தக்காளி பச்சடி

தேதி: February 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

நீளவாக்கில் நறுக்கிய தக்காளி (பெரியது) - ஒன்று
சீனி - சுவைக்கேற்ப
நெய் - 2 தேக்கரண்டி
ஏலம், பட்டை, கிராம்பு - தலா 2
பாதாம், திராட்சை - தலா 4 அல்லது 5
பன்னீர் - சிறிது


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலம், பட்டை, கிராம்பு, பாதாம், திராட்சை போட வேண்டும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்க்கவும்.
அதனுடன் சீனி சேர்த்து அடுப்பின் தணலை சிம்மில் வைக்கவும்.
தக்காளி நன்கு குழைந்து வரும் போது சிறிது நெய், பன்னீர் சேர்த்து கிளறி விடவும்.
சுவையான தக்காளி பச்சடி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் வாழ்த்துக்கள் ஹசீன்.. நானும் இதுபோல்தான் செய்வேன் பன்னீர் சேர்க்கமாட்டேன் எனக்கு இனிப்புஎன்றால் பிடிக்கும்
செய்துவிடுகிறேன் வாக்கும் அளித்துவிடேன் நன்றி..

வாழு, வாழவிடு..

ஹசீனா தக்காளி பச்சடி சூப்பரா எளிமையா இருக்கு ,வாழ்த்துக்கள்

ஹாய் ஹசீனா, தக்காள் பச்சடி சூப்பர இருக்கு பார்க்க பஞ்சாமிதம் மாதிரி இருக்கு. தக்காளி விலை மலிவா இருக்கு கண்டிப்பா செய்து பாக்குரேன்.;)) வாழ்த்துக்கள்..............

உன்னை போல பிறரையும் நேசி.

ரொம்ப சுலபமா இருக்கு

செய்துட்டு சொல்றேன்

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும் குழுவினருக்கும்

நன்றிகள்....

ஹசீன்

நன்றி ,

பன்னீர் சேர்த்து செய்துப் பாருங்கள்..

ஹசீன்

ஹாய் கல்பனா நலமா?

வாழ்த்துக்கு நன்றிமா....

ஹசீன்

நலமா தேவி,

தக்காளி விலை கம்மியா இருக்கா?

செய்துப் பாருங்கள் நன்றி தேவி.......

ஹசீன்

ஆமினா,

செய்துப் பார்த்து சொல்லுங்கள்...........

நன்றி.............

ஹசீன்

அஸ்ஸலாமு அலைக்கும் ஹசீனா...,
தக்காளி பச்சடி பார்க்கும் போதே சூப்பராக இருக்கு.
எங்க வீட்டிலும் இப்படிதான் செய்வோம்.(பன்னீரை தவிர...)
ம்ம்ம் அசத்துங்க... வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வளைக்கும் சலாம் அப்சரா,நலமா?

சிறிது நாட்களாக ஆளை காணவில்லையே?

நீங்களும் இப்படிதான் செய்வீங்களா.....

வாழ்த்துக்கு நன்றிமா..

ஹசீன்

ஹசீனா... அருமையான சுலபான குறிப்பு. அடுத்த முறை பிரியானி செய்யும்போது செய்துட்டு சொல்ரேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிஅக்கா,
பிரியானிக்கு இது ஒரு நல்ல ஸ்வீட் சைட் டிஷ்.... செய்துப் பாருங்கள்.
வாழ்த்துக்கு நன்றி.....

ஹசீன்

ஹசினா ஈசியா இருக்கு வாழ்த்துக்கள்டா

தக்காளி பச்சடி பார்க்கும் போதே சூப்பராக இருக்கு,சுலபமாவும் இருக்கு....வாழ்த்துக்கள் ஹசீனா...

hai lulu,
super ippathan seithu en kanavarukku koduthen supernnu sonnar, thanx for ur recepi

Raihana