உடனடியாக பதில் தேவை

ஹாய் தோழிஸ் எல்லாரும் எப்படீ இருக்கீங்க நான் ரொம்ப நாளா அருசுவைக்கு வரல பா
இப்போ நான் சென்னைல இருக்கேன் இந்த மாதம் 11 பஹ்ரைன் வரலாம்னு இருக்கேன் அங்க இப்போ
நிலமை எப்படி இருக்கு நான் என்னோட 2 பசங்களையும் கூட்டீட்டு தனியாதான் வரனும் பெரிய பொண்ணுக்கு 2
வயது சின்னவலுக்கு 6 மாதம் என்னோட சந்தேகம் எல்லாம் தனியா ரெண்டு கொழந்தைய கூட்டிட்டு வர முடியுமா
யருக்காவது இந்த அனுபவம் இருக்கா இல்லனா வேர வழி இருக்கா என் husbendala வரமுடியாத நிலைமை
வுதவுங்கள்

தோழி .ஆறுமாதக்குழந்தையும் உண்டெண்பதால் சிறிது சிரமம் தான்.எயார்போட் உள்ளேயும் சில நேரம் உதவி கிடைக்கும். அவர்களது சிறியரக வாகனத்தில் கொண்டுவிடுவார்கள். விமானத்திற்குள்ளேயும். எயார் ஹொஸ்டஸ் உதவி செய்வார்கள் பயணப்பொதிக்ள் அதிகம் என்றால் சிரமமாக இருக்கலாம்.
இப்படிக்குப் பூங்காற்று

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இங்கு ஏகப்பட்டவங்க இப்படி ஹான் தனியா குழந்தைகளை குட்டிட்டு வருகிறோம்..கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் முன்னமே எல்லாத்தையும் யோசிச்சு வச்சுகிட்டா ப்ரச்சனை இல்லை..அதுவும் நாமெல்லாம் ஷட்டிள் சர்வீஸ் தானே பெரிசா ப்ரச்சனை இல்லை.
முன்னமே எல்லாத்தையும் குழம்பாம எடுத்து வச்சுக்கனும்..முதலில் கைய்யில் பிடிக்கும் ஹேன்ட் பேக் எது என்று தீர்மானிக்கனும்...அதில் 8 கிலோ என்றால் 8 கிலோ நிறப்பனும் என்று நினைக்காமல் குழந்தைகளுக்கானதை மட்டும் எடுத்துக்கலாம்.
தேவைக்கு சின்னதுக்கு டயபர்,வைப்ஸ்,டிஷ்யூஸ்,தண்ணி,பால் பொடி,பாட்டில்.பெரிய குழந்தைக்காக சீக்கிரம் சாப்பிடக் கூடிய பிஸ்கட் கேக் அது மாதிரி எதுவாவது வச்சுக்கலாம்..சுடு நீர் எல்லாம் ப்லேனில் கேட்டால் தருவார்கள்...ஃபீடிங் பாட்டில் பழக்கம் இருந்தால் முக்கால் பாகம் நல்ல தண்ணீரை நாமும் மீதம் சுடு நீரை அவர்களிடமும் நிரப்ப சொன்னால் சரியாக இருக்கும்.
எல்லாத்தையும் திருஇ வைக்காமல் இன்னின்னது இன்ன இடத்தில் என்று சரியாக வைக்கவும்..தேவைக்கு அதிகமாக பொருள் சுமக்க வேண்டாம்..முடிந்தால் அதற்கு தகுந்த பேக் பேக் வாங்கி முதுகில் போட்டுக்கலாம்.
இரவு பயனம் என்றால் குழந்தைகள் தூங்கிவிடும் பெரிசா சிரமம் இல்லை..குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாத போது பயனம் செய்வதை தவிர்க்கலாம்..கைய்யில் குழந்தைகளுக்கு விருப்பமான ஒன்றிரண்டு டாய்ஸோ புக்ஸோ வச்சுக்கலாம்.

Have a safe n happy journey

ரொம்ப நன்றி தாளிகா,பூங்காற்று தாளிகா நான் உங்க பதிவுகள் குறிப்புகள் எல்லாம் படிச்சி இருக்கேன் நீங்கலும்
gulfnu நினைக்கிரேன் உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.நான் luggege ரொம்ப எடுத்துட்டு வரல கைல பசங்களுக்கு தேவையானது
மட்டுமே கொண்டு வருவேன்.என் பயம் எல்லாம் நைட்ல என் பெரிய பொன்னு தூங்கிடுவா நடக்க மாட்டா சீட்ல ஒக்கார மாட்டா நான் ரெண்டு பேரையும் தூக்க முடியாது நான் எப்படி சமலிக்க பொரேனு பயமா இருக்கு

பல முறை நான் தனியா வந்திருக்கேன்..நல்லா படுத்தியும் இருக்காங்க;-)
ஆனா போன முறை எனக்கு எந்த பயமும் இருக்கல..ஏன்னா என்ன தான் ஆட்டம் போட்டாலும் சஹிக்கிறதுன்னு முடிவோட இருந்தேன்..யார்கிட்டயும் உதவி கேட்க தயங்க கூடாதுன்னு முடிவு செய்து அந்த ப்லேனில் இருந்த அத்தனை பேரும் என் இரண்டு பிள்ளைகளையும் சமாளிக்க கஷ்டப்பட்டார்கள்:-)..இரண்டும் இரண்டு திசையில் ஓடும்..இருந்தாலும் ஜாலியா இருந்தேன்.....நமக்கு மனசில் அடுத்தவங்களும் கஷ்டப்படுவாங்களோ என்பது தான் பயமே..அதை விட்டு தள்ளுங்க.
எனக்கு தெரிந்த நண்பி நாலு குழந்தைகள் எல்லாம் 1 அல்லது 1.5 வயது வித்தியாசம்..கனடாவுக்கே போய்ய்ட்டு வரும் தனியா.எப்படிங்க சமாளிச்சீங்கன்னு கேட்டேன் "இப்ப ரொம்ப கூடினால் என்னத்த ஆக போகுது எப்படியும் போய் சேர தான் போகிறேன்னு நெனச்சு தைரியமா இருந்துட்டேன்"ன்னு சொல்வாங்க
தைரிய்மா போங்க எல்லாரும் ஹெல்ப் பண்ணுவாங்க..ஏர் ஹாஸ்டெஸை எந்த ஒரு உதவிக்கும் கூப்பிடலாம்

ஹாய் ராதிகா,
எப்படி இருக்கீங்க?நான் பஹ்ரன்ல தான் இருக்கேன்,உங்களுக்கு ஞாபகம் இருக்கா?உங்களுக்கு காதுல வலி இருந்தப்ப பதில் சொன்னேனே.இங்க ப்ராப்ளம் அவ்வளவா இல்லை,பயப்படாம வாங்க.நீங்க பிளைட்டில் வரும்போது,பேபி வாக்கர் கொண்டு வந்தீங்கன்ன,உங்க சின்ன குழந்தையை அதில வச்சிகிட்டே தள்ளிட்டு பெரிய பொண்ணை கையிலையோ இல்லை நடக்க வச்சோ கூட்டிடு வரலாம்.ஏர்போட்டில் ஹெல்ப் கிடைக்கும்..நீங்க ஹெல்ப் கேட்டா செய்வாங்க.

ராதிகா மேலும் எனக்கு சின்ன ஹெல்ப் பண்ணனும்,எனக்கு மல்லிபொடி தீர்ந்து போச்சு,என்னோட அம்மா ஆகஸ்ட்ல தான் இங்க வருவாங்க,எனக்கு 1 பாக்கெட் சக்தி மல்லிபொடி,பாக்கெட் சக்தி சாம்பார் பொடி,பாக்கெட் சக்தி புளிகுழம்பு,பாக்கெட் சக்தி வற்றல் குழம்பு பொடி மட்டும் வாங்கிட்டு வர முடியுமா?என்கிட்ட வேற மல்லிபொடி இல்லைப்பா.பிளீஸ் இந்த ஹெல்ப் மட்டும் பண்ண முடியுமா?சோனியா என்னோட பிரண்ட் தான் அவங்க கிட்ட குடுதுட்டீங்கன்னா,நான் வாங்கிகிறேன்,ஹெல்ப் பண்ண முடியுமா?

hai kuttireyma,
onnum payapadatheenga ungalta baby carrying bag irukka? irunthal sinna kulanthaiyai mela katikonga. periya kulanthaiyai baby vandi irukka inthal periya kulathaiyai athula vachi thallikonga.yethuvum sari varavillai yendral anga ulla securityta help kelunga. tention vendam porumaiya 2 hours mundiye airport ulla podunga relax yellan seyyalam . nalla padiya urukku ponga.take care god will be with u

Raihana

ஹாய் ராதிகா எப்படி இருகிங்க. ரேயா சனா எப்படி இருக்காங்க. பஹ்ரைன் இப்போது நல்லா இருக்கு. சோ பயப்படாமல் வரலாம். கொஞ்சம் சிரமம் தான் பா. 2பேரையும் கூட்டிடு வரது. பார்த்து பத்ரமா வாங்க. ஏர்போர்ட் ல சனா வ யார் கிட்டையாவது கொடுத்தா கண்டிப்பா வைத்து கொள்ளுவாங்க. சோ நீங்க யார்கிட்டையாவது உதவி கேளுங்க ஓகேவா. ஆனால் ரேயாவ நீங்க பார்த்து கொள்ளுங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்