அவசரம்.....ப்ளீஸ் ஹெல்ப்....

எனக்கு டெலிவரி இன் பொது என் அம்மா US வந்தார்கள்,Sep 28th 2010௦.Jan 23rd 2011 இந்திய திரும்ப போய்விட்டர்கள். 1 மாத இடைவெளியில் மறுபடியும் என் அம்மா US வரலாமா? Port of entry இல நிறைய கேள்விகள் கேட்பார்கள் என்று கேள்வி பட்டேன்....அவரிடம் B2 multiple entry விசா இருக்கிறது.இப்பொது இன்னும் ஒரு வாரத்தில் நான் வேளைக்கு போக வேண்டும் 5 மாத குழந்தையை daycare இல விட மனம் இல்லை. daycare இல நன்றாக கவனித்து கொள்வார்களா?தயவு செய்து எனக்கு உதவுங்கள்...........ப்ளீஸ்....

B2 விசா என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். அது குறுகிய கால அவகசிதிர்க்கு மட்டும் தான். ஏற்கனவே உங்கள் அம்மா நிறைய நாள் இருந்திருகிறார்கள். அதனால் கேள்வி எழ தான் செய்யும். அதுவும் இல்லாமல் நீங்கள் குழந்தையை கவனிக்க என்றால் மறுத்துவிட்டாலும் விடுவார்கள்...ஏனென்றால் அவர்கள் கணிப்பு படி குழந்தையை கவனிக்க உறவினர்கள் தான் வேண்டும் என்பதில்லை நானி (nanny) கூட போதும். உங்களுக்கு தெரிந்த இந்தியர்கள் யாரவது டே கேர் வைத்திருந்தால் விசாரித்து பார்க்கவும். அங்கு நன்றாக தான் பார்த்துக் கொள்வார்கள். இல்லை உங்களால் முடியும் என்றால் கொஞ்சம் காலம் அவகாசத்திற்கு பிறகு வேலைக்கு செல்லலாம். குழந்தைக்கு ஒரு வயது நிரம்பிவிட்டால் கொஞ்சம் பரவாயில்லை. என் தனிப்பட்ட கருத்து என்வென்றால் குழந்தைக்கு ஒரு இரண்டு வயது ஆகு வரையாவது நாம் அவர்கள் கூட இருந்து நல்லது கேட்டது சொல்லி கொடுக்க வேண்டும். அவர்களின் அந்த பருவத்தை நாம் கூட இருந்து அனுபவிக்கனும். இது என் சொந்த கருத்து தான்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

http://www.immihelp.com/visitor-visa/tourist-visa-faq.html

இந்த லின்க் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.பாருங்கள்.
B2 Multiple entry-ல் எத்தனை முறை வேண்டுமானாலும் USA வரலாம்.சொந்த விஷயமாக இருக்கும் பட்சத்தில் தகுந்த காரணம் இருந்தால் கண்டிப்பாக வர அனுமதி கிடைக்கும்.

டே கேர் பற்றி,
எனக்கு தெரிந்து 1 1/2 முதல் 2 மாத குழந்தைகளை கூட டே கேரில் விடுகிறார்கள். Minimum age requirement எவ்வளவு என்று விசாரித்துப் பாருங்கள்.டே கேரில் குழந்தைகளை நன்றாகவே பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் விரும்பினால் தாய்ப்பாலை பம்ப் செய்து கொடுத்து குழந்தைக்கு தருமாறும் கேட்கலாம்.

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் Daycareல் விசாரித்து பார்க்கவும்.

நன்றி lavanya...

நேற்று கூட daycare சென்று பார்த்து வந்தோம்...எனக்கு குழந்தையை விட மனம் இல்லை நான் பார்த்த எல்லா 3 daycare இலும் minimum ஒரு குழந்தைகவது cold இருந்தது.. .....

என் அம்மா கிளம்பியதும் என் மாமியாராய் அழைத்து வருவதாக இருந்தோம். ஆனால் அவருக்கு விசா reject ஆனது, அதனால் என் லீவ் extend செய்தேன்....இரண்டாவது முறை apply செய்து மறுபடியும் reject ஆகிவிட்டது. client location இல வேலை பார்ப்பதால், உடனே resign பண்ண ஒத்க்கொள்ளமட்டர்கள். notice period 2 weeks இருந்தே அக வேண்டும். அதனால் தான் அம்மா வை அழைத்து வரலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் என் பயம் என்னவென்றால், ஒரு வேலை போர்ட் ஒப் என்ட்ரி இல் திரும்பி போக சொல்லி விட்டால் என்ன செய்வது என்று, அப்படி POE இல திரும்பி போக சொல்வார்களா?
என் அம்மா இங்கு 1மாதம் தங்கினால் கூட போதும்.....
மிகுந்த குழப்பமாக இருக்கிறது :-(

நன்றி ஹர்ஷா,

நீங்கள் சொல்வது போல 6 weeks குழந்தை கூட டே கேர் இல சேர்த்து கொள்கிறார்கள்...யாரோ ஒருவரிடம் குழந்தை விட்டு செல்ல மனம் வர வில்லை...விசா reject ஆகும் என்று நங்கள் எதிர் பார்கவில்லை...இல்லை என்றால் நான் வேலையே resign பண்ணி இருப்பேன்...இப்பொது என் manager இடம் கேட்டல், notice period,backup resouce என்று இழுக்கிறார்கள் :-(
வேறு வழி இல்லை என்றால் டே கேர் இல தன விட வேண்டும் :(

உங்கள் வீட்டுப் பக்கம் இந்தியன் கடை இருந்தால் நானி தேவை என்று விளம்பரம் குடுங்க. பணம் கொஞ்சம் அதிகமா இருந்தாலும் நம்பிக்கையான ஆளா கிடைப்பார்கள். உங்கள் வீட்டில் வந்து பார்த்துக் கொள்பவர்களாக இருந்தால் இன்னும் நல்லது. இதை விளம்பரத்தில் குறிப்பிடுங்கள்.
வாணி

மேலும் சில பதிவுகள்