தேதி: March 2, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோழி துண்டுகள் - 4 (எலும்பில்லாதது)
ப்ரட் ஸ்லைஸ் - 16
உருளைக்கிழங்கு - மீடியமாக 2
கேரட் - கால் பகுதி
வெங்காயம் - இரண்டு
பச்சைமிளகாய் - மூன்று
இஞ்சி, பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி
சோம்புத் தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லிதழை - சிறிதளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க
கோழி துண்டுகளை சிறிது மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேக வைத்து உதிர்த்து கொள்ளவும். அதே போல் உருளை, கேரட்டையும் வேக வைத்து நன்கு மசித்து வைத்து கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், உதிர்த்து வைத்திருக்கும் கோழிகளை போட்டு ஒரு வதக்கு வதக்கி விட்டு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து அரை தேக்கரண்டி உப்பும் போட்டு நன்கு வதக்கவும்.

வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு மசித்து வைத்திருக்கும் உருளை, கேரட்டை சேர்த்து நன்கு ஒன்று சேர கிளறி சூடேறி ஒன்றாக கலந்ததும் உப்பு சரி பார்த்து விட்டு இறக்கி ஆற விடவும்.

ஆறியவைகளை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்துக் கொள்ளவும்.

ஒரு ப்ரட் ஸ்லைஸை எடுத்து கொண்டு ஓரங்களை லேசாக நீக்கி விட்டு தண்ணீரை எல்லா இடங்களிலும் தெளித்து விட்டு நன்கு உள்ளங்கையால் எல்லா பக்கமும் அழுத்தி விடவும். பின்பு அதன் நடுவே ஒரு உருண்டையை வைத்து பிரட்டை கொண்டு மூடி உள்ளடம் வெளியே தெரியாதவாறு உருண்டை செய்யவும். ப்ரட் ஈர பதம் இருந்தால் தான் நன்கு உருண்டை பிடிக்க முடியும்.

இப்படியே எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு வந்ததும் உருண்டைகளை இரண்டு மூன்றாக போட்டு மிதமான தீயிலேயே பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

மிகவும் சுவையான ப்ரட், சிக்கன் போண்டா ரெடி.

இதை எண்ணெயில் பொரித்தெடுக்க விரும்பாதவர்கள் இந்த உள்ளடத்தை ப்ரட்டின் உள்ளே பரவலாக வைத்து மூடவும்.

சாண்ட்விச் போல டோஸ்ட் செய்து சாப்பிடலாம் அதுவும் மிகவும் நன்றாக இருக்கும். சுவையான ப்ரட் சிக்கன் சாண்ட்விச் தயார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும்படி இதன் சுவை இருக்கும். விருந்தாளிகளுக்கு உபசரிக்க இந்த போண்டா மிகவும் ஏற்றதாக இருக்கும். உருண்டையை செய்து வைத்து கொண்டால் அவர்கள் வந்ததும் சுட சுட பொரிதெடுத்து சீக்கிரமே பரிமாறலாம்.
Comments
அப்சரா
சூப்பரான போண்டா,அழகா செஞ்சு இருக்கீங்க வாழ்த்துக்கள்.
அப்சரா
யம்மி :)) :)) எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க? மிக மிக அருமை.... பாத்தாலே டேஸ்ட் நல்லா இருக்கும் ன்னு தோணுது.. இந்த வாரம் பண்ணீட்டு சொல்றேன்.. வாழ்த்துக்கள்
ஸ்டாரும் தந்தாச்சு, விருப்ப பட்டியல்ல சேர்த்தாச்சு
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
hai appufar, oru 10
hai appufar,
oru 10 nimisham mundaithan evening tiffen yenna pannurathu breadlannu yoshichkittu irunthen paravaillai neenga bread bonda kamichitteenga inakki odane saithu viduven romba tankx
Raihana
நன்றி அட்மின்,ரீம்
எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு முதலில் எனது நன்றினை தெரிவித்துக் கொள்கிறேன்.
சலாம் ரீம்... முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மா..
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி சுகந்தி,
ஹாய் சுகந்தி நலமா..?
டேஸ்ட் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் இருக்கும்.
முடிந்த போது செய்து சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க ...
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுகந்தி.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி ஃபிர்தவ்ஸ்
ஹாய் ஃபிர்தவ்ஸ்...,
மாலை சிற்றூண்டிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
செய்து சுவைத்து விட்டு வந்து சொல்லுங்க சரியா...?
நன்றி ஃபிர்தவ்ஸ்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
appufar, enakku doubht enakku
appufar,
enakku doubht enakku neenga ippa anupuneengalla bathil atha nan yeppadi vera yarum enakku anuppum bathila nan yeppadi pakurathu pls sollungalen
Raihana
ஃபிர்தவ்ஸ்
ஃபிர்தவ்ஸ்..., யாரிடம் எந்த குறிப்பின் கீழ் பதிவு போட்டீங்களோ அங்கே தான் போய் பார்த்தாக வேண்டும் வேற வழியே இல்லை.எங்கெல்லாம் நீங்க போய் பதிவு போட்டு வந்தீங்களோ அதற்க்கு பதில் வந்திருக்கான்னு மீண்டும் அந்த பதிவுக்கே போய் பாருங்க...
மன்ற சம்பத்தபட்டதாக இருந்தால்,மன்றத்திற்க்கு போய் அதில் இருக்கும் தலைப்புகளில் எந்த சம்பந்தமாக பேசினோம் என்று யோசித்து அதை க்ளிக் செய்தால் பல தலைப்புகள் வரும் அப்படிதான் போய் பார்க்கலாம்.
சொன்னது ஏதும் புரிந்ததா?????
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
appufar, romba nandri
appufar,
romba nandri apufar aana enakku tamil than type panna vara matenguthu nan download panitten aana athai ubayogigum murai than koncham kashtama irukku
Raihana
அப்சரா
சலாம் அப்சரா,நலமா?
ம்ம்ம்...பார்கும் போதே சாப்பிட தூண்டுகிறது படங்கள்..
ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க...
வாழ்த்துகள்.........
ஹசீன்
வாவ்
வாவ்
எனக்கு இப்பவே வேணும் ;(
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
சூப்பர் ரெஸிப்பி அப்சரா!
சூப்பர் ரெஸிப்பி அப்சரா! பார்க்கவே ரொம்ப டெம்டிங்கா இருக்கு! :)
இதேப்போல நான் வெறும் உருளைக்கிழங்கை வைத்து மசாலா செய்து ப்ரட்டில் வைத்து சான்விட்ச் மேக்கரில் டோஸ்ட் செய்ததுண்டு. ஆனால் இது சிக்கனும் கூட சேர்த்து, அப்புறம் இந்த ப்ரட்டிலே போண்டா உருட்டி செய்த விதம் சூப்பர்! பாராட்டுக்கள் அப்சரா!!. நான் கட்டாயம் செய்து பார்க்கிறேன். (குறிப்பை விருப்பப் பட்டியலில் போட்டாச்சு!:))
அன்புடன்
சுஸ்ரீ
அப்சரா சூப்பர். நான் செய்து
அப்சரா சூப்பர். நான் செய்து விட்டு சொல்கிறேன். வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
அப்சரா
பார்க்கவே நாக்கு உருது. ரொம்ப அருமையா இருக்கும்னு நினைக்கிறேன். செய்துவிட்டு சொல்கிறேன்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
சலாம் அப்சரா அக்கா .. !!
சலாம் அப்சரா அக்கா .. நலமா ? அண்ணன் மற்றும் குழந்தைகள் நலமா ..?? ப்ரெட் போண்டா சூப்பரான ரெசிபி .. விரைவில் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் . வாழ்த்துக்கள் அக்கா ..!!!
Express Yourself .....
அப்சரா
சலாம் அப்சரா வீட்டில் அனைவரும் நலமா?
கலக்கலா இருக்கு விருப்ப பட்டியில் சேர்த்தாச்சு வாழ்த்துக்கள்மா
ஹாய் அப்சரா
ஹாய் அப்சரா அஸ்ஸலாமு அழைக்கும் நலமா ? சூப்பரா இருக்குபா வாழ்த்துக்கள் விருப்ப பட்டியில் சேர்த்தாச்சு
அப்சரா
உங்களோட பிரட் போண்டா சூப்பர்.
என் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தது இல்லை,அண்ணல் 4 மாதமாக பருக்கள் இருக்கிறது,இப்பொழுது பருக்கள் போக ஆரம்பித்ததும் பனி நாளில் வருவது போல் முகத்தில் தோல் உரிகிறது,இதை எப்பட சரி செய்வது சொல்லுங்கள்....
அப்சரா
ஹாய் அப்சரா நலமா ? சூப்பரா இருக்குபா வாழ்த்துக்கள்......
அப்சரா
அருமையாக இருக்கு.உருண்டையாக போடாமல் கட்லெட் மாதிரி தட்டியும் போட்டால் ஒவல்,ஹாட் சேப்பில் அழகாக இருக்கும்.ப்ரெட் நடுவே வைத்து சாண்ட்விச் சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
Assalamualaikum Appufar,
Assalamualaikum Appufar,
chicken bread bonda netru saithu parthen allhamthullillah super kids roma virumbi saptanga yen husbendum koda romma naraiya saptanga. really good tast and crispy
Raihana
நன்றி ஹசீனா..,
வ அலைக்கும் சலாம் ஹசீனா...,நான் நலம் நீங்கள் நலமா..?
தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.
பார்க்க மட்டும் இல்லை டேஸ்ட்டும் நல்லா இருக்கும்.
வாழ்த்துக்களுக்கும்,கருத்துக்கும் நன்றி ஹசீனா...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
ஹாய் ரம்யா..,
ஹாய் ரம்யா...,நலமா...?
ம்ம்ம்... வீட்டுக்கு வாங்க சுட சுட செய்து தருகிறேன்.
கருத்துக்கு நன்றி.:-)))
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி சுஸ்ரீ...,
ஹாய் சுஸ்ரீ...,நலமா..?
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
இதே முறையில் வெறும் உருளை,கேரட்,பச்சைபட்டாணி போட்டும் செய்வேன்.
இந்த இரண்டு முறையுமே நிச்சயம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க சரியா...
நன்றி.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி நித்யா...,
ஹாய் நித்யா...,
முடிந்த போது செய்து பார்த்து சுவைத்து விட்டு சொல்லுங்க.
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி ரேவதி...,
ஹாய் ரேவதி...,
நல்ல க்ரிஸ்பியாக இருக்கும்.
முடிந்த போது செய்துபார்த்துட்டு சொல்லுங்க சரியா...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி ஷாகியா..,
வ அலைக்கும் சலாம் ஷாகியா...,
நாங்கள் எல்லோரும் நலமாக உள்ளோம்.நீங்கள் எல்லோரும் நலமா...?
செய்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிகவும் நன்றிமா..
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி நஸ்ரின்..
வ அலைக்கும் சலாம் நஸ்ரின்...
பேசி நாளாச்சு...நான் நலம்...நீங்கள் நலமா..?
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி மா...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி ஃபர்கத்
ஹாய் ஃபர்கத்...,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி சுமதி...,
ஹாய் சுமதி நான் நலம்.நீங்கள் நலமா...?
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி ஆசியா அக்கா..,
சலாம் ஆசியா அக்கா...,
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
உங்கள் ஐடியா படி ஒரு முறை செய்து பார்க்கிறேன்.
தங்ஹ்கள் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி ஃபிர்தவ்ஸ்
வ அலைக்கும் சலாம் ஃபிர்தவ்ஸ்...
செய்து பார்த்தாச்சா.... பரவாயில்லையே...
குழந்தைகளுக்கும்,கணவருக்கும் பிடித்துவிட்டது என்றாலே பெரிய விஷயம்தான்.
மிக்க மகிழ்ச்சி.இந்த சந்தோஷத்தை என்னோடு வந்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி மா...
என்றும் நபுடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி ஃபாத்தி அக்கா..,
வ அலைக்கும் சலாம் ஃபாத்தி அக்கா..,
நாங்கள் அனைவரும் நலம் அக்கா... தாங்களும் வீட்டில் அனைவரும் நலமா அக்கா...
தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி அக்கா...
கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்சரா
சூப்பரான போண்டா,பாக்கும்போதே சாப்பிட தூண்டுதுப்பா வாழ்த்துக்கள்....
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நன்றி ஸ்வர்ணா..,
ஹாய் ஸ்வர்ணா நலமாக இருக்கின்றீர்களா...?
உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்சரா
அப்சரா சிக்கன் போண்டா சூப்பரா இருக்கு,நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் .
நன்றி கல்பனா..,
ஹாய் கல்பனா...,
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி பா...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
ஹாய் அப்சரா,
ஹாய் அப்சரா,
நான் நலம். நீங்க, பசங்க எல்லாம் எப்படி இருக்கிங்க?
நேற்று இரவு டின்னருக்கு உங்க ரெஸிப்பிபடி ஸ்டஃபிங் செய்தேன். டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது. உருளை கிழங்குடன் சிக்கன் போட்டு செய்வது இதுவே முதல்முறை! ஸ்டஃபிங்கை பெரிய ரவுண்டு ஷேப்பில் தட்டி, தவாவில் வெறும் சில நிமிடங்களுக்கு சுட்டெடுத்து, சான்ட்விச் பன்னின் நடுவில் வைத்து சாப்பிட கொடுத்தேன். வீட்டில் எல்லாருக்கும், முக்கியமா என் பெண்ணுக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அருமையான உங்க குறிப்புக்கு மிக்க நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
சிக்கன், பிரட் போண்டா
அப்சரா நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
அப்சரா
அப்சரா... இரண்டு வகையான குறிப்பு... இரண்டுமே அருமை. சிக்கன் எப்படி செய்ய சொன்னாலும் செய்து சாப்பிடுவேன். வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி சுஸ்ரீ...,
ஹாய் சுஸ்ரீ நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம்.
நீங்களும்,வீட்டில் அனைவரும் நலம்தானே...?
ஆஹா என் ரெஸிபியை பன்னில் ஸ்டஃப் செய்து கொடுத்தீர்களா..?
பேஸ் பேஸ்... நல்ல ஐடியா... குழந்தைக்கு பிடித்திருந்ததே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது....
இந்த குறிப்பை செய்து பார்த்ததோடு இல்லாமல் இந்த சந்தோஷத்தை என்னோடு வந்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சுஸ்ரீ...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி லாவண்யா...,
ஹாய் லாவண்யா..., நலமா...?
தங்கள் கருத்துக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி லாவண்யா.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி வனி...,
ஹாய் வனி, நலமாக் இருக்கின்றீர்களா..?
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
தங்கள் கருத்திற்க்கும்,வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி வனி...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.