கலாட்டா கிச்சன் அசத்தலான பகுதி - 8

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது தலைப்புடன் புது சமைத்து அசத்தலாம். வந்தாச்சு தோழிகளே நீங்கள் எல்லாரும் வந்து ஆஜராகும்படி கேட்குக் கொள்கிறோம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

கோமு - 60
இளவரசி - 61
கவிதா உதயகுமார்(uk5mca) - 64

இவற்றில் இருந்து வரும் Feb 21 ஆம் தேதி முதல் Feb 28 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

கணக்குபிள்ளை யாழினி....(நானே தான்ங்க) செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கிறேன். சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

தோழிகள் அனைவரும் கலட்டா கிச்சன் பகுதிக்கும் வந்து ஒரு பார்வையிடுங்கள் உங்களால் முடிந்த அளவு குறிப்புகள் செய்து காண்பித்து அசத்தலாமே. இந்த பகுதியையும் நல்ல முறையில் எடுத்து செல்லலாமே அதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

நலமா யாழினி? காலையே வந்து பார்த்தேன் ஆரம்பிக்கவில்லை .
இப்பதான் பார்க்கிறேன் இன்று சமைத்துவிட்டேன் இரவில் இருந்து சமைப்பதை
கணக்கு வைக்கலாம் சரியா இல்லையென்றால் வனிக்கா பென்ச் மேல் நிற்க
வைத்துவிடுவார்கள் ..மற்ற தோழிகளும் வந்து கலந்து கொள்ளுங்கோ..

வாழு, வாழவிடு..

வந்தாச்சா/,யாழினி நான் நாளையிலிருந்து சமைத்து சொல்றேன்.

யாழி நான் முதன் முதலில் கலந்து கொள்கிறேன். இன்று இரவில் இருந்து ஆரம்பிக்கிறேன். தினமும் சமைத்துவிட்டு சொல்ல வேண்டுமா. செய்வதை எல்லாம் போட்டோ எடுக்கணுமா. எனக்கு புரியல பிளஸ் யாராவது சொல்லுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நாளைக்கு சமைச்சுட்டு வந்து கணக்கு சொல்லுங்க. கணக்கை குறித்துக் கொள்கிறேன். இந்த முறை நிறைய தோழிகள் கலந்துப்பாங்கனு நினைக்கிறேன் பார்க்கலாம்.

ரே எல்லாத்தையும் போட்டோ எடுத்து அனுப்பனும்னு இல்லடா உன்னால முடிந்ததை வரிசையாக படம் எடுத்து அனுப்பு அப்படி இல்லை என்றால் நீ சமைத்தவற்றை வந்து சொல்லு போதும்.

யார் அதிகமாக செய்கிறார்களோ அவர்கள் வின்னர்ற.சரி யாழி எனக்கு புரிந்து விட்டது. நான் இன்று இரவே தொடங்குகிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் யாழி,வந்துட்டீங்களா? காலையிலயே வந்து பார்த்தேன் யாழி.இந்த தடவை உங்களுக்காகவே கலந்துக்கனும்னு முடிவு பண்ணியிருக்கேன் யாழி.சமைச்சுட்டு வந்து சொல்றேன் யாழி.

இப்பகுதியை சிறப்பாக கொண்டு செல்லும் உங்களுக்கும் சமைத்து அசத்தவிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

ரே ஆமாம் யார் அதிகமா செய்து காண்பிக்குறாங்களோ அவங்க தான் வின்னர்பா. களத்தில் குதிங்க அசத்தலான சமையல்கள் செய்ங்க. all the best

நித்தி நீங்க சொன்னது கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்காகவா? சரி நித்தி நிறைய குறிப்புகள் செய்து காண்பித்து அசத்த என் வாழ்த்துக்கள்பா. கலக்குங்க.

யாழினி வந்தாச்சு. நானும் கலந்துக்கப்போறேன். யாழினிகிட்ட பட்டம் வாங்க போறேன். தோழிகளே வாங்க கலக்கலாம்.

ஹாய் யாழி,எங்க வீட்டில் எப்பவும் இருக்கறது,அடிக்கடி செய்யறதுதான்

இன்றைய இரவு மெனு:

கோமுவின்-புதினா துவையல்
கவிதாவின்-அவல் உப்புமா

அன்புடன்
நித்திலா

மேலும் சில பதிவுகள்