எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்.இப்போது எனக்கு 65 நாட்கள் ஆகிறது.50 நாளில் நெகடிவ் ரிசல்ட் வந்தது.பாசிடிவ் ரிசல்ட் வருமா? please help me clear my doubt.
எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்.இப்போது எனக்கு 65 நாட்கள் ஆகிறது.50 நாளில் நெகடிவ் ரிசல்ட் வந்தது.பாசிடிவ் ரிசல்ட் வருமா? please help me clear my doubt.
Balavani
கர்ப்பம் இல்லை என்பதால் தான் மருத்துவர் மாதவிலக்காக (அது ஒழுங்காகுவதற்காக) மாத்திரை தர எண்ணியிருக்கிறார். நீங்கள் வேண்டாம் என்றதால் இரத்தப் பரிசோதனை செய்து முடிவு இன்னதுதான் என்று புரிய வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார். நீங்கள் அதையும் செய்யவில்லை. சகோதரி சொன்னது போல், இரண்டு மாதங்கள் ஆன பின்னும் எதிர்பார்த்துக் காலத்தை வீணாக்காமல் எதனால் இன்னும் மாதவிலக்கு தாமதமாகுகிறது, அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில் இப்போதாவது ஒரு தடவை இரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். அதில் இன்று கிடைக்கும் முடிவு, இதற்கு மேல் காத்திருப்பதால் மாறப் போவது இல்லை கண்ணா.
- இமா க்றிஸ்
Tnks to ur Reply sis.
Enku harmone imbalance already iruku sis. I know but date IPadi thalli ponathu ila.sila perukku 5mnth LA kuda theriuma. Adha wait pannitu iruken
Vanitha
Blood test report for pregnancy
Blood test eduthen Mam.. But result negative
Vanitha
Blood test report for pregnancy
Blood test eduthen Mam.. But result negative
Vanitha
Thank u for ur reply sis
Thank u for ur reply sis
Vanitha
Balavani
உங்கள் பெயரை எப்படி எழுதுவது? பாலவாணி! பாலவேணி!
//harmone imbalance already iruku// என்றால் அதற்கு சிகிச்சை எடுக்கிறீர்களா?
//date IPadi thalli ponathu ila.// ஹோர்மோன் இம்பாலன்ஸ் இருப்பதால் தள்ளிப் போகலாம், இதற்கு முன் இப்படி இருந்திருக்க வேண்டும் என்பது இல்லை. //sila perukku 5mnth LA kuda theriuma.// 'தெரியுமாம்' என்கிறீர்கள்! அது வெகு அபூர்வமாக மிகமிகமிகச் சிலருக்குத் தான் அப்படி ஆகும் கண்ணா. கர்ப்பம் என்று அடியோடு தெரியாமலிருந்து குழந்தை பெற்றவர்களும் உலகில் இருக்கிறார்கள்தான். அப்படி எவரோ ஒருவருக்கு நிகழ்வதை வைத்து, அது போல் ஆகும் என்று எண்ணிப் பத்து மாதம் காத்திருந்து பார்ப்பது காலவிரயம் மட்டுமல்ல, தாயின் உடலுக்கும் உள்ளே வளரும் குழந்தைக்கும் முக்கியமான பலது கவனிக்கப்படாமல் விடப்படும் இல்லையா! //Adha wait pannitu iruken// மருத்துவம் இத்தனை முன்னேறிய காலத்திலும், முடிவு எதிர்மாறாகத் தெரிகின்ற போதிலும். இப்படி நம்பிக்கையோடு காத்திருக்கப் போவதாக நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. காத்திருங்கள் ஆனால் ஓரளவுக்கு மேல் வேண்டாம். கொஞ்ச நாட்கள் கழித்து திரும்பவும் மருத்துவரைப் போய்ப் பார்த்து விசாரிக்கலாம். வேறு விதமாக நிச்சயம் செய்து சொல்ல வழி இருக்கிறது. அதன் பின்னும் முடிவு உங்களுக்குச் சாதகமானதாக இராவிட்டால் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டறிந்து அதன்படி நடப்பது புத்திசாலித்தனம் என்பேன்.
- இமா க்றிஸ்
Thank u இமா க்றிஸ்
Nandri thozhi my name Vani.
Vanitha
65 days date
Naan kaathirunthu yemanthu vitten. 65 naalil Maathavidai aagiduchu. Naan naadi paarkkum oruvaridam marunthu vangi sapiten. Avarum karppam tharithu irukirathu endru sonnar.adutha naal IPadi agivittathu. Naan payanam seithathaal ipadi aagivitathu endrum marupadium marunthu Sapida solgiraar. Enaku veruthu poi vittathu. Naan ethuvum saapidavillai Maathavidai athigama aagirathu. Indhu naatkal agirathu Innum nirakavillai. Enaku Kalyanam aagi 4 varudangal aagirathu. Enaku 30 vayasu bayamaga irukirathu. Aanal naan 23 vayathu pen poal olliyaga irupen. En udal nilai Sari illai. Intha maatham karppam tharikka ethavuthu aalosanai sollungal thozigaley
Vanitha
Hi imma Chris
Neengal sonnathu correct Dhan. 65th day date aagiduchu. En udal strength illatha udal. Age 30. Olliya irupen. Harmone imbalance problem iruku. Athai epadi Sari seivathu. Athiga mana ulaichal. Naan job pogiren. System work & full day A/c. Enaku Enna seivathu endru theriyavillai thozhi.
Vanitha
வனிதா
//Naan kaathirunthu yemanthu vitten.// இல்லை சகோதரி, நீங்கள் நிஜத்திற்கு முகம் கொடுக்கப் பயந்தீர்கள்; உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தீர்கள். ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து அதன் பின்னே ஒளிந்துகொண்டீர்கள். அது தவறு இல்லை. இனிமேல் காலம் தாழ்த்த வேண்டாம். முகம் கொடுக்க வேண்டியவற்றுக்கு முகம் கொடுத்தேதான் ஆக வேண்டும். மாதவிலக்கு ஆகாவிட்டால் கர்ப்பமோ அல்லவோ மருத்துவரைப் பாருங்கள்; கட்டாயம் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடவுங்கள்.
நாடி பார்க்கிறவர் மருத்துவர் அல்ல. நீங்கள் பிரசவத்திற்கு மருத்துவமனைக்குத் தான் போயாக வேண்டும். நாடி பார்ப்பவர் பிரசவம் பார்க்க மாட்டார்.
//Avarum karppam tharithu irukirathu endru sonnar.// :-( உண்மையிலேயே என்ன சொல்வது என்று தெரியவில்லை. படித்தவர், வேலைக்குப் போகிறீர்கள் எப்படி இப்படி இருக்கிறீர்கள் என்று வியப்பாக இருக்கிறது. //adutha naal IPadi agivittathu.// அந்த வரையில் நல்லதுதான். இல்லாவிட்டால் எத்தனை மாதம் தாமதம் ஆனாலும் அத்தனை மாத கர்ப்பம் என்று நம்பிக்கொண்டு இருப்பீர்கள். //Naan payanam seithathaal ipadi aagivitathu// இல்லை கண்ணா. நீங்கள் கர்ப்பமாக இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. பயணத்தால் அப்படி ஆகவில்லை. உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். பரிசோதனைகள் எதுவும் நீங்கள் கர்ப்பம் என்று சொல்லவில்லை.
//marupadium marunthu Sapida solgiraar.// உங்கள் இஷ்டம். எனக்கு நஷ்டம் எதுவும் இல்லை. மருந்துக்கு ஒவ்வொரு தடவையும் எவ்வளவு செலவளிக்கிறீர்கள்? (செலவாவது உங்கள் வயது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.) அந்த மனிதருக்கு உங்கள் வீக்னஸ் தெரிகிறது. நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார். :-) நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள். பாதிக்கப் படுவது உங்கள் உடல் & ஆரோக்கியம். ;(
//Maathavidai athigama aagirathu.// இப்போதாவது ஒழுங்காக மருத்துவரைப் போய்ப் பாருங்கள். நாடி பார்ப்பவர் எதைக் கொடுத்தாரோ தெரியாது. அதனால் இரத்தப் போக்கும் அதிகமாக இருக்கலாம். அனீமிக் ஆகிவிடப் போகிறீர்கள். //nnum nirakavillai.// பக்கதுல இருந்தா குட்டீருவேன் உங்களை. இப்பவும்... நான் என்ன சொன்னாலும் நீங்க நினைச்சதைத் தான் செய்யப் போறீங்க. எதுக்கு வீணாக உட்கார்ந்து தட்டீட்டு இருக்கிறேன் என்றுதான் மனசுல ஓடுது. ;((
//Aanal naan 23 vayathu pen poal olliyaga irupen.// :-) 23 வயதுக்கு என்று ஒரு உடற்சுற்றளவு எல்லாம் கிடையாது. :-) உங்கள் உயரத்திற்கு எடை சரியாக இருந்தால் போதும். //En udal nilai Sari illai.// மருத்துவரிடம் போங்க. உங்கள் பிரச்சினை எதுவானாலும் வெளிப்படையாகச் சொல்லுங்க. உடல்நிலை சரியாக வழி சொல்லுவார்.
//Intha maatham karppam tharikka ethavuthu aalosanai sollungal thozigaley// ம்ஹும்! முதலில் இரத்தப் போக்கை நிறுத்த வழி பாருங்கள். பிறகு கர்ப்பத்தைப் பற்றி யோசிக்கலாம்.
//strength illatha udal.// நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி உடற்பயிற்சிகளும் மேற்கொண்டால் இந்த நிலை மாறும். //Age 30// இனிமேல் இப்படி 'நம்புகிறேன்' நம்பிக் காத்திருப்பேன்' என்கிறதை விட்டுவிட்டு நடக்கக் கூடியதா இல்லையா என்பதைச் சிந்தித்து நடவுங்கள். //Olliya irupen.// இதைப் பற்றி எல்லாம் யோசிக்காதீங்க. ஒல்லியானவர்களுக்கும் நோஞ்சான் உடல் இருப்பவர்களுக்கும் குழந்தை கிடைக்காது என்கிறது இல்லை. வயது - நீங்கள் யோசிக்க வேண்டிய விடயம். //Harmone imbalance problem iruku.// என்று எப்படி அறிந்தீர்கள்? அதை அறிந்து சொன்ன மருத்துவர் சிகிச்சை சொல்லவில்லையா? //Athai epadi Sari seivathu.// மருத்துவரிடம் கேளுங்கள். மாதவிலக்கு தாமதமானால் 45 மிஞ்சிப் போனால் மேலும் இரண்டு நாட்கள் பார்க்கலாம். அப்போதும் ஹோம் ப்ரெக்னன்ஸி டெஸ்ட் / இரத்தப் பரிசோதனை முடிவுகள் சாதகமாக இல்லாவிட்டால் மாதவிலக்கு சரியாக சிகிச்சைக்குப் போவது நல்லது.
- இமா க்றிஸ்