பள்ளி செல்லும் தருணம்

ரொம்ப நாளைக்கு பொறவு புதுசா இழை போட்டுருக்கேன்... எல்லாரும் வருவீகன்னு நம்பிக்கைல... எல்லாரும் உங்க கருத்த சொல்லிபுட்டு போங்க.....

மேட்டர் இது தான்
முன்பெல்லாம் குழந்தை பள்ளியில் சேர்க்கணும்னா 5 வயசு (அம்மா காலத்துல 7 வயசாம்;) ஆகணும். இப்ப 3 1/2 வயசு ஆனாலே போதும்னு சொல்றாங்க. அதுக்கேத்த மாதிரி நம்ம புள்ளைங்களும் கொஞ்சம் முன்னேறிட்டாங்க (3 1/2 வயசுலலாம் நான் விளையாட்டை தவிர வேறேதும் அறியவில்லை. ஆனா இந்த கால பசங்க 1 வயசுல இருந்தே பேச ஆரம்பிச்சு 3 1/2 வயசுக்குள்ள ABC 26 எழுத்தும் மனப்பாடமா சொல்லும் அளவுக்கு முன்னேற்றம்). அதனால அந்த காலத்து அம்மாக்களுக்கு பெரும்பாலும் கவலை இருக்காது. ஆனா 3 வயசு பிள்ளைகளை இனி இதுதான் உன் இடம்னு பள்ளியை அறிமுகப்படுத்துவது ரொம்பவே சிரமான விஷயம் (சில குழந்தைகள் உடனே பக்குவப்பட்டிருக்கலாம்;)

நிறைய பேருக்கு குழந்தையை பள்ளியில் சேர்த்த அனுபவம் இருக்கும்... அத கொஞ்சம் சொன்னீங்கன்னா என்னைய மாதிரி இருக்குறவங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்...

உங்க குழந்தையை பள்ளியில் சேர்க்கும் முன் எப்படி ஆர்வம் கொடுத்தீங்க? என்னன்ன முன்னேற்பாடெல்லாம் செஞ்சீங்க? அவங்கள எப்படி ப்ரிபேர்ட் பண்ணீங்க? பள்ளி கூட சூழ்நிலையை அவர்கள் ஏற்றுக்கொள்ள என்னன்ன செய்யலாம்?

நல்ல ஸ்கூல் எப்படி தேர்ந்தெடுக்குறது? என்னன்ன அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும்? ........... இப்படியே நிறையா கேள்வி அடுக்கிக்கிட்டே போகலாம்... தோழிகள் வந்து அனுபவத்த சொல்லுங்கபா..

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்ல இழை,என் பொண்ணும் இப்போதான் ஸ்கூலுக்கு போக போறா.எனக்கு தான் பயமா இருக்கு.
***உங்க ப்ளாக் தற்செயலா இப்போதான் பார்த்தேன்,ரொம்ப நல்லாயிருக்கு.பாராட்டுக்கள்.****

//ரொம்ப நல்லாயிருக்கு.பாராட்டுக்கள்.****//

ரொம்ப நன்றி ரீம்....

என் மகனும் இப்ப தான் சேர்க்க போறேன்.. உண்மையிலேயே உங்கள மாதிரி எனக்கும் ரொம்ப பயமா இருக்கு. ஆனா எங்கம்மா இதெல்லாம் என்ன பெரிய விஷயம்ங்குற ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்காங்க ;)

குழந்தைய எப்படி அந்த சூழ்நிலைக்கு தயார்படுத்துறதுன்னு தெரியல.... அனுபவமிக்கவர்கள் வந்து சொல்லுவாங்கன்னு எதிர்ப்பாக்கலாம் ;)

உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க.. என்ன பண்றீங்க? எப்படி ஸ்கூல் செலக்ட் பண்ணி வச்சுருக்கீங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் பெரிய அனுபவசாலி எல்லாம் இல்லபா . என் பொண்ணுக்கு இப்ப 2 yrs 8 months ஆகுது . இப்ப தான் ஸ்கூல் சேர்ப்பது என்றாலே interview உண்டு என்பது எல்லாரும் அறிந்ததே . அதற்காக சென்ற விஜயதசமியில் பள்ளியில் சேர்த்தேன் . முதலில் மற்ற பிள்ளைகள் அழுவதை பார்த்து அவளும் அழுதுகொண்டு தான் இருந்தாள். அவளை பள்ளியில் விட மனமே இல்லாமல் அழுக அழுக விட்டு விட்டு வருவேன் . 15 நாளில் அவள் பழகிகொண்டாள். அவளது ஆசிரியை அடிப்பது இல்லை . அதனால் சில நாட்களில் அவள் விரும்பி செல்ல ஆரம்பித்தாள். அவள் நன்றாக பேசுவாள். ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அவளது ஆசிரியையிடம் இருந்து கம்ப்ளைன்ட் வந்தது . அவளை ஏதாவது rhymes தனியாக பாட சொன்னால் பாட மாட்டுகிறாள் என்று . ஆசிரியை அவளுக்கு பேச்சு இன்னும் வரவில்லை என்று நினைதுகொண்டார்கள் . அதனால் இத்தனை நாட்கள் விட்டுவிட்டார்கள். எனக்கு மிகுந்த கஷ்டமானது . வீட்டிற்கு வந்தால் அவள் rhymes புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு என்னிடம் சொல்லிகொடு என்று நச்சரிது கொண்டிருப்பாள் . எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது .
அவளிடம் அன்பாக , ஆசையாக , ஆசிரியை கேட்டால் நீ rhymes பாட வேண்டும் என்று எவ்வளவோ சொல்லி பார்த்தேன் . ஆனால் அதற்கெல்லாம் அவள் கவலையே படாமல் நான் சொல்லமாட்டேன் என்று ஆணித்தரமாக கூறினாள். எப்படி இவளை மாற்றுவது என்று புரியாமல் விழித்தேன் .இரவில் படுக்கும்பொழுது நீ rhymes பாடவில்லை என்றால் நான் உன்னுடன் படுக்கமாட்டேன் என்று கூறி வெளியில் சென்று படுத்து கொண்டேன். (என் மகளுக்கு நான் தட்டி கொடுத்தால் தான் தூக்கமே வரும்). நான் செய்வது தவறு என்று எனக்கு நன்றாக தெரிந்தது. இருபினும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. உடனே என் மகள் என் வழிக்கு வந்துவிட்டாள். அம்மா ஆசிரியையிடம் rhymes பாடுவேன் என்று அவளது வாயால் சொன்னாள். அதே போல் அவள் பாடவும் செய்தாள். அன்றே அவளுக்கு விரும்பிய சாக்லேட் வாங்கி கொடுத்து பாராட்டினேன் .

நான் அவளை சென்னையில் உள்ள ஒரு cbse பள்ளியில் சேர்த்து உள்ளேன் . ஏப்ரல் முதல் அவர்களுக்கு பள்ளி ஆரம்பம் . சிபாரிசு இல்லாமல் இப்பொழுதெல்லாம் நாம் விரும்பும் பள்ளியில் இடம் கிடைப்பது இல்லைப்பா.

என் பொண்ணுக்கு rhymes , weeks , months , ஒரு அஞ்சு திருக்குறள் ,ஆத்திசூடி 12, ஒரு சில தேசிய தலைவர்கள் பெயர் , ஒரு சில நாட்டின் பெயர் கொடிகளை வைத்து சொல்வது , ஒரு சில சுலோகம் , எண்கள் 50 வரை என்று ஓரளவிற்கு தெரியும் .

ஸ்கூல் வீட்டிலிருந்து பக்கத்தில் இருக்கணும் என்பதது தான் என் சாய்ஸ்.அதனால் வீட்டிலிருந்து பக்கத்திலே இந்தியன் ஸ்கூலில் தான் அப்ளிகேஷன் வாங்கியிருக்கு.alphabets,numbers 1-100 colors,shapes,animals fruits etc etc.எல்லாம் சொல்லுவா,கொஞ்சம் எழுதுவா.நல்லா கலர் பண்ணுவா.தனியா விட்டுட்டு இருந்ததில்லை அதான் கொஞ்சம் கவலையா இருக்கு.ஆனா அவளே எப்ப ஸ்கூலுக்கு போக என்று கேட்க ஆரம்பித்துவிட்டாள்.

how are you .please check the school fees ,education syllabus.with regards.g.gomathi.

சலாம் ஆமினா ...!! நானும் பெரிய அனுபவசாலியெல்லாம் இல்லை .. எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகலாம்னு வந்தேன் ..:) நீங்கள் ஃப்ஃரீயாக இருக்கும்பொழுது பள்ளிக்கூடத்தை பற்றி சுவாரஸ்யமாக குழந்தைக்கு எடுத்துச்சொள்ளுங்கள் .. குழந்தைக்கு ஏதெனும் கார்டூன் கேரெக்டெர் பிடிக்கும் என்றால் அந்த கேரெக்டர் போட்ட பேக் வாங்கி ஸ்கூலுக்கு எடுத்துபோகனும் என்றெல்லாம் சொல்லி குழந்தயை உற்சாகபடுத்துங்கள் .. அங்கு நிறைய நன்பர்கள் இருப்பார்கள் நிறைய விலையாடலாம்.. என்று கூறுங்கள் ... இவ்வாறு அக்குழந்தை கேட்கையில் அதற்கே பள்ளிக்கூடம் செல்ல வெண்டும் என்ற உற்சாகம் வரும் ...!!

Express Yourself .....

அனுபவம் இல்லைன்னு சொல்லி ரொம்ப தெளிவா விளக்கமா சொல்லிட்டீங்க... ரொம்ப நன்றி ரம்யா... நிறைய பேருக்கு கண்டிப்பா உங்க கருத்து உபயோகமானதாக இருக்கும்....

நீங்க சொல்வதை போல் தான் நானும் பேச மாட்டேன், சண்டை , உன்கூட பேச்சில்லன்னு அவன மாதிரியே பேசி அவனுக்கு சொல்லிகொடுத்துட்டு இருக்கேன்... நம்ம எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமா இருக்கே ;) அவங்களுக்கு over ஆ திணிக்க கூடாதுங்குற பயமும் அதிகமா இருக்கு......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

cbse பத்தி விளக்கமா சொல்ல முடியுமா? மெட்ரிக்கும் அதற்கும் என்ன வித்தியாசம், என்ன கூடுதல் பலன்?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்