தக்காளி-இஞ்சி கொத்சு

தேதி: February 15, 2011

பரிமாறும் அளவு: 4-6 serving

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

4 பெரிய தக்காளி
1 இன்ச் துருவியது இஞ்சி
3 பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது
1/2 தேக்கரண்டி மிளகாய் துள்
உப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிட்டிகை
கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி


 

தண்ணீர் சேர்க்காமல் தக்காளியை சட்னி போல அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில், எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன், துருவிய இஞ்சி, மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து, அரைத்த தக்காளியை சேர்க்கவும்.
தேவையென்றால், 1/4 கப் தண்ணீரை விட்டு மிக்சி ஜாரை கழுவி இதில் கொட்டவும்.
மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கிளரவும்.
சிம்மில் 10 நிமிடம் கொடிக்க விடவும்.
அதன் பிறகு அடுப்பை அணைத்து, கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் இதை செய்து பார்தேன் பா...நல்லா இருந்தது...நித்யா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

thanks..

நல்ல குறிப்பு செய்து பார்க்கிறேன் .. வாழ்த்துக்கள் ..

வாழு, வாழவிடு..

செய்முரை விளக்கமும் குறிப்பும் ஈசியாகத்தெரிகிரது. செய்து பாத்துட்டு சொல்ரேன்.

this is nice.. ithu evalavu days nalla irukum