ஈஸி குல்பி

தேதி: February 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (20 votes)

திருமதி. நித்யா கோபால் அவர்களின் குறிப்பினை பார்த்து திருமதி. ஹசீனா அவர்கள் செய்து பார்த்து பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

கண்டன்ஸ்ட் மில்க் - 1 டின்
ஃபுல் கிரீம் மில்க் - 1 டின்
பாதாம் ஊற வைத்து தோல் உரித்தது - 10
பிஸ்தா - 8
ஏலக்காய் - 3


 

பாலையும் அதே அளவு கண்டன்ஸ்ட் மில்கையும் எடுத்துக் கொள்ளவும்.
கண்டன்ஸ்ட் மில்க் மற்றும் க்ரீம் மில்க் இரண்டையும் நன்றாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது பாதாம், பிஸ்தா சேர்த்துக் கொள்ளவும். மீதி பாதாமை துருவி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அடித்த கலவையை மோல்ட் இருந்தால் அதில் ஊற்றி வைக்கவும். இல்லை என்றால் டம்ப்ளரில் ஊற்றி அதன் மேல் துருவிய பாதாம், பிஸ்தா சேர்க்கவும்.
இந்த கலவையை 7 மணி நேரம் ப்ரீசரில் வைத்து விடவும். அருமையான ஈசி குல்பி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் Haseena, எப்படி இருக்கிங்க? Super குல்பி,விருப்ப பட்டியல்ல சேர்த்தாச்சு, ஸ்டாரும் தந்தாச்சு !!!

sharmila

நான் அடுத்து இந்த குறிப்பு தான் செஞ்சு அனுப்பலாம் நினைத்தேன்,நீங்க அனுப்பிட்டீங்க.வாழ்த்துக்கள்.

எனக்கு பிடித்த குல்பி ....நன்று இதுபோல் எங்களுக்கு பிடித்த குறிப்புகளை அனுப்ப வாழ்த்துக்கள்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சலாம் ஹசீனா ... நலமா ..? மிக சுலபமான மற்றும் சுவையான குல்ஃபி ..விரைவில் செய்து பார்க்கிறேன் .. வாழ்த்துக்கள்..!!

Express Yourself .....

சுவையான சுலபமான குல்ஃபி பாக்கும்போதே சாப்பிடனும்னு தோனுதுப்பா வாழ்த்துக்கள் ஹசீனா....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என்னபா நான் பேசியவுடன் பயந்து ஓடிப்போய்விட்டீங்களா ..
ஆளையே காணோம் ...
எனக்கு ஒரு கப் குல்ஃபி தந்துஇருக்கலாம்தானே...தாங்க நான் வரும்போது
வாழ்த்துக்கள் ...

வாழு, வாழவிடு..

ஐயோ கடவுளே என்ன சோதனை இது....டாக்டரை வைத்து ஐஸ் கிரீம் சாப்பிட கூடாதுன்னு சொல்ல வச்சிட்டு...என் கண்ணுமுன்ன எனக்கு பிடிச்ச குல்பி அதுவும் ஈஸியான செய்முறையுடன்....
வாழ்த்துக்கள் ஹ்சீனா...

சலாம் ஹசினா லுலுகுட்டி எப்படி இருக்கிறாள்? நான் கேட்டேன்னு சொல்லுடா
சுலபமான குல்பி வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ஹசீனா..,நலமா..?
இப்பதான் நான் அருசுவைக்கு வந்து பார்க்கின்றேன்.
ரொம்ப சூப்பரான குறிப்பை கொடுத்திருக்கீங்க..
கலக்கலாக இருக்கு.வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ஷர்மிளா நலமா?நான் நலம்.

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிமா.

ஹசீன்

ரீம்,நீங்கள் அனுப்ப இருந்ததை அனுப்பி விட்டேனா?

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

ஹசீன்

ஹாய் அஸ்வதா,

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

ஹசீன்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கும்

நன்றி....

இந்த குறிப்பு கொடுத்த நித்தியாகும் எனது நன்றி.....

ஹசீன்

வஸ்ஸலாம் சகியா,நான் நலம் நீங்க நலமா?

செய்து பாருங்கள் சுவையாக இருந்தது...

வாழ்த்துக்கு நன்றிமா....

ஹசீன்

ஹாய் ஸ்வர்ணா,

வாழ்த்துக்கு நன்றிமா....

ஹசீன்

ஹாய் ருக்ஸ்.....

கண்டிப்பா வாங்க தருகிறேன்.

ரொம்ப நன்றிமா.....

ஹசீன்

ஹாய் சுமதி,

டாக்டர் என்ன சொன்னால் என்ன,நாம் சாப்பிட வேண்டியது தான்.(ஹ ஹ ஹ ......)

வாழ்த்துக்கு நன்றிமா....

ஹசீன்

ஹாய் அம்மா நலமா? குட்டிமா நல்லா இருக்கா.

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

ஹசீன்

ஹாய் அப்சரா நலமா?நான் நலம்.

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

இது நித்தியாவின் குறிப்பை பார்த்து செய்தது...

ஹசீன்

Hi hasina akka,
enaku full cream milk na enanu puriala namma normal vetla use panra milkah akka. nan ipa pudhusa vandhruken arusuvaiku