தேதி: May 6, 2006
பரிமாறும் அளவு: 2 அல்லது 3 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கேரட் - கால் கிலோ
எலுமிச்சைப்பழம் - ஒன்று
சீனி - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு டம்ளர்
ஐஸ் கட்டி - 2
கேரட்டை தோல் நீக்கி கழுவிய பிறகு, மிக்ஸியில் போடும் அளவு துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் போட்டு, அத்துடன் தண்ணீரையும் சீனியையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு எலுமிச்சைப்பழத்தை விதை நீக்கி கேரட் சாறுடன் பிழிந்து, வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
அத்துடன் நாம் விரும்பும் அளவு ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறலாம்.
கேரட்டை சமைக்காமல் பச்சையாக உண்ணுவது இதயத்திற்கு மிகவும் நல்லது. அதை ஜூஸ் பண்ணி சாப்பிடும்போது கோடை வெயிலுக்கும் மிக ஏற்றதாக அமையும். எனவேதான் இது "டூ இன் ஒன் கேரட் ஜூஸ்.
Comments
simply superb
I like this carrot juice very much. I reduced the sugar and added coconut water instead of plain water. The taste was excellant.
செய்வதற்கு எளிதான சத்தான ஜூஸ்.. நன்றி அஸ்மா..
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா