வேலண்டைன்ஸ் டே செயின் மற்றும் ப்ரேஸ்லெட்

தேதி: February 12, 2011

5
Average: 4.1 (17 votes)

 

குயில்லிங் பேப்பர் - பிங்க் நிறம்
குயில்லிங் டூல்
பெவிக்கால்
பூ வடிவ மணிகள்
க்ரிஸ்டல் மணிகள்
ஜர்தோஸி
முத்துமணிகள் - 4
ஊசி
உல்லன் நூல் - பிங்க்நிறம்

 

சிறிய பூ வடிவம் கொண்ட மணிகளும், க்ரிஸ்டல் மணி மேல் சிறிய வளையம் சேர்ந்தாற் போல் ஃபேன்ஸி ஸ்டோர் கடைகளில் கிடைக்கிறது. நீங்க விரும்பிய நிறத்தில் மணிகளை வாங்கிக் கொள்ளவும்.
குயில்லிங் பேப்பரை 12 செ.மீ அளவில் ஒரு அளவும், 6 செ.மீ அளவில் இரண்டு துண்டுகளும் நறுக்கவும்.
12 செ.மீ அளவுள்ள குயில்லிங் பேப்பரை எடுத்து வளைவுவாக வளைத்து நுனியில் ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு படத்தில் உள்ளது போல் அந்த வளைவின் மேல்நடுப்பக்கத்தில் பெவிக்கால் வைத்து பேப்பரை லேசாக உள்பக்கமாக வளைத்து ஒட்டிக் கொள்ளவும். மற்ற அளவிலும் இதுப்போல் ஹார்ட் வடிவம் செய்து கொள்ளவும்.
கைச்செயின் செய்முறை : மெல்லிய எலாஸ்டிக்கை கையின் சுற்றளவுக்கு நறுக்கிக் கொள்ளவும். அதன் நுனியில் சிறிதளவு இடைவெளிவிட்டு முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். முதலில் ஒரு பூ வடிவ மணியை கோர்க்கவும். அடுத்து இரண்டு க்ரிஸ்டல் மணிகளை கோர்க்கவும். மூன்று ஜோடி பூ வடிவ மணிகளும், அதன் இடையில் இரண்டு ஜோடி க்ரிஸ்டல் மணிகளும் கோர்த்து வைக்கவும்.
பிங்க் நிற குயில்லிங் பேப்பரை 6 செ.மீ அளவுக்கு நறுக்கி சிறிய ஹார்ட் வடிவில் செய்யவும். அதன் இரு ஒரங்களின் நடுவில் ஊசியால் துளையிடவும். பின் முதல் பக்கத்தில் உள்ள துளையில் எலாஸ்டிக்கை கோர்க்கவும். அடுத்து பூ வடிவ மணியை கோர்க்கவும். கடைசியில் இரண்டாவது பக்கத்தில் உள்ள துளையில் எலாஸ்டிக்கை கோர்த்து வைக்கவும்.
இடது பக்கத்தில் கோர்த்த மணிகளை போல் வலது பக்கத்திலும் கோர்த்துக் கொள்ளவும்.
கடைசியில் இரண்டு எலாஸ்டிக் முனைகளை ஒன்றாக சேர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். கைச்செயின் ரெடி.
இதுப்போல் அவரவரின் கையின் சுற்றளவுக்கு ஏற்ப மணிகளை தேவையான அளவு கோர்த்துக் கொள்ளவும்.
நெக்லஸ் செய்முறை : நரம்பு ஒயரை, மணிகள் கோர்ப்பதற்கு தேவையான அளவு எடுத்து அதில் இரண்டு க்ரிஸ்டல் மணிகளை கோர்க்கவும். பின்னர் நரம்பின் இருமுனையையும் ஒன்றாக சேர்த்து பூ வடிவ மணியில் உள்ள துளையில் கோர்க்கவும். இப்பொழுது நரம்பின் இரு முனையிலும் ஒவ்வொரு பூ வடிவ மணியை கோர்த்து வைக்கவும்.
12 செ.மீ குயில்லிங் பேப்பரில் செய்து வைத்திருக்கும் ஹார்ட் டிசைனில் உள்ளே கோர்த்து வைத்துள்ள மணிகளை வைக்கவும். ஹார்ட் டிசைனின் இரு வளைவுகளில் படத்தில் உள்ளது போல் துளையிட்டு இந்த மணிகளில் உள்ள நரம்பை கோர்த்து விடவும்.
இந்த ஹார்ட் டிசைனுக்கு பக்கத்தில் ஒரு செ.மீ அளவில் ஜர்தோஸியை கோர்க்கவும். அடுத்து ஒரு பூ வடிவ மணி, இரண்டு க்ரிஸ்டல் மணி, அடுத்து பூ வடிவ மணியை கோர்த்து கொள்ளவும். இதேப் போல் மற்றொரு பக்கத்திலும் கோர்க்கவும்.
6 செ.மீ அளவில் செய்து வைத்திருக்கும் ஹார்ட் டிசைனை கைச்செயின் செய்முறையில் கூறியது போல் கோர்த்துக் கொள்ளவும். அடுத்து மூன்று பூ வடிவ மணிகளை கோர்த்து அதன் ஒவ்வொரு இடையிலும் இரண்டு க்ரிஸ்டல் மணிகளை கோர்த்துக் கொள்ளவும்.
இடது பக்கத்திலும் இதுப்போல் மணிகளை கோர்த்து வைக்கவும்.
பிங்க்நிற உல்லன் நூலை பின் கழுத்தின் சுற்றளவுக்கு நறுக்கி இரண்டு துண்டாக்கவும். இந்த இரண்டு துண்டுகளை மணிகளை கோர்த்து முடித்த இடத்தில் வைத்து நன்கு இறுக்கமாக முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். அதில் இரண்டு, இரண்டு முத்து மணிகளை கோர்க்கவும். ஒரு உல்லன் நூல் முனையில் சிறிய வளையத்தை கோர்த்து முடிச்சுப்போடவும், மற்றொன்று உல்லன் நூலில் "s" கொக்கியை கோர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அணிந்துக் கொள்ளலாம்.
வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் செயின் மற்றும் ப்ரேஸ்லெட் ரெடி.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வேலண்டைன்ஸ் டேக்காக இந்த செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அக்கா உங்க குறிப்பு எனக்கு ரொம்ப புடிக்கும்................ எனக்கும் handwork பண்ண ரொம்ப புடிக்கும் ,,,,,,,,, பட் டைம் இல்லை அக்கா ,,,,,,,,,,,,,, அனைவரும் நலமா அக்கா

hi i am new to arusuvai team. i saw your craft and handworks. it was very nice can . can u tell where are u living so that if it near to my place i can learn directly from u.

ஹாய் அண்ணி சூப்பர்..........குழந்தை கழுத்துல போட்டு இருக்கும் போது பக்காவ இருக்கு. வாழ்த்துக்கள் அண்ணி..

உன்னை போல பிறரையும் நேசி.

வாழ்த்துக்கள் .. நன்றாக இருக்கு செயினும் ப்ரேஸ்லெட்டும்
குட்டீஸ்க்கு விதம்விதமா இதுபோல் செய்து போட்டால்
சூப்பராக இருக்கும் ..(((பெரியவ்ர்களுக்கும்தான்.))).நன்றி..

வாழு, வாழவிடு..

சுப்பர் செண்பகா. ;)

‍- இமா க்றிஸ்

செண்பகா... சீசனுக்கு ஏத்த மாதிரி செய்ய உங்களால் மட்டுமே முடியும் ;) அசத்திட்டீங்க... சுலபமான அழகான செயின் மற்றும் ப்ரேஸ்லெட். போட்டிருக்க குட்டி கியூட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super work madam .keep it up. with regards.g.gomathi.

லதா ரொம்ப நன்றி நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்க.

விஜி எப்படி இருக்கீங்க? நீங்க எங்க சென்னையில் இருக்கீங்களா? நான் நாகப்பட்டினம். //can u tell where are u living so that if it near to my place i can learn directly from u.// நீங்க இப்படி சொன்னதே ரொம்ப சந்தோஷம். முடிந்தால் நாகப்பட்டினம் வாங்க.

என்ன தேவி ஆச்சு. மேடமா இல்ல அண்ணியா? ஏன் குழப்பம் அண்ணினே சொல்லு ஓகே வா தேவி. உன் பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

ஹாய் ருக்சானா எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலம்தானே. உங்க பாராட்டிற்கு நன்றி.

ரொம்ப நன்றி இமா அம்மா.

வனிதா எப்படி இருக்கீங்க? குழந்தைக்கள் எப்படி இருக்காங்க? //சீசனுக்கு ஏத்த மாதிரி செய்ய உங்களால் மட்டுமே முடியும் ;) அசத்திட்டீங்க... // எல்லாம் உங்களிடம் இருந்து கத்துக்கிட்டதுதான். ரொம்ப நன்றி.

ஹாய் கோமதி எப்படி இருக்கீங்க? உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

senbagababu

உண்மையான வேலண்டைன்ஸ் டே உங்களுக்கு தான் போல...கலக்குங்க...ரொம்ப அழகா பொறுமையா பண்ணி இருக்கீங்க. பாப்பாக்கு சூப்பர் ஹ பொறுந்தி இருக்கு....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

paapa romba cute ta iruku sister.

Senbaga mam ... keychain, necklacesum, romba alaga iruku nan enga area facy stores elam ketuten kuyiling pepera apdina ennanu kekranga mam ... yerkanave nenga kuling peper kondu senja kammal enala senji paka mudiala ipa ithayum senji paka mudiala...ana keychainum necklaceum romba alaga iruku...athum pappa kaila potu kamichirukingla athu kuda konjam alaga iruku mam...vaaltukal

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta