மசித்த இடியாப்பம்

தேதி: February 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (6 votes)

 

உதிர்த்த இடியாப்பம் - 10
முட்டை - 2
ஏலக்காய் - 3
சீனி - 5 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.
முட்டையை நன்கு தனித்தனியாகும்படி கிளறி விடவும்.
பிறகு உதிர்த்த இடியாப்பத்தை முட்டையில் போட்டு கிளறவும்.
அதில் ஏலக்காயை விரலால் அழுத்தி விட்டு போடவும். பின் சீனியை சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியாக பன்னீர் சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சுவையான மசித்த இடியாப்பம் ரெடி. இடியாப்பம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்துக் கொடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான ரெசிபி

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சலாம் ஹசீனா...நலமா...?
எங்கள் வீட்டின் ஃபேவரட் இது.
மிகவும் நல்லா இருக்கும் இல்ல.
என்ன இதில் கொஞ்சம் முந்திரியும் உடைத்து சேர்ப்போம்.
அதான் வித்தியாசம்.
வாழ்த்துக்கள் ஹசீனா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு எனது நன்றியை
தெரிவிதுக் கொள்கிறேன்.

ஹசீன்

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா...........

ஹசீன்

வஸ்ஸலாம்....நான் நலம்..நீங்கள் நலமா....

ரொம்ப நல்லா இருக்கும் அப்ஸரா....
தெரிந்ததாக இருந்தாலும் வந்து கருத்து தெரிவிப்பது தான் அப்ஸரா..
நன்றிமா.......

ஹசீன்

நலமா ஹசீன் ஹனூனாகுட்டி நலமா?
நல்ல எளிமையான விரைவில் செய்துவிடக்கூடிய ரெசிபிதான்
வாழ்த்துக்கள் ஹசீன் ..மேலும் குறிப்புகள் கொடுத்து விரைவில் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

சலாம் ஹசினா லுலுகுட்டி எப்படி இருக்கிறாள்?
ஈசியான குறிப்பு வாழ்த்துக்கள்டா

aslm alkm.nalla recipe.pasanga virumbi chapiduvanga.ungalai patti therinchukalama?ennoda best frnd name haseena.neenga enga irukinga?

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி ருக்ஸ்.....

ஹசீன்

வஸ்ஸலாம் மா.குட்டிமா நல்லா இருக்கிறாள்...........
வாழ்த்துக்கு நன்றிமா

ஹசீன்

வலைகும் சலாம்...நலமா ஃபஸீனா....அரட்டைப் பகுதிக்கு
வாங்களேன்.....நாம் பேசலாம்.நான் jeddah வில் இருக்கிறேன்.
ரொம்ப நன்றிமா...

ஹசீன்

nalam.neenga nalama,arattai pahuthiku eppothu vara vendum.epdi?sollunga.