காஜு கசாட்டா

தேதி: March 8, 2011

பரிமாறும் அளவு: 1/4 கிலோ

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பிஸ்தா - 300 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
லிக்விட் குளுகோஸ் - 100 கிராம்
முந்திரி - 300 கிராம்
பச்சை கலர் - ஒரு சிட்டிகை
குங்குமப் பூ - 2 சிட்டிகை


 

பிஸ்தாவை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
மிதமான தீயில் சர்க்கரை மற்றும் பிஸ்தா அரவை, இரண்டையும் 1 ஸ்பூன் நெய் விட்டு லேசாக கிளறவும்.
கெட்டிபதம் வந்தவுடன் தனியாக எடுத்து ஆறவிடவும்.
முந்திரியை கெட்டியாக கரகரப்பாக அரைத்து, அதனுடன் கலர், குங்குமப்பூ, குளுகோஸ் சேர்த்து கலக்கவும்.
சிறிய உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் இந்த பிஸ்தாஸர்க்கரை கலவையை பூசிவிடவும்.
பரிமாறும் பொழுது ரோஜா இதழ்களை மேலே வைத்து பரிமாறினால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.


லிக்விட் குளுகோச் தற்பொழுது எல்லா கடைகளிலும் கிடைக்கும். அது ஜெல் பொல இருக்கும். எளீதில் வேகமாக செய்யக் கூடிய இனிப்பு, பிஸ்தாவிற்கு பதில் பாதாம் கூட சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்