சந்தேகம் தீர்க்கவும்

எனக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றது. மூன்று வருடங்கள் முன்பு முதல் குழந்தை 9 1/2 மாதத்தில் கொடி சுற்றி வயிற்றிலேயே இறந்துவிட்டது. எவ்வளவு முயன்றும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை .இந்த அதிர்ச்சியிலிருந்து எங்களால் மீள முடியவில்லை.எனவே சில வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டோம்.இப்பொழுது நாங்கள் pregnaacy planning ஏப்ரலில் செய்ய உள்ளோம். என்னுடைய பயம் என்னவென்றால் conceive ஆனால் மறுபடியும் கொடி சுற்ற வாய்ப்பு உள்ளதா?. கொடி சுற்றாமல் இருக்க என்ன வழி?. Plz,, என் சந்தேகத்தை தீர்க்க உதவுங்கள் தோழிகளே!.பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

எனக்கு ரொம்ப நெருங்கின பக்கத்து வீட்டு பெண்ணுக்கு இப்படி ஆனதில் நாங்களே அதிர்ச்சியாகி விட்டோம்.ஆனால் இப்பொழுது அடுத்த குழந்தை அழகாக ஆரோகியமாக பிறந்தது
ஒரு முறை இப்படி ஆனதால் அடுத்த முறை நல்ல கவனிப்பார்கள்..அல்லது விரும்பினால் சிசேரியன் வேண்டி செய்து கொள்ளலாம்.

மிகவும் நன்றி தளிகா.என் பயத்தை போக்கியதற்கு மிக மிக நன்றி.

enaku ungala mathiri deliviery time la vaithukulaya kulantha iranthu pochu.but na 3 months la concieve ai innoru kulantha piranthachu so bayapidathenga ellam nala padiya pirakum.elective ah c section panrenga pa.all the best.

Friends நான் அனு நியாபகம் இருக்கிறதா..
எனக்கு 1 குழந்தை பிறந்து 2 நாட்களில் இறந்து விட்டது .. ஹார்ட் problem ..
1 வருடம் கழித்து conceive ஆனேன் .. பயந்து பயந்து பையன் நல்ல படியாக பிறந்தான் ..2 ம் c section தான்.. பையனுக்கு 3 1 /2 வயதாகிறது...இப்பொது ஒரு பெண் குழந்தை வேணும் என்று ஆசை .. என்னுடைய சந்தேகம் இதுதான் ..
எனக்கு scar tissues இருக்கிறது .. period சமயத்தில் operate பணிய இடத்தில வலி இருக்கும் கடந்த ஒரு வருடமாக..
குழந்தைக்கு 2 மாதங்களாக முயற்சிக்கிறோம் ..இன்னும் ஒன்றும் இல்லை ..முதல் 2 குழந்தைகளுமே முதல் முயற்சியிலேயே கிடைத்தது ...இப்பொது எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது ... அடுத்த குழந்தைக்கு இப்படி late ஆகுமா ...யாருகாவது scar tissues இருந்து conceive ஆகி இருக்கீங்களா ???? அதுனால எதாவது பிரச்சினை வருமா??? தெரிந்தவர்கள் சொன்னால் உதவியாக இருக்கும் ... இதே நினைப்புதான் எப்பவும் எனக்கு :( யாருகாவது 2 vathu குழந்தைக்கு இப்படி conceive ஆக late ஆகியதா??? பதிலுக்காக காத்திருக்கிறேன் ...

@ ராதா : ஒன்றும் பயப்படதீங்க...டாக்டரிடம் எல்லாவறையும் சொல்லுங்கள் ..அவர்கள் எக்ஸ்ட்ரா கேர் எடுத்துப்பாங்க ...

Friends make Life Beautiful !!!

யாராவது பதில் போடுங்கப்பா.. வெயிட் பண்ணிட்டு இருக்கேன் உங்க பதிலுக்காக..
தளிகா , லாவண்யா எங்கே போனீங்க??? வாங்க இங்கே...

Friends make Life Beautiful !!!

radha,இது மூடநம்பிக்கையான்னு தெரியாது,ஆனால் பெரியவர்கள் கர்ப்பிணிகள் தூங்கும்போது ,திரும்பி படுக்கனும்னா எழுந்து உட்கார்ந்து திரும்பி உட்கார்ந்து படுக்க சொல்வாங்க.அப்படியே புரண்டு படுத்தா கொடி சுத்தும்னு சொல்வாங்க.நேரா படுக்காம sidela படுக்க சொல்வாங்க. இதெல்லாம் எவ்வளவு உண்மைன்னு எனக்குத்தெரியாது.பதில் அருசுவை தோழிகள் சொல்வாங்க.ஒரு வேளை இதில் உண்மை இருந்தால் உங்களுக்கு உதவும் என்று கூரினேன்.உங்களுக்கு சீக்கிரம் இறைவன் அருளால் குழந்தை பிறக்கும்.i'll pray god.

hi

ராதா ,
முன்பெல்லாம் கொடி சுத்தினால் கஷ்டம் என்று சொல்லுவார்கள் இப்பொழுது 4D ஸ்கேன் மூலம் கொடி சுற்றிஉள்ளதை கண்டறிய முடியும். எனக்கு தெரிந்து கொடி சுற்றி நிறைய பேர் ஆரோக்கியமான குழந்தைகளை சுக பிரசவத்தில் பெற்றெடுத்து உள்ளார்கள். அனவிசியமாக எதையாவது படித்தோ கேட்டோ இப்போதைக்கு உங்கள் மனதை குழப்பாமல் இருங்கள். கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளிடம் எல்லாவற்றையும் விட்டு விடுங்கள். நல்லதே நடக்கும். உங்களுக்கு சந்தேகம் இருப்பின் உங்கள் மருத்துவரை அணுகி தெளிவு பெறுங்கள்.

அனு
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் எல்லாமே சாத்தியம் தான்.நீங்க இங்க (US) தானே இருக்கீங்க?? எங்க இருக்கீங்க? எதற்கு இவ்வளவு குழப்பம்? ஸ்கார் டிஷுவுடன் கருதரிதவர்கள் ஏராளம். இரண்டு மாதம் தானே ஆகிறது? உங்களுக்கு பயமா இருக்கா உடனே மருத்துவரை பார்த்து அந்த திசு எப்படி இருக்கு எவ்ளோ பெரியதாய் இருக்கு இதனால் கருத்தரிப்பது கடினமா என்று தெரிந்து கொள்ளுங்கள். சீக்கிரமே ஒரு நல்ல செய்தி சொல்ல வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் என்ன சந்தேகம் கேட்டாலும் ஓடோடி வந்து பதில் சொல்றீங்க .. .
நீங்க சொன்னதுக்கு அப்புறம் கொஞ்சம் தைரியம் வந்துருக்கு ..இன்னும் 2 மாதம் வெயிட் பண்ணிட்டு அப்புறம் டாக்டர் பாக்கலாம் என்று நினைத்து இருக்குறோம் ..உங்கள் வாழ்த்துகள் நம்பிக்கையை குடுத்துருக்கு.... ரொம்ப ரொம்ப நன்றி ... கண்ணுல தண்ணி வந்துடுச்சு கூபிடதும் வந்து பதில் சொன்னதுக்கு ...
நான் Dallas , TX இல் இருக்கிறேன் ...

Friends make Life Beautiful !!!

பதில் சொல்ல கூடாதுன்னு ஒண்ணுமே இல்லை. ஒரு இழையை பார்த்து பதில் சொல்வதற்குள் எதாவது வேலை வந்து விடும். பிறகு அதை தேடி பிடித்து பதில் சொல்ல சோம்பேறி தனம் அதான்.....எனக்கு தெரிந்ததை சொன்னேன். ஆறுதல் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதை அழகாக உங்க மனதுக்கு எடுத்துட்டு போனீங்க பாருங்க.....அது உங்களின் பெருந்தன்மையை காட்டுது. சும்மா எதற்கு அழுகை.....கண்ணை தொடைங்க....நான் இங்கே CA வில் இருக்கேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

really feeling gud ...

Friends make Life Beautiful !!!

மேலும் சில பதிவுகள்