வெரைட்டி வெஜ் குருமா

தேதி: May 5, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் - 4
உருளைக்கிழங்கு - 3
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - சிறிது
பட்டை - சிறிது
ஏலக்காய் - சிறிது
கிராம்பு - சிறிது
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
தனியா பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - கொஞ்சம்
எண்ணெய் - 10 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் - ஒன்று


 

காய்கறிகளை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி அரைத்து பிழிந்து கெட்டியானப் பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயையும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு நறுக்கின பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு காய்கறிகள், மஞ்சள்பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். புளியை கரைத்து ஊற்றவும். தேங்காய் பால், கொத்தமல்லி மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் இறக்கி வைத்து பரிமாறவும்.


வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்