பெயிண்டிங் வித் காபி (Basic)

தேதி: February 19, 2011

5
Average: 4.6 (23 votes)

 

இன்ஸ்டன்ட் காபி தூள்
பெயிண்டிங் ப்ரஷ்
படம்
சார்ட் பேப்பர்
பென்சில்

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். ஒரே நிறத்தில் நிறைய ஷேட் இருக்கும் படங்களை தேர்வு செய்வது நன்று.
வரைய விரும்பும் படத்தை நேரடியாக ப்ரஷ்ஷில் வரைய தெரியும் என்றால் வரைந்துக் கொள்ளலாம். இல்லையெனில் அதை ட்ரேஸ் எடுத்தோ, அல்லது நேரடியாக பென்சில் கொண்டோ அவுட்லைன் மாதிரி வரைந்து கொள்ளவும்.
காபி தூளை ஒரு கப்பில் போட்டு நீர் விட்டு கரைக்கவும். ஒரு பேப்பரில் முதலில் தீட்டி பாருங்கள், நீரின் அளவுக்கு ஏற்றபடி நிறம் வேறுபடும்.
முதலில் மிகவும் வெளிர் நிறமாக கரைத்து கொண்டு வரைந்த படம் முழுவதும் ஒரு முறை தீட்டவும். இதை சற்று காய விடவும்.
இப்போது நிறம் தீட்டிய இடத்தின் மேலேயே இன்னும் டார்க் ஆக்க விரும்பும் இடத்தில் மீண்டும் தீட்டினால் இன்னும் டார்க் ஆகும். மீண்டும் சற்று காய விடவும்.
இப்படி அடுத்த டார்க் ஷேட் கொண்டு வர மேலும் அதே காபி கலவையை வைத்து தீட்டவும். தலை பகுதி முழுவதும் முடிக்கவும்.
பின் உடல் மற்றும் வாலிலும் இதே போல் எங்கு ஷேட் கொடுக்க விரும்பினாலும் மேல் மேலே தீட்டி டார்க் ஷேட் கொடுக்கவும்.
கடைசியாக நல்ல டார்க் நிறம் கொண்டு வரைய இதே கலவையில் சிறியதை வேறு கப்பில் எடுத்து அதில் இன்னும் சிறிது காபி தூள் கலக்கவும். இதை கொண்டு இன்னும் நல்ல டார்க் ஷேட் வர வேண்டிய இடத்தில் வரையவும்.
இப்போது டார்க் ஷேட் முழுவதும் கொடுத்து முடிந்த பின் முதலில் கரைத்து வைத்துள்ள லைட் ஷேட் கலவை கொண்டு லேசாக எல்லா இடமும் ஷேட் செய்யவும்.
இப்போது மீதம் இருக்கும் கிளைகளையும் ப்ரஷ் கொண்டு வரைந்து கொள்ளவும்.
இனி ஃபைனல் டச் தான். எங்கெல்லாம் ஷேட் கொடுக்க விரும்புகிறீர்களோ அங்கெல்லாம் தேவையான நிறத்துக்கு ஏற்றப்படி காபி கலவை தயார் செய்து தீட்டி முடிக்கவும். நன்றாக காய்ந்ததும் ஃப்ரேம் செய்து மாட்டலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் வனி

ரொம்ப ஈசியா இருக்கு. கண்டிப்பா செய்து பார்த்துடுவேன். வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நான் இப்போது தான் வீட்டில் ஒன்னு போட்டுட்டு இருக்கேன், இங்க வந்து பாத்தா உங்களோடது வந்து இருக்கு. குருவி அழகு உங்களை போல :)) :)) (தனியா ஸ்வீட் பார்சல் பண்ணி விடுங்க...)
ப்ரு காபி தூள் தான் நான் உபயோக படுத்துறேன். சன்ரைஸ் உபயோக படுத்தலாமா?
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.எப்பவும் போல :) :) வாழ்த்துக்கள் வனிக்கா...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

superrrrrrrrrrrrr,vanitha

ரொம்ப அழகா இருக்கு.பாராட்டுக்கள்.எல்லா விஷயங்களிலும் கலக்குறீங்களே எப்படி??/

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. என்ன இத்தனை வேகமா வெளி வந்துடுச்சு??!!

மஞ்சுளா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க.

சுகந்தி... மிக்க நன்றி. கண்டிப்பா ஸ்வீட் அனுப்பிடறேன். நீங்க செய்ததையும் அனுப்புங்க, நாங்க பார்க்க காத்திருக்கோம். சன்ரைஸ் பயன்படுத்தலாம், ஆனால் அந்த தூள் கொஞ்சம் பெருசா இருக்குறதால நல்லா கரைய விடணும், இல்லன்னா பெயிண்டிங்'ல வந்து ஒட்டிக்கும். :)

உமா... மிக்க நன்றி.

ரீம்... மிக்க நன்றி. கத்துக்கணும்'னு ஆசை தான் காரணம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி அக்கா நலமா?

ரொம்ப அழகா செய்து இருக்கீங்க...

வாழ்த்துக்கள்...

ஹசீன்

ஹசீனா... நான் நலம். நீங்க நலமா? மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ப்ரு காபி தூள் தான் நான் உபயோக படுத்துறேன். சன்ரைஸ் உபயோக படுத்தலாமா?//
;)

ரொம்ப அழகா இருக்கு வனிக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வனி, அழகா இருக்கு. முன்னாடி செய்த க்ளாஸ் பெயின்டிங்கும் அழகோ அழகு. கமன்ட் போடணும் என்று நினைச்சுட்டே இருந்தேன் மறந்திடுச்சு. நானும் தேவையான பொருட்கள் வாங்கிட்டு செய்து பார்க்கணும்.
வாணி

வனி எப்படிப்பா???கலக்கிட்டீங்கபோங்க சூப்பர் வாழ்த்துக்கள்

ஆமினா... மிக்க நன்றி

;) அதென்ன? என்ன அர்த்தம்? :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாணி... மிக்க நன்றி. உங்க பின்னூட்டம் கண்டது மிகுந்த மகிழ்ச்சி. அவசியம் செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாத்திமா... உங்க பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

kuruvi super.

வனி, குருவி அழகோ அழகு. கலக்குறீங்க. சுலபமாக கிடைக்ககூடிய பொருட்களை வைத்து அற்புதமாக செய்திருக்கீங்க. நானும் முயற்சி பண்றேன். பாராட்டுக்கள்.

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ;)

@}->--

‍- இமா க்றிஸ்

வனி

எனக்கு காப்பி தூள் வெச்சு காப்பி மட்டும் தான் போட தெரியும்.. குருவி எல்லாம் உங்க ஒருத்தரால தான் போட முடியும்.. குருவி க்யூட்டா இருக்கு ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிக்கா ரொம்ப அழகா இருக்கு,வாழ்த்துக்கள்...

சிம்ப்ளீ சூப்பர்ப் வாழ்த்துக்கள்... குருவி ரொம்ப அழகாயிருக்கு
..உங்கள் மகளுக்கு முடியவில்லை என்று கூறியிருந்தீர்கள்
இப்போ எப்படி இருக்கு பத்திரமா பார்த்துக்கங்க
பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் நமக்குத்தான் கவலை... நன்றி.

வாழு, வாழவிடு..

simply super.i will try. keep it up .with regards.g.gomathi.

romba alaga iruku vanitha mam.... inike vetuku poi senji pathuduvenga ...romba alaga iruku kuruvi....all the best mam

வனிதாக்கா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. கலக்குறீங்க எனக்கு இப்பதான் தெரியும் இப்படி ஒரு ஆர்ட் இருக்குனே. தத்ரூபமாக இருக்குகா. வாழ்த்துக்கள் அக்கா.

வனிதா அக்கா காபி தூளில் பெய்ண்டிங் சூப்பர் ,, பெய்ண்டிங் தெரியாதவங்க கூட ஈஸியா செய்யலாம் ,குருவி ரொம்ப அழகா இருக்கு.

காபி தூள்வைத்து பெயிண்டிங் செய்ய முடியுமானு ஆச்சரியமா இருக்கு,, சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.........

உன்னை போல பிறரையும் நேசி.

சுபஸ்ரீ... மிக்க நன்றி.

பிரியா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க.

இமா... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.... ;) செபா ஆன்ட்டி நலமா?

ரம்யா.... மிக்க நன்றி. இந்த மாதிரி பெயிண்டிங்லாம் எப்படி படம் எடுத்து சொல்ல முடியும்'னு நினைச்சுட்டு இருந்தேன்... வினோஜா கேட்டதால் தான் அனுப்பினேன். அதனால் நன்றி அவருக்கே.

சுமதி... மிக்க நன்றி.

ருக்சனா... மிக்க நன்றி. மகள் இப்போ நலம். உண்மை தான்... அவங்க அடுத்த நிமிஷம் ஒன்னுமே நடக்காத மாதிரி விளையாடறாங்க, நமக்கு தான் மனசுலயே நிக்கிது.

கோமதி... மிக்க நன்றி.

பொற்கொடி... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க.

யாழினி... மிக்க நன்றி. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.

கல்பனா... மிக்க நன்றி. ஆமாம், எப்படி பெயிண்ட் பண்ணனும்'னு பேசிக் தெரிஞ்சா இன்னும் சூப்பர் இமேஜ்'லாம் பண்ணலாம்.

தேவி... மிக்க நன்றி. காபி தூள் என்ன, டீ தூள்'ல கூட பண்னலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி ரொம்ப ரொம்ப நன்றி. நான் கேட்டதற்காக இவ்வளவு அழகாக, புரியும்படி காபி பெயிண்டிங் சொல்லி கொடுத்தற்கு நன்றி வனி. ரொம்ப சூப்பரா இருக்கு. இது பேஸ்சிக் கொடுத்து இருக்கீங்க இன்னும் வேற மாதிரி கூட பெயிண்ட் செய்யலாமா? இந்த பெயிண்டிங்க பார்த்ததும் நான் என்ன மாதிரி படம் வரைந்து பெயிண்ட் செய்யலாம் தோண ஆரம்பிச்சுடுச்சு. மீராபாய் படம் காபி பெயிண்டிங்க்கு பொருத்தமா இருக்குமா?

வினோஜா... நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நீங்க கேட்டதால் தானே நான் அனுப்பினேன். மிக்க நன்றி. மீராபாய் நிச்சயம் அம்சமா இருக்கும். எந்த ஓவியம் விரும்பினாலும் இதில் கொண்டு வரலாம்... நிறம் அதிகம் இல்லாமல் ஷேட்ஸ் அதிகம் உள்ளவை மிக நன்றாக இருக்கும். இன்னும் சில விதம் இருக்கு வினோஜா அதுக்கு தேவையான பொர்ட்கள் சில இங்க கிடைக்கல. சொல்லி வெச்சிருக்கேன், கிடைச்சதும் செய்து அனுப்பறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குருவி அழகோ அழகு.......வாழ்த்துக்கள். உங்களுக்கு கண் பார்த்தால் கை செய்திடுமோ??

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனிதா,

குருவி, பெய்ன்டிங் எல்லாமே அழகு.

க்றிஸ் (சார்பாக இமா) ;))

லாவண்யா... மிக்க நன்றி. நம்ம அவ்வளவு வேகமெல்லாம் இல்லைங்க. எதை பார்த்தாலும் கை செய்யுதோ இல்லையோ மனசுக்கு செய்ய தோணும். :)

க்றிஸ் அங்கில்.... மிக்க நன்றி. நலமாக இருக்கீங்களா? இமா... அவர் சார்பாக பதிவிட்டமைக்கு ரொம்ப நன்றி. செபா ஆன்ட்டி, பிள்ளைகள் எல்லாரும் நலமா? கேட்டதாக சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கு வனிதா. நானும் ஒரு ட்ராயிங் போட்டு வைத்திருக்கிரேன்.கால்ர் பண்ண உங்க methad is the best.very nice.

செல்வி... மிக்க நன்றி. அவசியம் இது போல் செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா