பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

மக்களே நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.. உங்களின் அறிவுக்கு தீனியிடும் வகையில் இதோ தலைப்பு ;)

அதாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியா.? இல்லை இதெல்லாம் விட்டுவிட்டு போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேறி உனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள கல்வியில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்துவது சரியா?

எங்கே உங்களின் வாதங்களை தொடருங்கள் பார்ப்போம்.. ( ஜெய்க்காக இதை தொடங்கியுள்ளேன் )

பட்டியின் விதிமுறைகள் :
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

நடுவருக்கு வணக்கம் பட்டி தொங்கிவிட்டாகியது நடுவர் தூக்கம் தொலைத்து உக்கார போகிரார் நல்ல தலைப்பு நடுவரே வாழ்த்துக்கள் என்னோட அணி எதுவென்று தேர்ந்தெடுத்து என் வாதத்துடன் பிரகு வருகிரேன். அதுக்குள்ள நம்ம பட்டி சிங்கங்கள் எல்லாம் வரட்டும்

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ

வாங்க வாங்க..வணக்கம்.. முதல் கருத்து நீங்க தான்.. குட்.. ஐ லைக் யூ..சீக்கிரம் உங்க அணிய தேர்ந்தெடுங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வணக்கம் நடுவரே. நல்ல தலைப்புகள். நான் பேசவிருக்கும் தலைப்பு தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியே என்ற தலைப்பில் பேச வந்திகிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரே

வாங்க.. எந்தவித சந்தேகமும் இல்லாமல் ஒரேடியாக தலைப்பை தேர்ந்தெடுத்த ரேக்கு வாழ்த்துக்கள்..தொடங்குகள் உங்களின் வாதத்தை..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவரே! இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் உள்ள பிள்ளைகள் படிப்பில் மட்டும் இல்லை. எல்லா திறமையளும் சாதிக்க பிறந்தவர்கள். அவர்களுக்கு படிப்பு மட்டும் போதாது. விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என அவரவருக்கு உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவந்து அதிலும் அவர்கள் முதல் இடத்தில் இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆசை மட்டும் பார்க்காமல் பிள்ளைகளின் ஆசைகளும் நிறைவேற்ற வேண்டும்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவதி..

சரிதான்..பிள்ளைகளின் ஆசையையும் பார்க்கனும் இல்ல..படிப்பு மட்டும் வெச்சுட்டு என்னத்த பண்ண முடியும்..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு நடுவர் ரம்சுக்கு, என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்றைய தேதியில் அலசப்படவேண்டிய மிக முக்கியமான தலைப்பு தான்.

இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியே. இப்போது இருக்கும் காலத்துக்கு வெறும் படிப்பு மட்டுமே வாழ்க்கையை முன்னேற்றாது. உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் சத்யம் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கி வேலை பார்த்தவர்களின் இன்றைய நிலை என்ன? தலையில் முடி உள்ளவர் முடிந்து கொண்டிருப்பார். படிக்கும் காலத்திலேயே மேற்கூறிய கலைகளையும் பயின்றவர்கள் அதன் வாயிலாக வாழ்க்கையை வெற்றிகரமாக நீந்தி கடந்திருப்பார்கள்.

இன்னும் இதுல பல சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றை பிறகு வந்து சொல்கிறேன் நடுவரே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா

வாங்க ...அந்த அணிக்கு பலம் சேர்த்துவிட்டீர்கள் போல.. வாதிட சொல்லியா தரனும்..;)

சத்யம் நிறுவனம் நல்ல ஒரு எடுத்துக் காட்டு ;)

வாழ்க்கையை நீந்தி கழிக்க இதர கலைகள் அவசியம் எனக் கூறுகிறார் கல்பனா..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவர் அவர்களே, வாழ்க்கையில் முன்னேற படிப்பும் அவசியம் தான். இருந்தாலும் படிப்பு மட்டுமே ஒருவனை முன்னேற்றும் என்று சொல்ல முடியாது. களவும் கற்று மற என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள். ஏன் கஷ்டப்படும் காலத்தில் அந்த களவும் பயன்படும் என்று. இந்த இடத்தில் நாம் அறிவை மட்டுமே களவாட வேண்டும். அடுத்தவர் பொருட்களை அல்ல.வாழ்க்கை என்னும் கடலில் வெறும் படிப்பு என்னும் படகை மட்டுமே நம்பி இறங்குபவன் நடுவில் வரும் சூறாவளியில் சிக்கி மூழ்கித்தான் போவான். நீச்சல் என்ற கலையை பயின்றவனுக்கு சுனாமியே வந்தாலும் சுருட்டி போடும் வித்தை தெரியும்.

நடுவர் அவர்களே உங்களின் இந்த தலைப்பிலேயே எதிரணியில் வாதாடப்போகும் தோழிகள் அரண்டு போயிருப்பார்கள் போலும். அதான் ஒருத்தரையும் காணோம். யாராவது வந்தால் எசப்பாட்டு பாட வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா

அடடா.. என்ன ஒரு கருத்து.... நீச்சல் தெரிந்தால் தானே பிழைக்க முடியும்.. டிகிரி சர்ஃபிக்கேட்டா காப்பாத்தும்... குட் கொஸ்டியன்..

என்னப்பா எதிர்த்து போட்டியிட யாருமே இல்லையே.. சுயேட்ச்சையாக ஜெயிச்சுடுவாங்க போல

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்