கோதுமை தோசை (குழந்தைகளுக்கு)

தேதி: February 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கோதுமை மாவு - 1 கப்
பாதாம் - 5
பிஸ்தா - 5
முந்திரி - 5
அக்ரூட் - 5
ஏலக்காய் - 3
தேங்காய் துருவல் - 2 tbsp
தேன் - 3 tbsp
நெய் - 2 tbsp


 

முந்திரி தவிர மற்ற எல்லா நட்சையும் லேசாக (எண்ணையில்லாமல்) வறுத்தெடுக்கவேண்டும்.
தோலுரித்து முந்திரி சேர்த்து பொடியாகி மாவுடன் கலக்கவும்.
தேன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து மாவை தோசை மாவு பதத்திற்கு கலந்து நெய் ஊற்றி தோசையாக வார்த்தெடுக்கவும்.


கொஞ்சம் பெரிய பிள்ளைகளுக்கு நட்ஸை ஒன்றிரண்டாக உடைத்து போடவும். தேங்காயையும் சிறிய துண்டுகளாக போடவும்.
மாலை நேர ஈசியான டிபன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல சத்தான தோசை இது குழந்தைகளுக்கு சேர்ப்பதால் சத்தும் கூட வாழ்த்துக்கள் நன்றி

வாழு, வாழவிடு..

ருக்ஸானா

உங்களின் வாழ்த்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!