வெர்டிகோ(vertigo) ப்ரச்சனை உள்ளவர்கள் யாரேனும் இங்கு உண்டா?அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை செய்தீர்கள்..எந்த சிகிச்சையில் நல்ல பலன் தெரிந்தது என்று கூறினால் உதவியாக இருக்கும்
காதில் பேலேன்ஸ் இல்லாமல் தலைசுற்றல் வாந்தி போன்ற ப்ரச்சனைகள் வெர்டிகோவால் இருக்கும்..இது குறித்து யாருக்காவது அனுபவம் இருந்தால் தெரியப்படுத்தவும் ..நன்றி
Vertigo guideline
To karthikeyini Mam, Thank you mam, your guidelines are very usefull for this problem.
Regards,
Ragavan
வெர்டிகோ
நாட்டு மருந்துக் கடைகளில் அரக்குத் தைலம் கிடைக்கும். அதைத் தொடர்ந்து தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். குளித்தபின் தலைமுடி காய்ந்தபிறகு எண்ணெய்க்குப் பதில் அரக்குத் தைலத்தை தலைக்குத் தடவி முடி வாரலாம்.
எனக்கு இந்த பிரச்சனை இரண்டு வாரங்களுக்குமுன் இருந்தது. அரக்குத் தைலத்தைத் தொடர்ந்து உபயோகப்படுத்தினேன். மூன்று நாட்களில் தீர்வு கிடைத்தது. இருப்பினும் தொடர்ந்து தடவி வருகிறேன்.
vertigo treatment
எனக்கு இந்த தொல்ல உள்ளது. My age is 67years
காதிலுள்ள ஒரு நரம்பு பாதிக்கபடுவதால் இந்த தொல்லை ஏற்படுகிறது. எனக்கு இந்த தொல்ல உள்ளது. தோள்பட்டைக்கு உடல் பயிற்சி அளிக்க வேண்டும். தலையணை குறைந்த உயரத்தில் இருக்க வேண்டும். ஒரு முறையை பயன் படுத்திய எண்ணையை மறுபடியும் பயன் படுத்துக் கூடாது.
சிரப்ப பயன்படுத்தப்படும் குளிர் பானங்களை அருந்தக் கூடாது.
அலோபதி மருந்துதான் பயன் படுத்துகிறேன். தொடர்ந்து பயன் படுத்த வேண்டியுள்ளது. இரவில் பால் அருந்த வேண்டும். இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
எவ்வளவு ஜாக்கிறதையாக இருந்தாலும் 6 மாதத்திற்கு ஒரு முறை தொல்லை படுத்துகிறது.
Information is wealth
வெர்டிகோ(vertigo) problem
Vertin tablet controls temporarily. If we stop vertin, problem starts back. Nerologist advice for some exercise to neck. Donot get any positive results dueo to exercise still.
வெர்டிகொ
வெர்டிகொ__ இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மிகத் திறமையான காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் சொன்னது.
காதில் உள்ள எண்ணைப் பசை மிகவும் குறைந்து போய் ஏறக்குறைய
வறண்டு காய்ந்து போனால் நம் உடம்பின் பூமி மீதான சமனிலைத்தன்மை
ஏறக்குறைய இல்லாமல் போகும்.அதன் காரணமாக நீங்கள் கூறிய அனைத்துமே
உண்டாகின்றது, காதின் எண்ணைப்பசைக்கும் உடம்பின் சமனிலைத்தன்மைக்கும்
என்ன தொடர்பு என்று தெரியவில்லை என்று அன்று கூறினார். அப்போது
அதைப் பெரிதாக நான் நினைக்க வில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கே
அப்படி ஒரு தலைசுற்றல் வாந்தி மயக்கம் எல்லாம் உண்டாயிற்று.
பொதுவாக முன் காலத்தில் வாரா வாரம் தலைக்கு எண்ணை தேய்த்துக்
குளிக்கும்போது கட்டாயம் காதில் நல்லெண்ணை மூன்று சொட்டுக்களாவது
விடுவார்கள், இதுவும் அந்த அலோபதி மருத்துவர் சொன்னதும் நினைவுக்குவர
உடனடியாக இரண்டு காதுகளிலும் கையில் கிடைத்த தேங்காய் எண்ணையை
இரண்டு இரண்டு சொட்டுக்கள் விட்டு அது காதில் நன்றாக சோர்ந்தவுடன்
அடுத்த இரண்டு நாட்களிலேயே அந்தக் குறைகள் நீங்கி விட்டன. அதன் பின் பலகாரணங்களுக்காக காதுவலி, காதில் எறும்பு நுழைந்தது, என்று இப்படிப்
பலகாரணங்கள் அடிக்கடி காதில் எண்ணை விடவேண்டி இருந்த்தால் மீண்டும்
அந்த தலைசுற்றல் தொடர்பான தொல்லைகள் என்னைத் தொடரவில்லை.
நீங்களும் முயன்று பாருங்கள், காசா பணமா இரண்டு காதுகளுக்கும் சேர்த்து
ஒரு ஆறு சொட்டு நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.