலுக்காக காத்து இருக்கும் அன்பு சகோதரி.....உன் ஐ டி apsarasaleema@gmail.com இதுதானா? இதுக்குதான் மெயில் ப்ண்ணினேன்

சூப்பர் பா இடியாப்பத்தில் அடையா டிஃபரண்டா இருக்கு பா

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் வனி தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பா...
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க சரியா...
தங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் ஃபாத்தி அக்கா..,நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம் அக்கா...நீங்களும்,வீட்டில் உள்ல அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா..?
தங்கள் கருத்துக்கும் ,வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா...
என்ன அக்கா சொல்றீங்க... ஜிமெயிலில் உங்கள் மெயிலே வரவில்லையே அக்கா...
நான் ஆவலோடல்லவா எதிர்பார்த்திட்டு இருக்கேன்.
மெயில் ஐடியும் சரிதான் ஆனால் ஏன் எனக்கு வரவில்லை?
முடிந்தால் மறுபடியும் அனுப்பி பாருங்க அக்கா...
நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ஸ்ரீமதி நலமா...?
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

assalamu alaikkum apsara really nice ur recipe.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

அப்சரா புதுமையான வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.