வீட் குக்கீஸ்

தேதி: February 17, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

கோதுமை மாவு - இரண்டு கப்
சர்க்கரை - ஒரு கப்
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பால் - ஒரு டம்ளர்
பாதாம் - தேவைக்கு (ஸ்லைஸ் செய்தது )
ஏலக்காய் - ஒன்று (பொடி செய்தது )

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு கோதுமை மாவு, சர்க்கரை, பாதாம், ஏலக்காய் பொடி நான்கையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையுடன் வெண்ணெய் முதலிலும், பின்பு பாலையும் சேர்த்து படத்தில் காட்டிய பதத்தில் கொஞ்சம் கெட்டியாக அதே சமயம் கையில் ஒட்டாதவாறு பிசையவும்.
அரை மணி நேரம் கழித்து கலவையை அச்சில் வைத்து, அந்த வடிவத்தை அவன் ட்ரேயில் பாயில் பேப்பர் விரித்து வைக்கவும்.
பின் ட்ரேயை அவனில் 350 டிகிரி சூட்டில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும். அல்லது அவரவர் அவனுக்கு தகுந்தாற் போல செய்யலாம்.
குக்கீஸ் தயாரானதும் அதற்கான மணம் ( ஃப்ளேவர் ) நன்றாக வரும். அப்போது வெளியே எடுத்தால் சுவையான குக்கீஸ் ரெடி.

இந்த குக்கீஸ் முழுவதும் கோதுமையால் ஆனாது சத்து நிறைந்த ஒன்று. முட்டை விரும்பாதவர்கள் இம்முறைப்படி செய்யலாம். காபி, டீயுடன் சாப்பிட நல்ல ஒரு ஸ்நாக்ஸ். இரண்டு கப் சர்க்கரை போட்டால் தனியாக சாப்பிட நன்றாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

கலக்கீட்டீங்க, பிரமாதம்... பாக்கரக்கே சூப்பர் ஹ இருக்கு. கண்டிப்பா டேஸ்ட் நல்லா இருக்கும். என்கிட்ட ஓவன் இல்ல, சீக்கரமே வாங்கிட்டு பண்ணி பாத்துடறேன். வாழ்த்துக்கள்...விருப்ப பட்டியல்ல சேர்த்தாச்சு..

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வித்தியாசமான ரெசிபிஸ் செய்து கணவரை அசத்துறீங்க போல. வாழ்த்துக்கள்.இந்த கலவை அச்சு எங்கு கிடைக்கும்.

Expectation lead to Disappointment

ரம்யா குக்கீஸ் பாக்கும்போதே சுவையாக இருக்கும்னு தோனுது செய்முறையும் மிக எளிமையா இருக்கு கண்டிப்பா நான் செய்து பாக்குரேன் வாழ்த்துக்கள் ....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்யா சூப்பர்ர்ர்ர்ர் குக்கிஸ் கோதுமையில் செய்யலாமா. என்னிடம் ஒவன் இல்லை எந்த பிராண்ட் வாங்கலம்

ரம்யா,
வீட் குக்கீஸ் ரொம்ப ஈஸியா, பார்க்கவும் ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கிங்க. வாழ்த்துக்கள்! என்னோட பசங்களுக்கு, அவங்களையும் கிச்சனில் வைச்சிகிட்டு இந்த மாதிரி, குக்கீஸ் பேக் பண்ணி கொடுப்பது என்றால் கொள்ளை ஆனந்தம்!, எனக்கும்தான்!! இது நல்ல சத்தான குறிப்பாகவும் இருக்கு! குறிப்பை என்னோட விருப்பபட்டியல்ல சேர்த்தாச்சு. கட்டாயம் செய்து பார்த்து சொல்கிறேன் ரம்யா.

(பி.கு. குறிப்பில் தே.பொருட்கள் லிஸ்ட்டில், மைதா 2 கப் என்று இருக்கு, அது கோதுமை மாவு என்று அல்லவா இருக்க வேண்டும்?! )

அன்புடன்
சுஸ்ரீ

சுகி

நன்றி.. கண்டிப்பா ஆர்டர் செய்ங்க,....நீங்க நல்லாவே யூஸ் பண்ணுவீங்க சுகி..

மீனாள்..

அஹாஹா... நன்றி..கலவை அச்சு எல்லா கடையிலும் கிடைக்கும். வால்மார்ட், பெட் பாத்ஸ் & பியான்ட் கடையிலும் கிடைக்கும்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி..

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஸ்வரு..

சுவையா இருக்கும். கண்டிப்பா செய்து பாருங்க.. நன்றி

ஃபெரோஸா
கோதுமை மாவில் சூப்பரா செய்யலாம். செய்து பாருங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுபஸ்ரீ

நன்றி.. எனக்கும் அச்சு வடிப்பதில் ஆர்வம்.. ஹீஹீஹீ.. செய்து பாருங்க..

நீங்க சொன்னது சரிதான். இது கோதுமையால் ஆன குக்கீஸ் தான். தவறு நடந்துவிட்டது.. மன்னிக்கவும். அட்மினிடம் சொல்லியாகிவிட்டது.. கோதுமை மாவு என மாற்றிவிடுவார்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அட என்னபா இது பாதுஸாக்கு அப்புறம் குக்கீஸா அசத்துங்க வாழ்த்துக்கள்
ரம்யா ....நன்றி

வாழு, வாழவிடு..

ருக்ஸ்...

ரொம்ப புகழாதீங்க.. வெக்கம் வெக்கமா வருது.. நன்றி ;D

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மொதல்ல ஹஸ்க்கு கொடுத்து அசத்திநீங்க இப்போ குட்டீஸ்க்கா.....என்ன விசேசமா எனக்கு தெரியாதுப்பா சொல்லிடுங்க.....
கலக்குறீங்க போங்க ...இன்னும் என்னஎல்லாம் வச்சுரிக்கீங்க.....அசத்துரதுக்கு...ம்ம்ம்...புதுபோண்ணுள்ள அதான் வெட்கம்...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வி

தேங்க்ஸ் ....கண்டிப்பா செய்து பாருங்க..குட்டீஸ் மட்டுமில்லை எல்லாரும் சாப்பிடலாம் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என்ன ரம்யா சுவீட்ஸா செய்து அசத்துரீங்க....நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் ரம்யா....

சுமதி

அது தான் ரொம்ப ஈஸி.. நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

super cookies.keep it up. i added to my favorite page. with regards.g.gomathi.

ரம்ஸ் சூப்பர். இந்தியால இருக்கற வரை சமையலே தெரியாதுனு சொல்லிபுட்டு இப்ப அங்க போய் சும்மா அசத்துறீங்க பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு அதில் இருக்கு அந்த நட்ஸ் வேற என்னை கூப்பிடுது. யம்மி யம்மி. தொடர்ந்து கொடுங்க.

வாவ் ரம்யா,உங்க கூகீஸ் ரொம்ப சூப்பர்.

வாழ்த்துக்கள்.

ஹசீன்

இது உங்க குறிப்பு தானா, ஆனா தலைப்பில் Ramya Karthick’கு பதிலா Ramya Karthi என்று பார்த்து வேறு யாரோ’னு நினைச்சிட்டேன் டா. கலக்கறீங்க, ஓவன் இல்லாமல் செய்ய முடியாதில்லையா ரம்ஸ்:) ஓவன் வாங்கிட்டு செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

கோமதி

நன்றி.. செய்து பாருங்க ரொம்ப ஈஸி

யாழி

கண்டிப்பா ஒரு பார்சல் அனுப்பறேன்.. நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹசீனா

நன்றி.. ;)

பவி

ஆமா.. மாத்தி போட்டுட்டாங்க.. தெரிவித்துவிட்டேன்.. நன்றி பவி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரம்யா,
இந்த குக்கீ ரொம்ப நல்லா வந்தது. ஒரே நாளில் முடித்து விட்டோம். இன்று மறுபடியும் செய்யப்போகிறேன்.
இது போல் நிறைய ரெசிப்பி கொடுக்க வாழ்த்துக்கள்.
நன்றி,
மீனா.

ஹாய் ரம்யா எப்படி இருக்கீங்க?
என் சிஸ்டம் சரியில்லாததால் இப்பதான் அருசுவைக்கே வருகிறேன்.
மிகவும் அசத்தலான சத்துள்ள பிஸ்கட் செய்து காண்பித்திருக்கீங்க...
பார்க்கும் போதே நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ரம்யா....

நான் இன்னிக்கு தான் பார்க்கறேன் இதை....கலக்கற போ.... ரொம்ப சுலபமா பண்ணலாம் போல இருக்கே... நல்லா அசத்தற போல வீட்டுக்காரரை.... :) வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

ரம்யா... சமையலில் கலக்கறீங்க போல.... ;) சூப்பர் குறிப்பு. மாலே போனா செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீனா,

ரொம்ப நன்றி செய்து பார்த்ததிற்கு ;).. ரொம்ப சத்துள்ள குறிப்பு. குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்சரா...

அப்படியா.. ரொம்ப நன்றி.. கண்டிப்பா செய்து பாருங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

விது

வேற வேலை.. ? ;) அதான் செய்து பாத்துட்டு இருக்கேன்.. ;) நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி

ரொம்ப நன்றி..கண்டிப்பா செய்து பாருங்க..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

hi Ramya,
i tried the cookies. but it was too hard.
Would you please suggest what would've went wrong when i did.
B'coz this is the first cookie i tried.Taste was so good. If you help me out in figuring out the mistake i did, i will make good cookies for my baby..

Thanks,
DeepaKarthik

-

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தீபா

சாரி உங்க பதிவை இப்போ தான் பார்க்கிறேன். மாவை பிசையும் போது நல்லா மெது மெதுனு சாஃப்டா இருக்கும் படி செய்ங்க. ரொம்ப கெட்டியா இல்லாம பாத்துக்கோங்க. மேலும் பட்டர் போட்டு கலக்கும் போது ஹார்ஷா செய்யாம சாஃப்டா கலக்குங்க.. சரியா வரும். இன்னும் சந்தேகம்னா கேளுங்க தீபா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் இதை செய்தேன் நன்றாக வந்தது ஆனால் கொஞ்சம் கடினமாக உள்ளது ஏன் என்று சொல்லுன்கள்

பட்டர் அளவு கம்மியா போட்டு இருப்பிங்க.. இல்லைனா ஓவர் குக் ஆகி இருக்கும்.. ஃப்லேவர் வந்தவுடன் அவனில் இருந்து எடுத்துவிடுங்க.. கொஞ்சம் சாஃப்ட்டா இருக்கும் போது. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இன்று ட்ரை செய்தேன் நன்றாக வந்தது.thanks.

சப்பாத்தி மாவு பதம் சரியாக வருமா

Hi Ramya,
This recipe looks good and simple.I want to try it but have a doubt in that. Could you please tell me what should be the thickness of this cookies....

Regards,
Karthika