பட்டிமன்றம் ௩௬ - இந்தியாவின் சுய அடையாளம்

உலகில் பழமை வாய்ந்த கலாச்சாரங்களில் இந்தியர்கள் கலாச்சாரமும் ஒன்று. இன்றும் நமது அடையாளங்களை உலகத்து நாடுகள் புகழ்கின்றனர். பல பல சமூகத்தினர் இங்கு இருந்தாலும் இந்தியாவின் சுய அடையாளம் என்று பொதுவாக சில விஷயங்கள் உள்ளது. ஆனால் கலாச்சார சீர்கேடு எனும் வார்த்தை தமிழில் இப்பொழுது பரவலாக உபயோகிக்கபடுகிறது. இன்றைய சூழலில் வயது வித்தியாசம் இல்லாமல் மேற்கத்திய கலாச்சாரம் தனது பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஹரப்பா நாகரீகம், மொஹெஞ்சதாரோ நாகரீகம் போல் இந்திய நாகரீகம் என வருங்கால வரலாறு புத்தகங்கள் கூறுமா?? இல்லை என்றும் அழியா பெருவாழ்வை நம் இந்திய கலாச்சாரம் அடையுமா?? முன்பு இருந்த நமது அடையாளங்களை நாம் இன்னும் பேனுகிறோமா?? அல்லது அதில் தொய்வு ஏற்பட்டுள்ளதா?? போன்ற பல கேள்விகள் உங்களுள் பலருக்கு இருக்கலாம். அதை எல்லாம் பேசி தீர்க்கலாம் வாங்க. அதற்குதான் இந்த தலைப்பு.

இந்தியாவின் சுய அடையாளம் காக்கப் படுகிறதா? மறக்கப் படுகிறதா?
___________________________________________________________________

தலைப்பை வழங்கிய சாந்தினிக்கு நன்றி. தோழர் தோழியர் ஆவலுடன் பங்கேற்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். நடுவரை சரியான வாதங்களை கொடுத்து எந்த அனியினர் அசத்துகின்றார்களோ பார்க்கலாம் :)

புதியவர்களுக்காக பட்டியின் விதிமுறைகளின் குட்டிச்சுருக்கம்:
- யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
- எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
___________________________________________________________
- பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
___________________________________________________________________________
- நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். (கிழே எழுத்துதவி இருக்கிறது)
- அரட்டை... நிச்சயம் கூடாது.
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் இருக்கலாம், வாதங்கள் கூடாது.
- அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

நடுவரே உங்களுக்கு என அன்பான வணக்கத்தை தெரிவித்து கொண்டு சீக்கிரமே வாதாட வருகிறேன் சொல்லி விடைப்பெறுகிறேன்

வாழு இல்லை வாழவிடு

சுமி முதலில் பதிவிட்டு இருக்குறீர்கள், நன்றி. வாதங்களுடன் சீக்கிரம் வாருங்கள். நடுவர் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன்.

இதுவும் கடந்து போகும்.

நடுவரே

வாழ்த்துக்கள்.. தக்க சமயத்தில் பட்டியை துவங்கியதற்கு.. நல்ல தலைப்பு.. அணியை முடிவு செய்து வருகிறேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்கள் வாதங்களை படிக்க எனக்கும் ஆவலாக இருக்கிறது. சீக்கிரம் வாருங்கள் :)

இதுவும் கடந்து போகும்.

நடுவருக்கு வணக்கம், அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளிர்கள்.
நம்முடைய இந்திய கலச்சாரம் காக்கப்படுகிறது என்ற அணிக்காக வாதிட விரும்புகிறேன்.வாதங்களுடன் மீண்டும் வருகிறேன்.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

வாங்க பிரபா, காக்கப்படுகிறது அணியை துவக்கிட்டீங்க. நல்ல ஸ்ட்ராங்கான வாதங்களுடன் வாங்க பார்ப்போம் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு நடுவருக்கு வணக்கம் நல்லதொரு தலைப்பு வாழ்த்துக்கள். சீக்கரமே எனது அணியை தேர்வு செய்து வாதத்தோடு வருகிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

பட்டியின் நடுவர் யோக அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்;))
நல்ல தலைப்பை கொடுத்த சாந்தினி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டு செல்கிரேன். வெற்றி பெற போகும் அணியை தேர்தெடுத்து வாதங்களோடு வருகிரேன் ;)

உன்னை போல பிறரையும் நேசி.

நடுவரே வணக்கத்தை தெரிவித்து கொண்டு சீக்கிரமே வாதாட வருகிறேன் என்று
சொல்லி விடைப்பெறுகிறேன்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நல்ல அருமையான தலைப்புதான் சாந்தினி அவர்கள் கொடுத்துள்ளார்கள் .
அதை தேர்ந்தெடுத்த நடுவருக்கு என் வாழ்த்துக்கள்....

எனதணியை நான் முடிவு செய்துவிட்டேன் நடுவரே..

இந்தியாவின் சுய அடையாளம் காக்கப்படுகிறது என்ற அணியில் நான் வாதிடுகிறேன் ....

இந்தியாவின் கலாச்சாரத்தில் அயல்நாட்டு மக்கள் வியந்து பார்க்கும் ஒன்று.
நமது ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண பந்தம்தான் .
இது நம்நாட்டிர்க்கு பெருமைஅல்லவா இதில் நம் கலாச்சாரம் இன்னும் அழியவில்லை நடுவரே..காக்கத்தான் படுகிறது..

மற்றும் ஒரு பண்டிகை என்றால் கிராமம்தான் நினைவிர்க்கு வரும்.
அதுபோல் கிராமத்தில் கொண்டாடும் பண்டிகைகளுக்கு என்று
தனி மவுசு உண்டு ..அந்த நாட்களில் அவரவர் தத்தமது ஊர்களுக்கு
சென்றுதான் பண்டிகை கொண்டாடுகிறார்கள் .கலாச்சாரத்தை யாரும்
மறக்கவில்லை நடுவரே ...மீண்டும் வருகிறேன்..

வாழு, வாழவிடு..

மேலும் சில பதிவுகள்