இறால் கலியான்

தேதி: February 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (8 votes)

 

வறுத்த இறால் - 15
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
வெங்காயம் சிறியது - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
தேங்காய் துண்டுகள் -5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, வெங்காயம் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
கடைசியில் இறாலை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக அரைப்பட்டவுடன் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த கலவையில் சிறிது எடுத்து கைகளால் தட்டி போட்டு பொரிக்கவும். சிறிது நேரம் கழித்து மெதுவாக திருப்பி போட வேண்டும்.
சுவையான இறால் கலியான் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இறால் மசாலா தான் செய்வேன்,இப்படி செஞ்சதில்லை சீக்கரமே செய்றேன்.வாழ்த்துக்கள்.

ஹசினா வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள்

சலாம் ஹசீனா...,நலமாக இருக்கின்றீர்களா...?
இறால் கலியான் பார்க்கும் போதே ஆசையை தூண்டும் வண்ணம் உள்ளது.
நீங்கள் செய்யும் முறை வித்தியாசமாக உள்ளது.
விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன்.
வாழ்த்துக்கள் ஹசீனா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நலமா ஹசீன்? அடடா என்ன சூப்பராக இருக்கு எனக்கு எப்ப??? இறால் கலியான்..
பெயரும் வித்தியாசமாக இருக்கு வாழ்த்துக்கள் ஹசீன் .நன்றி

வாழு, வாழவிடு..

ஹசீனா

சத்தான நல்ல குறிப்பு.. வாழ்த்துக்கள்.. அழகா பிரசன்ஸ் செய்து இருக்கிங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இறால் கலியான் பார்க்கும் போதே ஆசையை தூண்டும் வண்ணம் உள்ளது.
விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன்.

hi

hai lulu,
nanga itha unda kaliyandu solvom nanga muttai serpom .

Raihana

சலாம் ஃபிர்தௌஸ்!நாங்களும் இதை உண்ட கலியான்னுதான் சொல்வோம்,ரொம்ப நல்லா இருக்கும்,நானும் முட்டை சேர்த்து தான் செய்வேன்,இதே முறையில் அரைத்த இறைச்சி,டின் மீனிலும் செய்வேன்.

Eat healthy

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு
நன்றி...........

ஹசீன்

ஹசீனா வித்தியாசமான குறிப்பு, பெயரும் வித்தியாசமாக இருக்கு வாழ்த்துக்கள் ஹசீனா...

ஹாய் ரீம்..
இறால் மசாலா செய்து அனுப்புங்களேன்....
பார்க்கலாம்.நன்றி ரீம்...

ஹசீன்

ஹாய் மா,
உங்க வருகைக்கும் வாழ்த்துகும்
ரொம்ப நன்றிமா....

ஹசீன்

வஸ்ஸலாம் அப்சரா...நாங்கள் நலம்.
நீங்கள் குட்டிஸ் நலமா.
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அப்சரா...

ஹசீன்

ருக்சானா அஃப்ரா நலமா?
உங்க அன்பு வாழ்த்துக்கு நன்றி......

ஹசீன்

ஹாய் ரம்ஸ்..நலமா..
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா...

ஹசீன்

ஹாய் நலமா..
உங்க பதிவிற்க்கு ரொம்ப
நன்றிமா

ஹசீன்

ஹைய் ரைஹானா & ரசியா நலமா...
நாங்களும் அப்படித் தான் சொல்லுவோம்.
சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று
போட்டேன்....முட்டை நான் சேர்ப்பதில்லை...
நன்றி....

ஹசீன்

ஹாய் சுமதி எப்படி இருக்கீங்க....
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா...

ஹசீன்

ஹசீனா வித்தியாசமான குறிப்பு, பெயரும் வித்தியாசமாக இருக்கு வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

rasiya latha,
yenakku oru doubht neenga karaikala

Raihana

ஸ்வர்ணா உங்க
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா...

ஹசீன்