ஜில் ஜில் ஜிகர்தண்டா (கடல் பாசி முறை)

தேதி: February 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

1. கடல் பாசி - சிறிது
2. சர்க்கரை - தேவைக்கு
3. பால் - 3 கப்
4. ரோஸ் அல்லது நன்னாரி சிரப் - 1 மேஜைக்கரண்டி
5. ஃப்ரெஷ் க்ரீம் - 1 மேஜைக்கரண்டி [விரும்பினால்]
6. ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப்


 

கடல் பாசியை வழக்கம் போல் தயார் செய்து செட் ஆகும்போது கிளறி விடவும். அப்படி செய்து ஃப்ரிஜில் வைத்தால் தூள் தூளாக வரும், நறுக்கும் வேலை இருக்காது. இதை ஃப்ரிஜில் வைக்கவும்.
பாலை நன்றாக காய்சவும். 2 கப் பால் 1 கப் ஆக வேண்டும்.
இந்த பாலில் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் ஃப்ரிஜில் சில மணி நேரம் வைக்கவும்.
ஒரு கப்பில் கடல் பாசி 1 மேஜைக்கரண்டி போடவும்.
அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றவும்.
மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
இதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.


கடல் பாசியில் ரோஸ் சிரப் சேர்த்து செய்தும் சேர்க்கலாம். விரும்பினால் ஜவ்வரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து சேர்க்கலாம். முந்திரி பாதாம் போன்றவை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். இன்னும் சுவை கூடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனி இந்த மாதிரி செய்ததில்லை வாழ்த்துக்கள்

பாத்திமா... மிக்க நன்றி. பாதாம் பிசின் கிடைக்காத நேரத்தில் இப்படியும் செய்யலாம். ரொம்ப வித்தியாசம் வராது. ட்ரை பண்னி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க குறிப்பா இது நான் யாரோ புதுஆள்ன்னு நினைத்தேன் ..
சூப்பர் செய்முறையை பார்த்தாலே குடிக்கனும்ன்னு தோனுது
குளிர் போனதும் கண்டிப்பாக செய்துவிடுகிறேன்...வாழ்த்துக்கள்

வாழு, வாழவிடு..

ருக்சனா... மிக்க நன்றி. வனிவசு நானே தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கடல் பாசியை வழக்கம் போல் தயார் செய்து செட் ஆகும்போது கிளறி விடவும். ///////எப்படிக்கா வழக்கம் போல செட் செய்வது ?? தயை செய்து விளக்கவும்

சாரிங்க ரொம்ப லேட்டா பார்க்கிறேன்... :(

கடல் பாசியை நீரில் போட்டு சூடு பண்ணி கரைய வைக்கவும். கரைச்சதும் வடிகட்டி தட்டில் ஊற்றி வைத்தால் ஆற ஆற செட் ஆகிடும். அறுசுவையில் கடல் பாசி குறிப்புகள் பாருங்க... செய்முறை படங்களோடு இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா