மகளிர் தினம் வழி சொல்லுங்கள்

தோழிகளே என் மனசில் ரொம்ப நாளாக இருக்கும் ஒரு ஆசை அதை யாரிடம் சொல்லுவது
என்று தெரியவில்லை.இந்த மகளிர் தினத்தன்றாவது உங்களிடம் கேட்டு உங்கள் ஆலோசனை பெற நினைத்து
இந்த இழையை ஆரம்பிக்கிரேன்.பிறக்கும் போது பெண்கள் ஒரு இடம் கல்யாணத்துக்கு பிறகு ஒரு இடம்.அதனால்
அவர்களால் அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றி கொள்ளவே தன் வாழ் நாள் சரியாக உள்ள்து.
அவர்களுக்கென்ரு ஒரு கனவு லட்சியம் எல்லாம் வெரும் மனதலவில் மட்டுமே இருக்கும்.அதற்கு ஒரு சரியான வழிகாட்டி
வரும் வரை அது வெரும் கனவு மட்டுமே.அந்த வழிகாட்டியாக தான் நான் அருசுவையை நாடி வந்துள்ளேன்.
இங்கு இருக்கும் தோழிகள் அனைவரும் வெளீனாட்டில் இருப்பவர்தான்.இங்கு சென்னையில் இருக்கும் தோழிகளுக்கு
நிரைய உதவி குழு இருக்கிரது அவர்கள் கனவுலை நிரைவேற்ற அவர்களால் முடிகிரது.என் போன்ற எத்தனையோ
தோழிகள் கைதிறன் உள்ளவர்களாய் உள்ளனர்.ஆனால் அவை வெரும் தன் வீட்டை அழகுபடுத்த மட்டுமே
பயன் படுகிரது.நம் திறமையை அனைவருகும் பயன் படும் படி செய்து அதனால் பணம் ஈட்ட வழி
தெரிந்தவர்கள் சொல்லவும்.மகளிர்க்கு வருமானம் முக்கியம்.அதனால்தான் நான் இந்த இழை ஆரம்பித்தென்.
நான் தவராக ஏதேனும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

ஏன் பா நான் எதாவது தப்பா கேட்டேனா யாருமே பதிவு போடல

ஹாய் தோழி, //மகளிர்க்கு வருமானம் முக்கியம்.அதனால்தான் நான் இந்த இழை ஆரம்பித்தேன்.//இதற்க்கு நிறைய இழை அறுசுவையில் இருக்கு.வீடில் இருந்தபடியே வேலை வாய்ப்பு என்று . நீங்கள் தேடி பயன் அடையுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன்.;)அதனால் தான் யாரும் இங்கு வரவில்லை

உன்னை போல பிறரையும் நேசி.

ராதிகா, நீங்கள் எதுவும் தவறாக கேட்கவில்லை. எதற்கு மன்னிப்பெல்லாம். முதலில் இதை சொல்லுங்கள். டெலிவரிக்கு முன்பு உங்களோடு பேசியது, அதோ இப்போது பேசுகிறேன். எப்படியிருக்கீங்க? உங்க குட்டிங்க எப்படி இருக்காங்க? நீங்கள் சென்னையிலேயே தொடர்ந்து இருப்பீர்களானால் அங்கேயே உங்கள் கைவேலை திறனை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம். வெளிநாட்டுக்கு போவீர்கள் என்றால் அந்த இடம் குறித்த நிலவரங்கள் எனக்கு தெரியாது. தெரிந்த தோழிகள் உங்களுக்கு வழி காட்டுவார்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்