ஜில் ஜில் ஜிகர்தண்டா (பாதாம் பிசின் முறை)

தேதி: February 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

1. பாதாம் பிசின் - 1/4 தேக்கரண்டி [நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்]
2. சர்க்கரை - தேவைக்கு
3. பால் - 3 கப்
4. நன்னாரி சிரப் - 1 மேஜைக்கரண்டி
5. ஃப்ரெஷ் க்ரீம் - 1 மேஜைக்கரண்டி [விரும்பினால்]
6. ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப்


 

பாதாம் பிசினை நன்றாக கழுவி நீர் 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் ஜெல்லி போல் வரும்.
பாலை திக்காக காய்ச்சவும். இதை சர்க்கரை சேர்த்து கரைந்ததும் ஃபிரிஜில் வைக்கவும்.
கப்பில் ஊறிய பாதாம் பிசின் போட்டு அதன் மேல் நன்னாரி சிரப் ஊற்றவும்.
விரும்பினால் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து மேலே பால் ஊற்றவும்.
இதன் மேல் ஐஸ்க்ரீம் வைத்து கொடுக்கவும்.


விரும்பினால் ஜவ்வரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து சேர்க்கலாம். முந்திரி பாதாம் போன்றவை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். இன்னும் சுவை கூடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனி நானும் இப்படித்தான் செய்வேன் ஐஸ்கீரீம் சேர்க்க மாட்டேன்வாழ்த்துக்கள்
(வனி எத்தனை பெயரில் குறிப்பு குடுக்குறீங்க சொல்லுங்கள் : VaniVasu இதுயாரு?

பாத்திமா... மிக்க நன்றி. நான் அறுசுவையில் சேர்ந்ததில் இருந்து இதே பெயரில் தான் குறிப்புகள் கொடுக்கிறேன். விளக்கப்பட குறிப்பு, கைவினை குறிப்புகள் மட்டுமே என் முழு பெயரில் வரும். :) வசு என் தங்கை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரான குறிப்பு,என்னோட பேவரைட்.பாதாம்பிசின் தான் நல்ல டேஸ்டா இருக்கும்.

ரீம்... ரொம்ப ரொம்ப நன்றி. :) எனக்கும் இது ஃபேவரட். அதான் விடாம பல விதமா முயற்சி செய்து கண்டு பிடிச்சுட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதாம்பிசின் ஊரிலிருந்துதான் வரவழைக்கனும் வந்ததும் செய்கிறேன் எனக்கு இப்பவே குடிக்கனும் போல் இருக்கு ஒரு கப் கொடுங்களேன்..ஓட்டும் போட்டுவிட்டேன் வாழ்த்துக்கள்

வாழு, வாழவிடு..

அட! வனிவாசுவும் நீங்க தானா! இன்னிக்கு தான் தெரியுது. அருமையான குறிப்பு.

ஹலீமா

அன்புடன்,
ஹலீமா

ருக்சனா... மிக்க நன்றி. வர வெச்சுடலாம்... எந்த ஊருக்கு வேணும்???

ஹலீமா... முதல்ல இருந்து "வனிவசு" இந்த பெயரில் தான் குறிப்பு கொடுக்கிறேன். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா