அவல் உப்மா

தேதி: March 4, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

கெட்டி அவல்-- ஒரு கப்
வெங்காயம்-- ஒன்று
உருளைக்கிழங்கு-- ஒன்று
ஜீரகம்-- ஒரு டீஸ்பூன்
மஞ்சப்பொடி-- அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய்-- 2
எலுமிச்சம்பழம்-- பாதி மூடி
கொத்துமல்லி-- சிறிதளவு
உப்பு-- தேவையான அளவு
எண்ணை-- ஒரு கரண்டி


 

அவலை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி ஜீரகம், மிளகாய் மஞ்சபொடி தாளிக்கவும்.
ஊற வைத்திருக்கும் அவலைச் சேர்த்து கைவிடாமல் 5 நிமிடங்களுக்கு கிளறவும்.
நன்கு வெந்ததும் உப்பு எலுமிச்சம்பழம் சேர்த்து கிளறி மேலாக கொத்துமல்லி தூவி இறக்கவும்.


அவல் மிகவும் சீக்கிரமே ஜீரணம் ஆகும் உணவாகும்.எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவாகும்.

மேலும் சில குறிப்புகள்