மாவு புளிக்க

மாவு புளிக்க என்ன செய்ய வேண்டும்.
இங்கு குளிராக இருபதால் புளிபது இல்லை.Pls help...

உங்களிடம் உள்ள சுவெட்டர்,ஜெர்கின் அல்லது சால்வை ஏதாவது ஒன்றை எடுத்து நீங்கள் மாவு கரைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் நல்லா சுற்றி நல்லா க்ளோஸ்டு கம்போர்டு அல்லது பீரோவில் வைங்க.சீக்கிரம் புளித்துவிடும்.ஆனால் அடிக்கடி திறந்து பார்த்துக்கோங்க.

இன்னொரு முறை காலையில் சீக்கிரம் மாவு அரைத்து வைத்தால் மறுநாள் காலையில் புளித்துவிடும்.

Expectation lead to Disappointment

உங்க கிட்ட கன்வெக்ஷனல்(convectional oven)அவன் இருந்தால்,அதை ஐந்து நிமிடம் 350 டிகிரியில் (bake)ப்ரிஹிட் செய்து ,அவனை அனைத்துவிட்டு மாவை அதனுள் வையுங்கள்.அடுத்த நாள் புளித்து இருக்கும்.

hi

அவர்கள் சொல்வது போல் அவனில் வைக்கலாம். இல்லை நீங்கள் சமையல் செய்யும்போது பக்கத்தில் வைத்து கொண்டு சமைக்கலாம். பிறகு குளிர்சாதன பெட்டி அல்லது ஹீட்டர் மேல் வைக்கலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மாவு அரைத்தவுடன் அவனில் வைப்பது சீக்கிரம் புளிக்க உதவும்.ஒரு முறை மாவு புளித்தவுடன்,அடுத்த முறை புதிதாக மாவு அரைக்கும் போது பழைய புளித்த மாவை சிறிது ஊற்றி கலக்கி வைத்தால் காலையில் நன்கு புளித்துவிடும்.இது நான் வழக்கமாக செய்வது

ஜெயசுதா
"விடா முயற்சிக்கு சொந்தமானது வெற்றி"

மாவு புளிப்பதர்க்காக நானும் அவனில் தான் வைப்பேன் .
ஆனால் ப்ரீ-ஹிட் செய்து வைப்பதற்கு பதிலாக , அவனின் Light-ஐ On செய்து விட்டு ஒரு பொழுது வைத்திருப்பேன் .மிதமான சூட்டில் நம்மூரில் புளிப்பது போல் அடுத்த நாள் புளித்திருக்கும் .

//இன்னொரு முறை காலையில் சீக்கிரம் மாவு அரைத்து வைத்தால் மறுநாள் காலையில் புளித்துவிடும்//.மாவை ஊரவைக்கும் போதே அரிசியை அப்போதே நன்கு கலுவி விட்டு பின்பு ஊரவைக்கவும்.ஊரவைத்த தண்னியை அரைக்க பயன்படுத்தினால் அதுவும் மாவை புளிக்கவைக்க உதவும்.அதே சமயம் மாவை ஆட்டியவுடன் கையால் நன்கு கலக்கி வைக்கவும்.நன்கு புளித்துவிடும்.மாலையில் அரைத்தால் அடுத்த நாள் மாலைக்குள் புளீத்துவிடும்.ஜஸ்ட் ஒரு மூடிய கபோர்டில் வைத்தால் போதும்.

ஹாய்

மாவு அரைத்த பின்பு, மாவு பாத்திரத்தை சற்று சூடான தண்ணீர் நிரம்பிய மற்றொரு பாத்திரத்தின் மேல் வைக்கலாம்.இது இன்னொரு முறை.இதில் மாவு புளித்துவிடும்.

"எல்லாம் நன்மைக்கே"

மாவு புளிக்க அரிசி உழுந்து ஊரவைத்த தண்ணியில் மாவை அரைத்து சிரிது புளித்த மாவை கலந்து உப்பு கலந்து வைக்க

சிறிது ஈஸ்ட் செர்து கலக்கவும். கடைகளில் கிடைக்கும்

நன்றி

பாரதி வெங்கட்

அன்புடன்
பாரதி வெங்கட்

மேலும் சில பதிவுகள்