அருமை வாயாடிகளே

ஹாய் தோழிகளே,
ஏனக்கு ஒரு ஆலோசனை கூர வேன்டும்.இது கொஞ்சம் வித்யாசமாக கூட இருக்கலாம்.சரி நான் விஷயத்திற்கு வருகிறேன்.எனக்கு சின்ன வயதிலிருந்தே 'அமைதியானவள்' என்ற பெயரை வைத்து விட்டனர்.எனக்கு 4 பேர் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு பயம் வந்து விடும். எனது அருமை வாயாடிகளே கொஞ்சம் உத்வுங்கல்.எப்படி இதை மாற்றுவது? உங்கலை போல் தைரியமாக எப்படி பேசுவது?

நம்மளை யாருடா கூப்பிடறதுன்னு வந்து பாத்தா, மகி நீங்க தானா.. சந்தோசம்.. எங்களை பாத்தா அவளோ வாய் அடிக்கற மாதிரியா தெரியுது..? சரி விடுங்க. முதல்ல தலைப்ப மாத்துங்க. பாக்கறவங்களுக்கு புரியற மாதிரி வைங்க..

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மகி, பேசறதுக்கெல்லாம் க்ளாஸ் வைக்க முடியாதும்மா. கூச்சத்தை விட்டு ஸ்டார்ட் மியூசிக்’னு சொல்லி நீங்களே ஆரம்பிக்க வேண்டியது தான். ஒரு விஷயம் என்னவென்றால் இங்கு டைப் செய்து பேசும் பல பேர் நேரில் என்னை மாதிரி அமைதியானவங்களா கூட இருக்கலாம்:)

அன்புடன்
பவித்ரா

தோழி மகி, உங்களுக்கு கருத்து சொல்ல வந்ததனால் என்னையும் வாயாடி லிஸ்டில் சேர்க்க வேண்டாம். நான் இயற்கையிலேயே அமைதியானவள். சந்தேகம் இருந்தா அறுசுவைல கேட்டு பாருங்க ;) ஒருகாலத்தில் நான் கூட உங்களை போல தான் இருந்தேன். நாலு பேர் இடத்தில் பேச தயக்கம். வீட்டு விழாக்களில் கலந்து கொள்ள கூச்சம். இதனாலேயே பெரும்பாலான் நெருங்கிய சொந்தங்களின் திருமணத்தை தவிர்த்திருக்கிறேன். பின்னால் நாம் இதையெல்லாம் யோசித்து பார்த்தால் எத்தனை பெரிய சந்தோஷமான தருணங்களை இழந்திருப்போம் என்று எண்ணத் தோன்றும். நீங்கள் தோழிகள் வட்டத்தை பெருக்கி கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் பொது இடத்தில் பேசும் கூச்சம் எப்படி துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடும் என்று பார்ப்பீர்கள். நம் அறுசுவை தோழிகளோடு நேரம் கிடைக்கும் போது அரட்டையில் பேசுங்கள். தாழ்வு மனப்பான்மை இருந்தால் அதை தூக்கி போடுங்கள்.யாருக்கும் நான் சளைத்தவலில்லை என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறன் கண்டிப்பாக இருக்கும். பொது இடங்களில் பேசுபவர்கள் அனைவரும் தைரியசாலிகளும் இல்லை, பேசாமல் இருப்பவர்கள் கோழைகளும் இல்லை.

//இங்கு டைப் செய்து பேசும் பல பேர் நேரில் என்னை மாதிரி அமைதியானவங்களா கூட இருக்கலாம்:)//

இந்த பொண்ணு சொல்றத நம்பாதீங்க. இது உண்மையாவே பெரிய வாயாடி தான். அறுசுவைக்கு நான் வந்த புதுசுல இதை பார்த்து தான் ரொம்ம்ம்ம்ம்ப பயந்ந்ந்ந்ந்து போனேன் ;)))) இந்தம்மாவை யாரும் அமைதியான பொண்ணுன்னு சொல்லாததால் அதுவே அந்த பட்டத்தை சூட்டிக்கிச்சி :D ஹிஹிஹி...கிகிகிகீகீஈஈஈ (மகி, சும்மா ஒரு கலாட்டாக்கு அப்படி சொன்னேன்.)

சீக்கிரமே நீங்களும் "பெரிய்ய்ய்ய்ய வாயாடியாக" வாழ்த்துக்கள் :D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

migavum nandri kalpana avargalukku... ungazhudaya karuthu yenakkum ubayogamaga irukkiradhu...
idhai naanum muyarchikiren..

மேலும் சில பதிவுகள்