பின்பற்றக் கூடாத பழக்க வழக்கங்கள்:

--------------//சாப்பிட்டவுடன் பின்பற்றக் கூடாத பழக்க வழக்கங்கள்://-------------------------

நல்ல பழக்க வழக்கங்களை நமது அன்றாட வாழ்வியலில் பின்பற்றுவது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தீய பழக்கவழங்க்களை களைந்து நலமாக வாழ்வதும் முக்கியம்.

$ தீங்காகும் சிகரட்:
சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரட் பிடித்தால்-அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரட் பிடிப்பதை விட மிகப்பெரிய கெடுதல் ஆகும். பத்து சிகரட்டுக்குகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உன்டோ அவ்வளவு பெரிய தீமை உண்டாகும்.

$ தீதாகும் பழக்கங்கள்:
அதேபோல்,சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை
(BLOATED WITH AIR) உருவாக்குகிறது.
எனவே, சாப்பிடுவதற்கு ஒருமணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிடு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

$ தேநீரை தவிருங்கள்:
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்கள். (இது எவ்வளவு பேருக்கு சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் அசிட் உள்ளது.. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

$ இடை வரை தளர்த்தாதீர்கள்:
சாப்பிட பிறகு உங்களது பெல்டுக்களை தளர்த்தி விடாதீர்கள். (Dont Loosen Your Belt)ஏனனில், அது குடலை வலைத்து தடுக்க வாய்ப்பு உள்ளது.

$ குளிப்பது கூடாது:
சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக் கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்ருக்குச் செரிமானத்திற்க்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புக்களை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

$ உறங்கக் கூடாது.
மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர், உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது .உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.

//----------------- ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்: -------------------------//
ஹாய் தோழீஸ், உங்களுக்காக சிங்கை நாழிதளில் வெளியான ஹெல்தி டிப்ஸ், விரைவில் மற்ற பகுதியினையும் தட்டச்சு செய்து அனுப்புகிரேன்.

"அச்சச்சோ! மறந்தே போச்சே". இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம். அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்கு காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க 'பாஸ்பரஸ்' மற்றும் 'குளுட்ட்டமிக்' அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெய்யிலில் காயவைத்துப் பொடித்து கொண்டு, தினமும் அரை தேக் கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள், பெரியவர்கள் நல்ல நினைவாற்றளுடன் சுருசுப்பாகத் திகழ்வார்கள். வல்லாரை மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொல்லவும் , தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறப்போட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதம் பருப்பின் மேல் தோலை நீக்கி விட வேண்டும். நூறு கிராம் பாதம் பருப்பில் 490 மில்லி கிராம் 'பாஸ்பரஸ்' , தாது உப்பு இருக்கிறது, 'குளுட்ட்டமிக்' அமிலமும் உள்ளது.

* உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

*சமையலில் சீரகம், மிலகு கன்டிபாக இடம்பெற வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக் காய், சோயாபீன்ஸ், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில், பாஸ்பரஸ், உப்பு அதிகம் உள்ளது. இவை தவிர பால், தயிர், போன்றவற்றையும், உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள் தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியான படி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

அஜீரணம் :

அஜீரணம் ஆவதற்கு அடிப்படை காரணங்கள் மூன்று. 1. உடல் ஒவ்வாம்மை. 2. உணவு ஒவ்வாம்மை. 3. பழக்கவழக்க தவறுகள். சிலருக்கு சில உணவுகள் இயல்பாகவே ஒத்துக்கொள்ளாது. அவற்றை சாப்பிடுவதாலும் அஜீரணம் ஏற்படலாம். பிடித்த உணவுகளை நேரம் தவறியோ, அளவுக்கு அதிகமாகவோ சாப்பிடலோ ஜீரண உறுப்புக்கள் சரிவர இயங்க முடியாமல் அஜீரணத்தை ஏற்படுத்தும், எனவே நமது பழக்க வழக்கங்களை சரிபடுத்திக் கொண்டாலே அஜீரணத்தை தடுத்துவிடலாம்.

மேலும் சில:

* பசித்த பிறகே உணவே உண்ண வேண்டும்.
* எப்போதும் அளவோடு சாப்பிடவேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே உண்ண வேண்டும்.
* கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை அளவோடு சேர்க்க வேண்டும்.
இரவு உணவை குறைவாக உண்ண வேண்டும்.
* தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* கோபம், மன இறுக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
* தொலைகாட்சி பார்த்துக்கொண்டோ, நாளிதழ் படித்தபடியோ சாப்பிடக் கூடாது.
* உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

நல்ல பயனுல்ல தகவலா இருக்கு பாதிதான் படுச்சேன் தூக்கம் வருது அதுக்குல் ஒரு பதிவை போட்டு இழையே மேலை கொண்டு வந்தேன்
மிகவும் முக்கியமான விசயங்கல் இதில் சொல்ல பட்டு இருக்கு எல்லாரும் படுச்சு பயனடையவும்
நன்றி நூரி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

முதல்ல இதை சேத்துக்கோங்க எல்லா நல்ல விஷயத்தையும் தெரிந்தாலுமே அதை கடை பிடிப்பதில் அலட்சியம் செய்தல் இருக்கக் கூடாதுன்னு

மேலும் சில பதிவுகள்