கைவினை பகுதி ஸ்பெஷல்

தோழிகளே... புது பகுதியோட வந்திருக்கேன். இதுவரைக்கும் நம்ம கைவினை பகுதியில் பலரும் "அடடா... இதை தான் நானும் செய்து அனுப்பனும்'னு நினைச்சுகிட்டு இருந்தேன், அதுகுள்ள இவங்க செய்துட்டாங்களே..."னு நினைச்சிருப்பீங்க. அந்த மாதிரி நாம என்ன செய்ய நினைச்சுட்டு இருகோம், என்ன இப்போ செய்துட்டு இருக்கோம், என்ன செய்ய கத்துக்க விரும்பறோம்... என்பதை இங்கே சொல்லுங்க. அதை பார்த்தா மற்றவருக்கு அவங்க என்ன செய்யலாம்'னு ஒரு ஐடியா கிடைக்கும்... ஒன்றையே பலர் செய்யாம இருக்க இது உதவும். நீங்க செய்ய கத்துக்க விரும்புறது யாருக்காது தெரிஞ்சாலும் சொல்லி தருவாங்க.

என்னங்க... இந்த யோசனை சரியா???

நானே முதலில் ஆரமிச்சுடறேன்....

இப்போ நான் செய்துகிட்டு இருக்கும் கைவினை பகுதிக்கான வேலைகள்:

1. கிஃப்ட் பாக்ஸ் - முடிச்சுட்டேன்
2. டெடி பொம்மை - பாதி தான் முடிஞ்சிருக்கு
3. காபி பெயிண்டிங் - அடுத்த வகை

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா... ஓடியாங்க.... நீங்க செய்ய நினைக்கிறதை செண்பகா செய்யும் முன் வந்து சொல்லிபோடுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓடி வந்து களைச்சுப் போய்ட்டேன். ஒரு காஃபி ப்ளீஸ். ;) பெய்ன்ட் பண்ண வச்சு இருக்கிறதுக்கு சக்கரை போட்டுக் குடுத்தாலும் ஓகே. ம்... இது எனக்கே எனக்குன்னு காலை வார ஆரம்பிச்ச த்ரெட் மாதிரி இருக்கே!!! ;)))

நான் ஒன்றுமே செய்யல. விடுமுறை போட்டோஸ் எடிட் பண்ணிட்டு இருக்கேன். ;) செய்ற கைவினை படம் எடுத்தா மட்டும் தான் அறுசுவைக்கு. இல்லாட்டா கடைசிப் படத்தோட 'என் உலகத்துல' எங்காவது வரும். ;)

என்ன வனீ இப்பிடிச் சொல்லிட்டீங்க!!! செண்பகா பண்ணா நான் பண்ணினதுக்கு சரி. அவங்க அழகா ரசனையோட கைவேலை செய்யுற ஆள். (வனியும் தான்) அது போக... ஒரே மாதிரி திங்கிங் யாருக்கு வரும்!! ;) //நீங்க செய்ய நினைக்கிறதை// அது எதுக்கு? நினைச்சா போதாது. செய்கைல வந்தாத்தான் சிறப்பு. என் ஐந்தாண்டுத் திட்டமெல்லாம் சொல்லி மற்றவங்களை மறிக்கப்படாது நான்.

இப்ப கைவசம் இருக்கிற ப்ராஜெக்ட் ஒரு ப்ரோச்... இது வெகு காலமா மனதில் இருந்தது. இங்க.. 'பூசணிக்காய் கார்விங்' கீழ ஹைஷ் எனக்கு ஒரு 'மியூசிகல் சைன் ப்ரோச்' ப்ரசன்ட் பண்ணி இருந்தாங்க இல்லையா? அப்போ வந்த யோசனை. அதை அவங்க ஆல்பத்துல இருந்து டிலீட் பண்ண முன்னாடி பண்ணி முடிக்கணும். சின்னதா வரணும், சோ.. அதே மாதிரி பண்ண முடியல. வேலை பாதில நிக்குது. முடிஞ்சதும் வரும். ஆனா... வெய்ட்டான ஹார்ட்டுக்கும் இதுக்கும் நடுவுல ஒரு காப் இருந்தா நல்லாருக்கும் என்று தோணுது. பேசிக் ஒண்ணுதான், அதான்.

‍- இமா க்றிஸ்

வெஜ்டபிள் கார்விங் பற்றி தெரிஞ்சவங்க செய்து காண்பிக்கலாமே.

க்ரேட் 2 படிக்கிற பிள்ளைக்கு ஸ்கூல் கைவினை கண்காட்சிக்கு என்ன

மாதிரியான கைவினை செய்யலாம்..அது நாம ஐடியா கொடுத்து குழந்தைங்க

போய் அவங்களே பண்ணிகாட்டறமாதிரி எளிதா இருக்கணுமாம்

யாருக்காவது எளிதான வித்யாசமான ரீசைக்கிளிங்க் பொருட்கள் வச்சு (கலர்

டிஸ்யூ,டிஸ்போசபிள் பொருட்கள் )வச்சு பண்ணற மாதிரி சொல்லுங்களேன்

உதவியா இருக்கும்..எனக்கு அதிகம் வராத விஷயம்னா அது முக்கியமா

கைவினைதான்:(

இமாம்மா,வனி மற்றும் தோழிகள் தெரிஞ்சா சொல்லுங்க
அறுசுவையில 7 வயது குழந்தை 20 நிமிஷத்தில பண்ற மாதிரி எளிதான
கைவினை இருந்தாலும் லிங்க் சொல்லுங்க
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இந்த லிங்கில் பாருங்க,குழந்தைக்கு ஈசியா இருக்கிற மாதிரி நீங்க மாத்திகங்க.
http://www.arusuvai.com/tamil/node/6506===c.dfish
http://www.arusuvai.com/tamil/node/14478===papercup bell
http://www.arusuvai.com/tamil/node/14264===papercup angel
http://www.arusuvai.com/tamil/node/14826===papercup flower basket
http://www.arusuvai.com/tamil/node/14089===papercup parachute
http://www.arusuvai.com/tamil/node/12893===flower basket
http://www.arusuvai.com/tamil/node/13581===plastic bottle flower vase

ஹாய் ரீம் மன்னிக்கவும்...கடைசி லிங்க் போட்டு பாத்தா தேவா மேடமோட அழகு குறிப்பு வருது....
நீங்க கொடுக்க நினைத்தது இதுவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்...
http://www.arusuvai.com/tamil/node/13541 - plastic bottle flower vase

ரீம், வெஜிடபிள் கார்விங் ஏற்கனவே சிலது இருக்கு. செண்பகா பண்ணின காரட் வண்ணத்துபூச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். வனிதாவோட அழகான கார்விங் இருக்கு.

இளவரசி, ஏழு வயசு... ஏஞ்சல் வயது. ஒரே வேலையைக் கொடுத்தாலும் இருபது நிமிஷ காலத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு நிலையில் இருப்பார்கள். செய்யவைத்துத் தான் பார்க்க வேண்டும் நீங்கள்.

டிஷ்யூல... பேப்பர் சேவியட்ல ஒரிகாமி எதுவானாலும் செய்யலாம். இங்க ஒரு நாய்க்குட்டி குறிப்பும் ஒரு வாத்து குறிப்பும் இருக்கு. வேற ஏதாவது இருக்கும் சட்டென்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.

பேப்பர் ப்ளேட்ல முகமூடி, பாஸ்கட், தொப்பி, மோபைல் (ஹாங்கிங்), வண்ணத்துப்பூச்சி இப்படி நிறையவே பண்ணலாம்.

கப்களில் இங்க அழகழகா செண்பகா குறிப்புகள் இருக்கு.

கொஞ்சம் நேரம் எடுத்து இங்க இருக்கிற குறிப்புகளைப் பாருங்க. நிறைய இருக்கு.

க்ராஃப்ட் குழந்தைக்குப் பிடிச்சு இருக்கிறது முக்கியம். வீட்ல டைம் பண்ணிப் ப்ராக்டிஸ் பண்ண வைங்க. எந்த ஸ்டெப் எப்படிப் பண்ணினா நேரம் மிச்சம் பிடிக்கலாம் என்று புரியும்.

//சொல்லுங்க// என்கிறீங்க. ;) நேர்ல பேசுறது சுகம். இப்பிடி எழுத்துல விபரிக்கிறது எனக்குச் சரிவராது. எப்போ வேணும்? வேற என்னமாதிரி உங்களுக்கு ஐடியா இருந்துது? வித்தியாசமா வேணும் என்கிறீங்க. மிகவும் அவசரமாக இருந்தால் ஆன்லைன்ல டிஸ்கஸ் பண்ணலாம்.

‍- இமா க்றிஸ்

இமா... உங்களுக்கே உங்களுக்கு தான் ;)

இமா //இல்லாட்டா கடைசிப் படத்தோட 'என் உலகத்துல' எங்காவது வரும். ;) // - இதெல்லாம் நாங்க ஒத்துக்க மாட்டோம்... எங்களுக்கும் சொல்லி தந்தே ஆகனும்.

பாருங்க இளவரசி கேட்டது ஐடியாவா கொட்டறீங்க... நமக்கு தலையில் முடியும் இல்லை, மூலையும் இல்லை... எதுவுமே தோண மாட்டங்குதே ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரீம்... கரக்டு, நம்ம செண்பகா இமா கொடுத்த கார்விங்ஸ் அறுசுவையில் இருக்கு. இல்லன்னாலும் செண்பகா'கு ஒரு மெயிலை தட்டுங்க, வெஜிடபிள் கார்விங் உடனே சொல்லுங்கன்னு. வந்துடும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்